தரமான சாலை அமைத்து தருவேன் பா.ஜ., சாய்சரவணன்குமார் வாக்குறுதி

Added : மார் 31, 2021 | |
Advertisement
வில்லியனுார் : ஊசுடு தொகுதி பா.ஜ., வேட்பாளர் சாய் சரவணன்குமார் என்.ஆர்.காங்., மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் குருமாம்பேட் பகுதியில் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தார். ஊசுடு தொகுதியில் பா.ஜ., வேட்பளாராக சாய் சரவணன்குமார், குருமாம்பேட், ஐயங்குட்டி பாளையம் பகுதியில் என்.ஆர்.காங்., - அ.தி.மு.க., - பா.ம.க., உள்ளிட்ட கூட்டணி கட்சி யினருடன் தீவிர ஓட்டு சேகரிப்பில்

வில்லியனுார் : ஊசுடு தொகுதி பா.ஜ., வேட்பாளர் சாய் சரவணன்குமார் என்.ஆர்.காங்., மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் குருமாம்பேட் பகுதியில் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தார்.

ஊசுடு தொகுதியில் பா.ஜ., வேட்பளாராக சாய் சரவணன்குமார், குருமாம்பேட், ஐயங்குட்டி பாளையம் பகுதியில் என்.ஆர்.காங்., - அ.தி.மு.க., - பா.ம.க., உள்ளிட்ட கூட்டணி கட்சி யினருடன் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பட்டாசு வெடித்து, வேட்பாளருக்கு மாலை மற்றும் ஆரத்தி எடுத்து பொது மக்கள் வரவேற்பு அளித்தனர்.பிரசாரத்தில் சாய்சரவணன் குமார் பேசியதாவது:நான் வெற்றி பெற்றால் இந்த பகுதியில் தரமான சாலை வசதி ஏற்படுத்தி கொடுப்பேன். குருமாம்பேட் பகுதி இளைஞர்கள் பயன் பெற நவீன வசதிகளுடன் விளையாட்டு மைதானம் ஏற்படுத்தி தருவேன்.

மேலும் குருமாம்பேட், ஐயங்குட்டிப்பாளையம் மற்றும் சுற்றி யுள்ள புதிய நகர் பகுதிகளுக்கு தடையின்றி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்கவும், அனைத்து பகுதியிலும் தெரு மின் விளக்கு வசதிகளை ஏற்படுத்தி தருவேன். இப்பகுதியில் படித்து வேலையில்லாத இளைஞர்களுக்கு தனியார் மற்றும் அரசு வேலை பெற்றுத் தருவேன். இவ்வாறு அவர் பேசினார். பிரசாரத்தில் தாமோதரன் வீரப்பன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X