உதய், லியோனி, ராசா வரிசையில் இடம் பிடித்தார் தயாநிதி

Updated : மார் 31, 2021 | Added : மார் 31, 2021 | கருத்துகள் (112) | |
Advertisement
பட்ட காலில் படும்; கெட்ட குடியே கெடும் என்பார்கள். முதல்வரின் தாய் குறித்து ஆ.ராசா பேசிய ஆபாச பேச்சின் சூடு தணிவதற்குள், அடுத்த ஆபாச பேச்சை அரங்கேற்றி இருக்கிரார் இன்னொரு, தி.மு.க., தலைவர். கிணத்துக்கடவு தொகுதியில் நேற்று முன்தினம், தி.மு.க., வேட்பாளர் பிரபாகரனை ஆதரித்து பிரசாரம் செய்தார் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி. அப்போது அவர் ஆ.ராசாவின் ஆபாச பேச்சை, 'ஓவர்டேக்'
Tamilnadu Elections 2021, DMK, Dayanidhi, தயாநிதி, திமுக

பட்ட காலில் படும்; கெட்ட குடியே கெடும் என்பார்கள். முதல்வரின் தாய் குறித்து ஆ.ராசா பேசிய ஆபாச பேச்சின் சூடு தணிவதற்குள், அடுத்த ஆபாச பேச்சை அரங்கேற்றி இருக்கிரார் இன்னொரு, தி.மு.க., தலைவர்.

கிணத்துக்கடவு தொகுதியில் நேற்று முன்தினம், தி.மு.க., வேட்பாளர் பிரபாகரனை ஆதரித்து பிரசாரம் செய்தார் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி. அப்போது அவர் ஆ.ராசாவின் ஆபாச பேச்சை, 'ஓவர்டேக்' செய்தார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவையும், பிரதமர் நரேந்திர மோடியையும் குறிப்பிட்டு, 'ஒருவர் அம்மாவாம்; இன்னொருத்தர் அப்பாவாம்... இது என்ன உறவு?' என, தயாநிதி கேட்டார்.

இந்த பேச்சு, அ.தி.மு.க., மட்டுமின்றி பாரதிய ஜனதா வட்டாரத்திலும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது. பிரசார வேகத்தில் ஒரு, 'ப்ளோவில்' பேசி விட்டார் என இதை கடந்து போகவும் வழி இல்லை. ஏனென்றால், 'இந்த கருத்தை நான் சொன்னால் குய்யோ முறையோ என கூச்சல் போடுவார்கள். ஆனால் இதை சொன்னவர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி' என, நிதானமாக சொன்னார் தயாநிதி. எனவே, தான் சொல்லப்போகும் கருத்து எத்தகைய விளைவை ஏற்படுத்தும் என்பதை முழுவதுமாக உணர்ந்தே அவர் பேசினார் என்பது தெளிவாகிறது.

'தயாநிதி சொல்வது போல அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, இரு தலைவர்களையும் இணைத்து கருத்து சொல்லவில்லை. ஜெயலலிதாவை தாய் போன்றவர் என்றும், மோடியை தந்தைக்கு நிகரானவர் என்றும் மரியாதையில் தான் குறிப்பிட்டார்.


latest tamil news
தயாநிதிதான் விஷமத்தனமாக, இரு பெரும் தலைவர்களின் பெயர்களையும், தப்பான அர்த்தத்தில் இணைத்து பேசி தாய், தந்தை ஆகிய புனிதமான உறவுகளை கொச்சைப்படுத்தி விட்டார். கருணாநிதியில் தொடங்கி அவரது குடும்பம் மொத்தமும் பெண்களை எவ்வளவு கீழ்த்தரமாக பார்க்கிறது என்பதற்கு வேறு ஆதாரம் தேவையில்லை' என, ஒரு சீனியர் அமைச்சர் கொதிப்புடன் குறிப்பிட்டார்.

தி.மு.க.,விலும், தயாநிதியின் பேச்சு அதிர்வலைகளை உருவாக்கி இருக்கிறது. தி.மு.க., ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கு வேட்டு வைப்பது போல், தி.மு.க., தலைவர்களே பேசி வருவதை கண்டு, ஸ்டாலினும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (112)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAMAKRISHNAN NATESAN - LAKE VIEW DR, TROY 48084,யூ.எஸ்.ஏ
31-மார்-202121:42:54 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN இதையெல்லாம் படிச்சா ஒண்ணே ஒண்ணுதான் தோணுது அது என்னன்னா "பாவம் இவங்க வீட்டு பெண்கள்"
Rate this:
Cancel
naadodi - Plano,யூ.எஸ்.ஏ
31-மார்-202119:14:49 IST Report Abuse
naadodi ask him who is his grand father? He, why even his grand mother, may not know? such folks talk about values?
Rate this:
Arivaalan - Plano,யூ.எஸ்.ஏ
01-ஏப்-202108:53:15 IST Report Abuse
Arivaalanநீயா பேசுற...
Rate this:
Cancel
TR BALACHANDER - erode,இந்தியா
31-மார்-202116:25:25 IST Report Abuse
TR BALACHANDER நீரை குடம்(ஆ தி மு க ) ததும்பாது குறை குடம்(தி மு க ) கூத்தாடும் ........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X