அரசியல் செய்தி

தமிழ்நாடு

பிழைக்க வரவில்லை உழைக்க வந்துள்ளோம் : விஜயகாந்த் மகன் உருக்கம்

Added : மார் 30, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
விருத்தாசலம் : 'இலவசங்களை நம்பாதீர்கள், கொரோனா காலத்தில் ஒருத்தர் கூட மக்களுக்கு எதுவும் செய்யவில்லை' என விருத்தாசலத்தில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பேசினார்.கடலுார் மாவட்டம், விருத்தாசலம் சட்டசபை தொகுதியில் போட்டியிடும், தே.மு.தி.க., வேட்பாளரான அவரது தாய் பிரேமலதாவை ஆதரித்து, விஜய பிரபாகரன் பேசியதாவது:பிறந்த வீடு, புகுந்த வீடு என்பார்கள். ஆனால், விருத்தாசலம்
D.M.D.K,DMDK,Vijayakanth,தே.மு.தி.க,விஜயகாந்த்



விருத்தாசலம் : 'இலவசங்களை நம்பாதீர்கள், கொரோனா காலத்தில் ஒருத்தர் கூட மக்களுக்கு எதுவும் செய்யவில்லை' என விருத்தாசலத்தில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பேசினார்.

கடலுார் மாவட்டம், விருத்தாசலம் சட்டசபை தொகுதியில் போட்டியிடும், தே.மு.தி.க., வேட்பாளரான அவரது தாய் பிரேமலதாவை ஆதரித்து, விஜய பிரபாகரன் பேசியதாவது:
பிறந்த வீடு, புகுந்த வீடு என்பார்கள். ஆனால், விருத்தாசலம் எங்களுக்கு வெற்றி வீடு. 2006ல் என் அப்பாவுக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்து, அரசியல் மாற்றம் கொடுத்தீர்கள்.அதுபோல, லேடி கேப்டனுக்கு (பிரமேலதா) இந்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை தர வேண்டும். முரசு சின்னத்திற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்து வெற்றியைத் தர வேண்டும்.
எங்க அம்மா (பிரேமலதா) சொன்ன பிறகே, விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிப்பது குறித்து மீடியா, நியூஸ், ஐ.ஏ.எஸ்., ஆபீசர்ஸ் எல்லாரும் பேசத் துவங்கினர். வெற்றி பெற்றதும், விருத்தாசலத்தை மாவட்டமாக மாற்றுவார்.விஜயகாந்த் வெற்றிக்கு முன், தொகுதியில் அதிக பிரச்னைகள் இருந்தன. துளசி வாசம் மாறினாலும், தவசி வார்த்தை மாறாது என்பதுபோல, சொந்த செலவில் டேங்க்கர் லாரி மூலம் தண்ணீர் கொடுத்தார்.

இளைஞனாக நான் வந்து கேட்கிறேன். உங்க வீட்டு வேலைக்காரனாக என்னை யூஸ் பண்ணிக் கொள்ளுங்கள். எனது அப்பா கனவை நிறைவேற்றவே நான் வந்துள்ளேன். இந்த தொகுதி மக்களை தங்கத்தட்டில் வைத்து தாலாட்ட வேண்டும் என என் அப்பா சொல்வார்.அதற்காகவே எனது தந்தை, தாயுடன் நானும் வந்துள்ளேன்.

எங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டியது உங்கள் கடமை. நாங்கள் குடும்பத்தோடு பிழைக்க வரவில்லை. மக்களுக்காக உழைக்க வந்துள்ளோம்.இலவசத்தை நம்பாதீர்கள். கொரோனா காலத்தில் ஒருத்தர் கூட, மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.

இவ்வாறு விஜய பிரபாகரன் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
30-மார்-202121:26:38 IST Report Abuse
இறைவனுக்கே இறைவன் மஹாவிஷ்ணு கருணாவிற்க்கு ஒரு சுட்டாலின்.. கேப்டனுக்கு நீ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X