கிருஷ்ணகிரி: ‛‛பத்து ஆண்டுகளுக்கு பின், ஸ்டாலின் பிரதமர் ஆகிவிடுவார்,'' என, திமுக பொதுச்செயலர் துரைமுருகன் பேசினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தொகுதி, திமுக வேட்பாளர் மதியழகனை ஆதரித்து, வேலம்பட்டியில் நேற்று அவர் பேசியதாவது: ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே இனம் என்ற கோஷத்தை, மத்திய அரசு உருவாக்கி வருகிறது. இந்தியா, பல்வேறு இனம், மொழி, கலாசாரம் கொண்ட நாடு. இதை அழிக்க, ஒரு சூழ்ச்சி நடக்கிறது. அதை முறியடிக்க, ஸ்டாலின் முதல்வராக வரவேண்டும். மத்திய அரசை எதிர்க்க, ஒரு தைரியம் வேண்டும். அந்த தைரியத்தை கருணாநிதியிடம் பெற்றவர் ஸ்டாலின்.

திமுக ஆட்சியில், 10 ஆண்டுகளுக்கு முன் வழங்கிய, ‛டிவி' இன்றும் ஓடுகிறது. ஆனால், இந்த ஆட்சியில் வழங்கிய மின் விசிறி, மிக்சி, கிரைண்டர் போன்றவை இப்போது ஓடுவதில்லை. தரமற்ற அரசு என்பதற்கு, இது ஒரு உதாரணம். எழுதி வைத்துக் கொள்ளுங்கள். ஸ்டாலின், 10 ஆண்டுகளுக்கு மட்டுமே முதல்வராக இருப்பார். அதன்பின், பிரதமராகி விடுவார். அந்த அளவுக்கு, அவரிடம், நாடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE