'சல்லிக்காசு தராம எங்களையே திட்டுவியா'; விஜயகாந்த் மகனுடன் மல்லுக்கட்டு

Updated : மார் 31, 2021 | Added : மார் 31, 2021 | கருத்துகள் (26) | |
Advertisement
கேப்டன் மகனுடன் மக்கள் மல்லுக்கட்டு தே.மு.தி.க.,வை கூட்டணியில் சேர்க்க மறுத்த, அ.தி.மு.க., மீது, விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனுக்கு கோபம் குறையவே இல்லை. போகும் இடமெல்லாம், அ.தி.மு.க., தலைவர்களை சகட்டு மேனிக்கு திட்டி தீர்க்கிறார்.சத்தியமங்கலத்தில், தே.மு.தி.க., வேட்பாளருக்கு ஓட்டு கேட்டு பேசியவர், அ.தி.மு.க.,வினரை கழுவி ஊற்றிய பின் திடுமென, 'டிராக்' மாறினார். 'கொரோனா
TamilnaduElections, DMDK, VijayaPrabhakaran, விஜய பிரபாகரன், விஜயகாந்த், தேமுதிக

கேப்டன் மகனுடன் மக்கள் மல்லுக்கட்டு தே.மு.தி.க.,வை கூட்டணியில் சேர்க்க மறுத்த, அ.தி.மு.க., மீது, விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனுக்கு கோபம் குறையவே இல்லை. போகும் இடமெல்லாம், அ.தி.மு.க., தலைவர்களை சகட்டு மேனிக்கு திட்டி தீர்க்கிறார்.

சத்தியமங்கலத்தில், தே.மு.தி.க., வேட்பாளருக்கு ஓட்டு கேட்டு பேசியவர், அ.தி.மு.க.,வினரை கழுவி ஊற்றிய பின் திடுமென, 'டிராக்' மாறினார். 'கொரோனா காலத்தில், கையில் பணம் இல்லாமல் மக்கள் கதறினர். 'பிச்சையெடுக்காத குறையாக அரசை கெஞ்சினர். அசைந்து கொடுக்கவில்லை முதல்வர் இ.பி.எஸ்., இப்போது ஓட்டுக்காக, 1,500 ரூபாய் தருவேன் என்கிறார்.

'மக்களே கவனமாக இருங்கள். நுாறுக்கும், சோத்துக்கும், பீருக்கும் விலை போகாதீங்க. போனா, உங்க வாழ்க்கை நாசமா போகும்!' என, சாபமிட்டார். மற்றவர்களை பிரபாகரன் திட்டுவதை ரசித்து கேட்டுக் கொண்டிருந்த பொதுமக்கள், நம்மையே திட்டுகிறார் என்றதும், 'டென்ஷனாகி' விட்டார்கள்.


latest tamil news


கூட்டத்தில் ஒருவர் குரலை உயர்த்தி, 'யோவ்... நுாறும், அம்பதும் குடுக்கிறவங்களோடதான நேத்து வரையில ஒண்ணா இருந்தீங்க? அவங்களாவது, ஆயிரம், ரெண்டாயிரம் தருவாங்க. நீங்க சல்லிப் பைசா தர மாட்டீங்க. 'இந்த லட்சணத்துல, எங்களையே திட்ட வந்துட்டீங்களாக்கும்?' என்று சண்டைக்குப் போக, சட்டென பிரசாரத்தை நிறுத்தி விட்டு கிளம்பி விட்டார் விஜய பிரபாகரன். அப்பா, 'ஸ்டைல்ல' நாக்க துருத்தி, கண்ண உருட்டி ஒரு, 'லுக்' விட்டிருந்தா கூட்டம் ஓடியே போயிருக்கும்.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
01-ஏப்-202116:48:11 IST Report Abuse
J.V. Iyer எண்ணெய் விளக்கு அணையும் முன் பிரகாசமாக எரியுமாம்.
Rate this:
Cancel
Chola - bangalore,இந்தியா
01-ஏப்-202112:32:14 IST Report Abuse
Chola பாக்குறதுக்கு கும்கி பட காமெடியன் உண்டியல் மாரி இருக்காப்ல...
Rate this:
Cancel
31-மார்-202123:42:55 IST Report Abuse
ரவிச்சந்திரன் முத்துவேல் இருபுறமும் இரட்டை இல்லை விளம்பரம் செய்யும் பத்திரிக்கையின் செய்தியை எப்படி மக்கள் நம்புவார்கள்? பத்திரிகை தர்மம் என்பது கட்சி சார்பற்று, உண்மையை உரக்க சொல்லவேண்டும் ஆளும் மாநில மற்றும் மத்திய அரசுக்கு சார்பாக பதிவுகள் வருவதை என்னை போன்ற நடுநிலையான வாசகர்களின் நம்பிக்கையை தினமலர் இழந்து வருவது வேதனை அளிக்கிறது
Rate this:
D. Selestine Arputharaj - Pilavilai, Mondaymarket,இந்தியா
03-ஏப்-202112:53:40 IST Report Abuse
D. Selestine Arputharajசரிதான் .. எப்பவும் அவர்களுக்குத்தான் சப்போர்ட்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X