பெண்களை அவமானபடுத்துவதே திமுக - காங்., கலாசாரம்: பிரதமர்| Dinamalar

பெண்களை அவமானபடுத்துவதே திமுக - காங்., கலாசாரம்: பிரதமர்

Updated : மார் 30, 2021 | Added : மார் 30, 2021 | கருத்துகள் (57) | |
தாராபுரம்: பெண்களை அவமானப்படுத்துவதே தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியின் கலாசாரமாக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இக்கூட்டத்தில், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், தமாகா தலைவர் வாசன், தமிழக பா.ஜ., தலைவர் முருகன் உள்ளிட்டோர் கலந்து
பிரதமர் மோடி, பாஜ, தாராபுரம், காங்கிரஸ், திமுக, பெண்கள்

தாராபுரம்: பெண்களை அவமானப்படுத்துவதே தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியின் கலாசாரமாக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இக்கூட்டத்தில், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், தமாகா தலைவர் வாசன், தமிழக பா.ஜ., தலைவர் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு, ‛வேல்' ஐ பரிசாக தமிழக பா.ஜ., தலைவர் முருகன் வழங்கினார்.


latest tamil news


இதனை தொடர்ந்து, ‛‛வெற்றிவேல், வீரவேல் என கோஷமிட்டு பிரதமர் மோடி தொடர்ந்து பேசியதாவது: ஐக்கிய நாடுகள் சபையில் உலகின் மிகவும் தொன்மையான மொழியான தமிழில் ஒரு சில வார்த்தைகளில் பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ் கலாசாரத்தை பார்த்து இந்தியா பெருமைப்படுகிறது.தேவேந்திர குல வேளாளர் பிரச்னை


இன்னும் சில நாட்களில் புதிய எம்எல்ஏக்களை தேர்வு செய்ய உள்ளோம். மக்களுக்கு சேவையாற்ற தேசிய ஜனநாயக கூட்டணி உங்கள் ஆதரவை வேண்டி நிற்கிறது. நாங்கள் ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தை அடிப்படையாக வைத்து ஓட்டு கேட்கிறோம். தமிழ்மொழி, கலாசாரத்தை வளர்ப்பதற்காக மருத்துவம், அறிவியலை தாய்மொழியில் படிக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவத்தை தாய்மொழி கல்வியில் அளிக்க முயற்சி செய்கிறோம்.நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காண தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஓட்டு அளியுங்கள். தேவேந்திர குல வேளாளர் பிரச்னையை தீர்த்து வைத்துள்ளோம்
ஒரு பக்கம், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வளர்ச்சி திட்டமே முக்கிய கொள்கையாக உள்ளது.மறுபுறுமும், காங்கிரஸ் திமுக கூட்டணிக்கு வாரிசு அரசியலே அவர்களின் முக்கிய திட்டமாக வைத்து உள்ளது. அக்கட்சி கூட்டணி தலைவர்களின் பேச்சில், அவர்களின் செயல்திட்டமோ , நேர்மறையான செய்திகளோ இல்லை. அடுத்தவர்களை அவமானபடுத்துகின்ற, பொய் கூறுபவையாக உள்ளன. காங்., திமுக பெண்களுக்கு எதிராக 2 ஜி என்ற ஏவுகணையை துவக்கியுள்ளது. இது பெண்களை இழிவுபடுத்துவது. அக்கட்சி தலைவர்கள், இதனையே நோக்கமாக வைத்துள்ளனர்.


latest tamil newsதாராபுரம் ஆண்கள், பெண்கள் அனைவரும் தங்களது நேர்மையை சமரசம் செய்ததுஇல்லை. அநீதிக்கு எதிராக போராடுகிறீர்கள். பெண்களை இழிவுபடுத்துவதை மக்கள் பார்த்து கொண்டிருக்க மாட்டார்கள் என்பதை திமுக, காங்கிரசுக்கு சொல்லி கொள்ள விரும்புகிறேன். தங்கள் நிர்வாகிகளை கட்டுப்பாட்டுடன் பேச திமுக காங்கிரஸ் அறிவுறுத்த வேண்டும்.தி.மு.க., தடுக்கவில்லை


திமுக காங்கிரஸ் கூட்டணியினர், முதல்வர் தாயாரை அவமானமாக பேசி உள்ளனர்.இவர்கள் ஆட்சிக்கு வந்தால், பெண்களை இன்னும் இழிவுபடுத்துவார்கள். பெண்களுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ள நிர்வாகிகளை எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டித்து உள்ளனரா ?

பெண்களை அவமானப்படுத்துவதே திமுக காங்., கட்சிகளின் கலாசாரம். சில நாட்களுக்கு முன்னர், திண்டுக்கல் லியோனி, பெண்கள் அறுவறுக்கத்தக்க வகையில் பேசினார். அவரை திமுக தடுக்கவில்லை. திமுக.,வில் மூத்த நிர்வாகிகளை ஓரங்கட்டியுள்ள இளவரசர்பெண்களை பற்றி அறுவறுக்கத்தக்க வகையில் பேசினார். அவரையும் திமுக தடுக்கவில்லை. ஜெயலலிதாவை, சட்டசபையில் திமுக தலைவர்கள் எப்படி நடத்தினார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது.

பெண்கள் வளர்ச்சிக்கு திமுக காங்கிரஸ் உறுதுணையாக இருந்தது இல்லை. அவர்களின் ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது. அக்கட்சி நிர்வாகிகள், தலைவர்கள், அமைதிக்கு எதிராக இருந்துள்ளனர்.இவர்களின் கூட்டாளியான, திரிணமுல் காங்கிஸ் கட்சியினர் மே.வங்கத்தில் தாக்கியதில் மூதாட்டி உயிரிழந்துள்ளார். இவர்கள் கூட்டணி, நாட்டு பெண்களுக்கு எதிரானதாக இருக்கிறது.

சமுதாய வளர்ச்சி என்பது பெண்கள் வளர்ச்சி இல்லாமல் இல்லை என்பதில் உறுதியாக உள்ளோம். இதனால், அனைத்து திட்டங்களும் பெண்களை வலிமைபடுத்துவதாக அமைத்துள்ளோம். புதிதாக எரிவாயு இணைப்புகள் தமிழகத்தில் மட்டும் 32 லட்சம் பெண்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

அனைவருக்கும் வீடு திட்டத்தில், கிராமப்புற 3 லட்சம் வீடுகள் கட்டி முடிப்பு நகர் பகுதியில் 3.8 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இந்த வீடுகள் பெண்கள் பெயரில் இருக்க ஊக்கப்படுத்துகிறோம். அவர்களின் மரியாதையை லட்சியத்தை ஊக்கப்படுத்தும். மகளிர் பேறுகால உதவி திட்டத்தின் கீழ் 10 லட்சம் பெண்கள் பயன்பெற்றுள்ளனர்.


தொழில் வளர்ச்சிக்கு உறுதுணை


உங்களின் தொழிலை வளர்க்க வேண்டும்; துவக்க வேண்டும் என்ற உத்வேகத்திற்காக கொங்கு பகுதி மக்களை பாராட்டுகிறேன். கொங்கு பகுதி மக்கள் நாட்டிற்கு மரியாதை கொடுக்கிறீர்கள், செல்வத்தை கொடுக்கிறீர்கள். உங்கள் வியாபார நேர்த்தியை மக்கள் அறிவார்கள். நீங்கள் கருணையும் கொண்டவர்கள். கடந்த ஆண்டு மக்களுக்கு எப்படி உதவி செய்தீர்கள் என்பதை பார்த்தோம்.நானும், மத்திய அரசும் இப்பகுதி வியாபார தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்போம் என தெரிவித்து கொள்கிறேன்.

எளிதாக தொழில் துவங்கும் உலக வங்கி பட்டியலில் நாம் உயர்ந்துள்ளோம்.பல சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம். உற்பத்தி சார்ந்த திட்டங்கள் டிச., துவங்கப்பட்டது. ராணுவ தளவாட உற்பத்தி திட்டம் இப்பகுதி வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட ராணுவ கவச வாகனத்தை வட இந்தியாவில் பாதுகாப்பு பணிக்கு அர்ப்பணித்தேன். தரமான பொம்மை தயாரிக்கும் தொழிற்சாலை இங்கு அமைய உள்ளது. இப்பகுதி உலக தரம் வாய்ந்த பொம்மை உற்பத்தி செய்யும் மையமாக மாற உள்ளது.

சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் நமது நாட்டிற்கு முதுகெலும்பு போன்றவை.நிறைய பேர் தொழில் செய்ய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 3.6 லட்சம் சிறு குறு தொழில் நிறுவனங்கள், 14 ஆயிரம் கோடி வட்டி தள்ளுபடி திட்டத்தில் பயன்பெற்றுள்ளன. 8.5 சதவீத தொழில் நிறுவனங்கள் கடன் உதவி திட்டத்தின் கீழ் பயன்பெற்றுள்ளனர். காங்கிரஸ் மற்றும் திமுகவின் ஊழல் கண்கள், தொழில் வளர்வதை அனுமதிக்காது. கடந்த காலங்களில், அவர்களது ஆட்சியில் செய்ததை போன்று, மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தொழில் நிறுவனங்களிடம், அக்கட்சி நிர்வாகிகள் பணம் வசூலிப்பார்கள். அவர்கள் ஆட்சிகாலத்தில் மின்வெட்டு நிலவியது. தொழில் பாதிக்கப்பட்டது.விவசாயிகளை காக்க முயற்சி


விவசாயிகளுக்கு மரியாதை கொடுப்பது திருக்குறளின் மையக்கருத்து. விவசாயம் செய்ய முடியாத மற்றபவர்களுக்காகவும் விவசாயி தொடர்ச்சியாக உழைக்கிறான் என திருக்குறள் கூறுகிறது. விவசாயம் சீர்திருத்தம் வேண்டி நிற்கிறது. சிறு விவசாயிகளை நோக்கி தேஜ கூட்டணி கொள்கை உள்ளது. இடைத்தரகர்களிடம் இருந்து சிறு விவசாயிகளை காக்க முயற்சி செய்கிறோம்.

விவசாயிகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக பல திட்டங்கள் அறிவித்துள்ளோம். விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு நிதி யுதவி திட்டம் அறிவித்துள்ளோம். நமது விவசாயத்துறை நீர் பற்றாக்குறை பிரச்னையை சந்தித்து வந்துள்ளது. நீர் ஆதாரங்களுக்காக பல் வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. 16 லட்சம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது, இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X