மக்களை சோம்பேறி ஆக்கும் கட்சிகளுக்கு தடை? ஐகோர்ட் கிளை கேள்வி

Updated : மார் 31, 2021 | Added : மார் 31, 2021 | கருத்துகள் (50)
Advertisement
மதுரை: மக்களை சோம்பேறி ஆக்கும் அறிவிப்புகளை வெளியிடும் கட்சிகளை ஏன் தடை செய்யக்கூடாது என தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பி உள்ளது.வாசுதேவநல்லூர் தொகுதியை பொதுத்தொகுதியாக அறிவிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு கூறியதாவது: ஓட்டுகளை விற்கும் மக்கள், நல்ல
மக்கள், சோம்பேறி, அரசியல் கட்சிகள், தடை, உயர்நீதிமன்ற கிளை, உயர்நீதிமன்ற மதுரை கிளை, மதுரை ஐகோர்ட் கிளை, மதுரை உயர்நீதிமன்ற கிளை

மதுரை: மக்களை சோம்பேறி ஆக்கும் அறிவிப்புகளை வெளியிடும் கட்சிகளை ஏன் தடை செய்யக்கூடாது என தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பி உள்ளது.

வாசுதேவநல்லூர் தொகுதியை பொதுத்தொகுதியாக அறிவிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு கூறியதாவது: ஓட்டுகளை விற்கும் மக்கள், நல்ல தலைவர்களை எப்படி எதிர்பார்க்க முடியும். பிரியாணி, மதுபாட்டிலுக்காக தங்களது ஓட்டுகளை பொது மக்கள் விற்பனை செய்கின்றனர்.

இலவச திட்டங்களை நிறைவேற்ற கடன்பெறுவதால், மாநிலத்தின் நிதிச்சுமை கூடுகிறது. இதனை காரணம் காட்டி மதுக்கடைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது. மக்கள் இதை உணர வேண்டும்.


latest tamil news


சமூக நலத்திட்டங்கள் என்ற பெயரில் மக்களை சோம்பேறியாக்கும் அறிவிப்புகளை அரசியல் கட்சிகள் வழங்குகின்றன. இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிடும் கட்சிகளை ஏன் தடை செய்யக்கூடாது?

தேர்தலில் வெற்றி பெறும் கட்சிகள் வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறார்களா? இலவசங்களை வழங்கி மக்களை சோம்பேறி ஆக்காமல், அவர்களின் தேவையை பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்தலாம். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
31-மார்-202123:33:01 IST Report Abuse
J.Isaac படித்த முட்டாள்கள், படிக்காத அறிவாளிகளிடம் சிக்கி தவிக்கும் வரை நாடு விளங்காது.
Rate this:
Cancel
31-மார்-202121:45:20 IST Report Abuse
ஆப்பு தருமி ரேஞ்சுக்கு கேள்வி மேலே கேள்வி கேக்குறாங்க. ஓஹோ மதுரை ஐகோர்ட்டா... தருமி வாழ்ந்த இடமாச்சே... சொக்கா... சொக்கா..
Rate this:
Cancel
Narayanan - chennai,இந்தியா
31-மார்-202121:15:37 IST Report Abuse
Narayanan முதலில் நீதிமன்றங்கள் நிலுவையில் இருக்கும் வழக்குகளை முடிக்கவும் . அதன் பின்னர் அன்றாட நிகழ்ச்சிகளில் தலையிட்டு ஆணையிடலாமே நீதிபதிகளும், வக்கீல்களும் நீதி படித்தவர்கள்தான் . அதனால் எந்த வழக்கானாலும் மூன்று மாதத்தில் முடிக்க முயற்சி செய்யட்டும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X