10 ஆண்டில் ஸ்டாலின் பிரதமர்; ஓவராக கூவும் துரைமுருகன்

Updated : மார் 31, 2021 | Added : மார் 31, 2021 | கருத்துகள் (126) | |
Advertisement
கிருஷ்ணகிரி: ‛‛பத்து ஆண்டுகளுக்கு பின், ஸ்டாலின் பிரதமர் ஆகிவிடுவார்,'' என, திமுக பொதுச்செயலர் துரைமுருகன் பேசினார்.கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தொகுதி, திமுக வேட்பாளர் மதியழகனை ஆதரித்து, வேலம்பட்டியில் நேற்று அவர் பேசியதாவது: ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே இனம் என்ற கோஷத்தை, மத்திய அரசு உருவாக்கி வருகிறது. இந்தியா, பல்வேறு இனம், மொழி, கலாசாரம் கொண்ட நாடு. இதை அழிக்க, ஒரு
TamilnaduElections, DMK, DuraiMurugan, Stalin, PM, திமுக, துறைமுருகன், ஸ்டாலின், பிரதமர்

கிருஷ்ணகிரி: ‛‛பத்து ஆண்டுகளுக்கு பின், ஸ்டாலின் பிரதமர் ஆகிவிடுவார்,'' என, திமுக பொதுச்செயலர் துரைமுருகன் பேசினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தொகுதி, திமுக வேட்பாளர் மதியழகனை ஆதரித்து, வேலம்பட்டியில் நேற்று அவர் பேசியதாவது: ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே இனம் என்ற கோஷத்தை, மத்திய அரசு உருவாக்கி வருகிறது. இந்தியா, பல்வேறு இனம், மொழி, கலாசாரம் கொண்ட நாடு. இதை அழிக்க, ஒரு சூழ்ச்சி நடக்கிறது. அதை முறியடிக்க, ஸ்டாலின் முதல்வராக வரவேண்டும். மத்திய அரசை எதிர்க்க, ஒரு தைரியம் வேண்டும். அந்த தைரியத்தை கருணாநிதியிடம் பெற்றவர் ஸ்டாலின்.


latest tamil news


திமுக ஆட்சியில், 10 ஆண்டுகளுக்கு முன் வழங்கிய, ‛டிவி' இன்றும் ஓடுகிறது. ஆனால், இந்த ஆட்சியில் வழங்கிய மின் விசிறி, மிக்சி, கிரைண்டர் போன்றவை இப்போது ஓடுவதில்லை. தரமற்ற அரசு என்பதற்கு, இது ஒரு உதாரணம். எழுதி வைத்துக் கொள்ளுங்கள். ஸ்டாலின், 10 ஆண்டுகளுக்கு மட்டுமே முதல்வராக இருப்பார். அதன்பின், பிரதமராகி விடுவார். அந்த அளவுக்கு, அவரிடம், நாடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (126)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ponssasi - chennai,இந்தியா
01-ஏப்-202112:43:05 IST Report Abuse
ponssasi இந்திய அரசியலில் மூத்த தலைவர், உலக விவகாரங்களை விரல்நுனியில் வைத்து பேசும் ஆற்றல் பெற்றவர், இந்திய அரசியலில் அவர் சந்திக்காத தலைவர்கள் இல்லை, இந்தியாவின் முதல் குடிமகனாக இருந்திருக்க வேண்டியவர், பணம் என்னும் பேராசை கடலில் அவரை தள்ளி தவறு மீது தவறு செய்யவைத்து அவரை குட்டிசுவராகிய பெருமை உங்களை சேரும். திரு ஸ்டாலினையும் அதை நோக்கித்தான் செலுத்துகிறீர்கள் என்று நினைக்கிறேன், உங்களின் சேவை நினைத்தால் பெருமையாக இருக்கிறது.
Rate this:
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
02-ஏப்-202121:56:23 IST Report Abuse
கல்யாணராமன் சு.இதை யாரை பாத்து சொல்றீங்க ?...
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
01-ஏப்-202104:33:37 IST Report Abuse
meenakshisundaram appo துரை தான் நமக்கு பாதுகாப்பு மந்திரி -ஜெ இந் புடைவையை சட்ட சபையிலே துகிலுரித்த துச்சாதனன்
Rate this:
THAMIRAMUM PAYANPADUM - india,இந்தியா
01-ஏப்-202114:08:39 IST Report Abuse
THAMIRAMUM PAYANPADUM இப்போ இன்னொரு நடிகை சட்டசபைக்கு பொய் ஜாக்கெட்டை கிழித்துக்கொண்டு துறை மேல் பழி போட்டு முதலமைச்சர் ஆக வாய்ப்பு உண்டு...
Rate this:
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
02-ஏப்-202121:58:55 IST Report Abuse
கல்யாணராமன் சு.அப்போ ஜெயலலிதா சட்டசபையில் சொன்னது பொய்யா ? அப்படின்னா அதை ஏன் சட்டசபை குறிப்பிலிருந்து நீக்கணும் ? இருந்தா எது உண்மைன்னு தெரிஞ்சிருக்குமில்லே ?? திமுகவை ஆதரிக்கணும்னு நினைச்சாலே ஆட்டுமூளை வந்து உக்காந்துக்கும் போலிருக்கு ..... கஷ்டம்தான் .............
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
01-ஏப்-202104:23:56 IST Report Abuse
blocked user உளரல் திலகம் வட சென்னைக்குக்கூட பிரதமராக முடியாது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X