பொய் சொல்கிறார் கோயல்: பினராயி விஜயன் பதிலடி!

Added : மார் 31, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
காசர்கோடு :''கன்னியாஸ்திரிகள் தாக்கப்படவில்லை என, ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் கூறுவது அப்பட்டமான பொய்,'' என, கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். உத்தர பிரதேசத்தின் ஜான்சி ரயில் நிலையத்தில், கேரளாவைச் சேர்ந்த, இரு கன்னியாஸ்திரிகள் தாக்கப்பட்டதாக, கேரள முதல்வரும், மார்க்சிஸ்ட் மூத்த தலைவருமான பினராயி விஜயன் குற்றஞ்சாட்டியிருந்தார். ஆனால்,
Attack on Nuns, Piyush Goyal, Pinarayi Vijayan, கோயல், பினராயி விஜயன், பதிலடி

காசர்கோடு :''கன்னியாஸ்திரிகள் தாக்கப்படவில்லை என, ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் கூறுவது அப்பட்டமான பொய்,'' என, கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

உத்தர பிரதேசத்தின் ஜான்சி ரயில் நிலையத்தில், கேரளாவைச் சேர்ந்த, இரு கன்னியாஸ்திரிகள் தாக்கப்பட்டதாக, கேரள முதல்வரும், மார்க்சிஸ்ட் மூத்த தலைவருமான பினராயி விஜயன் குற்றஞ்சாட்டியிருந்தார். ஆனால், கன்னியாஸ்திரிகள் தாக்கப்படவில்லை என்றும், பினராயி விஜயன் பொய் பேசுவதாகவும், ரயில்வே அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான பியுஷ் கோயல், நேற்று முன் தினம் தெரிவித்திருந்தார்.


latest tamil news


இந்நிலையில் நேற்று, கேரள மாநிலம் காசர்கோட்டில், பினராயி விஜயன் பேசியதாவது:கன்னியாஸ்திரிகள் தாக்கப்படவில்லை என, பியுஷ் கோயல் வெட்கமின்றி, அப்பட்டமாக பொய் பேசியுள்ளார். கன்னியாஸ்திரிகள் என்பதற்காகவே, அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் ஆட்கள், கன்னியாஸ்திரிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அதை மறுத்து, கன்னியாஸ்திரிகளின் ஆவணங்களை சரிபார்த்த பின், பயணத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டதாக பியுஷ் கோயல் கூறியுள்ளார். தாக்குதலை நியாயப்படுத்தும் வகையில், அவர் பேசியிருப்பது அவமானகரமானது. குற்றவாளிகளை பாதுகாக்கும் செயல்; இது, ஆர்.எஸ்.எஸ்., சித்தாந்தத்தை, மத்திய அரசு அமல்படுத்துகிறது என்பதற்கு சான்று. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - Nellai,இந்தியா
31-மார்-202111:37:40 IST Report Abuse
sankar முதல்வர் பொய் சொல்கிறார்
Rate this:
Cancel
31-மார்-202110:22:17 IST Report Abuse
ஸாயிப்ரியா கலப்பில்லாத தங்கம் பொய்யே அறியாதவர். நம்ப முயற்சி செய்கிறோம்
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா
31-மார்-202109:57:54 IST Report Abuse
தமிழ்வேள் பிராங்கோ முல்லாக்கல்லுக்கு வெளிப்படையாக நிபந்தனையற்ற ஆதரவு அளித்து, பாலியல் வன்முறைகளை மதத்தின் பெயரால் ஊக்குவிப்பது பினராயி விஜயனின் கம்யூனிஸ்ட் அரசு ... இவர்கள் எல்லாம் பேசுகிறார்கள் ... ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X