ஈரோடு:சேலம் அரசு ஊழியரிடம், 2.55 கோடி ரூபாய் மோசடி செய்தவரை, ஈரோடு குற்றப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், ஓமலுார், முத்துநாயக்கன்பட்டி, ஈஸ்வரன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்கணேஷ், 38; அரசு லேப் டெக்னீஷியன். இவர், ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப் பிரிவில் அளித்த புகார்:
கோவை, மேட்டுப்பாளையம், புளியம்பட்டியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜன், 39; ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த, சிக்கரசம்பாளையத்தில், 'கே.எம்.ஜி., டிரெடிங் அகாடமி' என்ற பெயரில், ஆன்லைனில் பொருட்களை வாங்கி, விற்கும் நிறுவனம் நடத்தினார். இதில் முதலீடு செய்தால், 5 சதவீத வட்டி, ஒப்பந்த காலம் முடிந்தவுடன், முதலீடு பணம் முழுமையாக கிடைக்கும் என்று அறிவித்தார்.
இதை நம்பி, 2.55 கோடி ரூபாய் முதலீடு செய்தேன். ஆனால், வட்டி, முதலீட்டை திரும்ப தரவில்லை.இவ்வாறு, தெரிவித்திருந்தார்.விசாரணையில் மோசடி உறுதியான நிலையில், ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், கோவிந்தராஜனை தேடி வந்தனர். நேற்று முன்தினம், ஈரோட்டில் அவரை கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE