தொகுதி மறுசீரமைப்பில், 2011ம் ஆண்டு, கொளத்துார் சட்டசபை தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது. இதுவரை, நடந்த, இரண்டு தேர்தல்களில், தற்போதைய தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வெற்றி பெற்றுள்ளார்.௨௦௧௧ தேர்தலில், ஸ்டாலினுக்கு, அ.தி.மு.க., சார்பில் களம் இறக்கப்பட்ட, சைதை துரைசாமி, கடும் போட்டியை ஏற்படுத்தினார். கடைசி நேரத்தில், பெரும் பிரச்னைக்கு இடையே தான், குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் ஸ்டாலின் வெற்றி பெற்றார்.கடந்த தேர்தலில், ஜெ.சி.டி.பிரபாகர், ஸ்டாலினை எதிர்த்து களம் இறக்கப்பட்டார். ஆனால், ஸ்டாலின் எளிதில் வென்றுவிட்டார்.
இம்முறை, மூன்றாவது முறையாக, ஸ்டாலின், கொளத்துார் தொகுதியில் களம் காண்கிறார். இம்முறை, அ.தி.மு.க., சார்பில், ஸ்டாலினை எதிர்த்து ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு, அவருக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்திய ஆதிராஜாராமை, இங்கு களம் இறக்கி உள்ளனர்.அவரும், தான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதல், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கட்சியினர், கூட்டணி கட்சியினர் ஒத்துழைப்பு அளிக்கின்றனர்.ஸ்டாலினுக்காக, கட்சியினர், கூட்டணி கட்சியினருடன், வீதி, வீதியாக பிரசாரம் செய்து வருகின்றனர்.இந்த தொகுதியில் அகரம், ஜவகர் நகர் உள்ளிட்ட பகுதிகளில், தெலுங்கு பேசும் நாயுடு, செட்டியார் சமுதாய மக்கள் அதிகமாக வசிக்கின்றனர்.மேலும், 64, 68, 69 உள்ளிட்ட வார்டுகளில், ஆதி திராவிடர், பழங்குடியினர் சமுதாய மக்கள் அதிகமாக வசிக்கின்றனர்; நாடார் சமுதாயத்தினர், தொகுதி முழுவதும் பரவலாக உள்ளனர்.தி.மு.க., - அ.தி.மு.க., தவிர, மக்கள் நீதி மய்யத்தில் ஜெகதீஷ்குமார், நாம் தமிழர் கெமிலஸ் செல்வா, அ.ம.மு.க., ஆறுமுகம் ஆகியோரும் களத்தில் உள்ளனர்.வெற்றிக்காக, அனைத்து கட்சியினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.வாக்காளர்கள் விபரம்ஆண்கள் - 1,37,456பெண்கள் - 1,43,605மூன்றாம் பாலினம்- - 67மொத்த வாக்களர்- - 2,81,128சமூக ஓட்டு எவ்வளவு?தெலுங்கு பேசும் நாயுடு, செட்டியார்- - 25 சதவீதம்ஆதி திராவிடர் - 23 சதவீதம்வன்னியர்- - 15 சதவீதம்நாடார்- - 10 சதவீதம்மற்றவர்கள்- - 27 சதவீதம்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE