கவுகாத்தி: அசாம் சட்டசபை தேர்தலில், 264 கோடீஸ்வரர்கள் போட்டியிடும் தகவல் வெளியாகி உள்ளது.
அசாமில், முதல்வர் சர்பானந்த சோனவால் தலைமையிலான, பா. ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, சட்டசபை தேர்தல், மூன்று கட்டங்களாக நடக்கிறது. முதல் கட்ட தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. மொத்தமுள்ள, 126 தொகுதிகளில், 946 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில், 28 சதவீத வேட்பாளர்கள், அதாவது, 264 பேர், கோடீஸ்வரர்கள் என, தெரிய வந்துள்ளது.

மேற்கு கோக்ராஜ்ஹர் தொகுதியில் போட்டியிடும், ஐக்கிய மக்கள் கட்சி லிபரல் வேட்பாளர் மனரஞ்சன் பிரம்மா, தனக்கு, 268 கோடி ரூபாய் சொத்து உள்ளதாக, வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார். உதர்பாண்ட் தொகுதியில் போட்டியிடும், சுயேச்சை வேட்பாளர் ராகுல் ராய்க்கு, 136 கோடி ரூபாய்க்கு சொத்து உள்ளது. காங்கிரஸ் வேட்பாளர்களில், 64 பேரும், பா.ஜ., வேட்பாளர்களில், 60 பேரும், அசாம் கன பரிஷத்தின், 22 பேரும், கோடீஸ்வரர்களாக உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE