பொது செய்தி

தமிழ்நாடு

தமிழக கோயில்களை அரசிடமிருந்து விடுவியுங்கள் : டுவிட்டரில் டிரெண்டிங்

Updated : மார் 31, 2021 | Added : மார் 31, 2021 | கருத்துகள் (41)
Share
Advertisement
சென்னை : தமிழக்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்கள் பராமரிப்பு இன்றி சிதிலமடைந்துள்ளன. இந்து கோயில்களை காக்க, தமிழக அரசின் பிடியிலிருந்து கோயில்களை விடுவிக்க வேண்டும் என்ற முழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று இந்த விவகாரம் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.கோவை, ஈஷா யோகா மையம் அறக்கட்டளை நிறுவனர் சத்குரு, 'கோயில் அடிமை நிறுத்து' என்ற இயக்கத்தை துவக்கி,
FreeTNTemples, SilentSupport, TamilNadu, கோவில்அடிமைநிறுத்து,

சென்னை : தமிழக்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்கள் பராமரிப்பு இன்றி சிதிலமடைந்துள்ளன. இந்து கோயில்களை காக்க, தமிழக அரசின் பிடியிலிருந்து கோயில்களை விடுவிக்க வேண்டும் என்ற முழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று இந்த விவகாரம் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.
கோவை, ஈஷா யோகா மையம் அறக்கட்டளை நிறுவனர் சத்குரு, 'கோயில் அடிமை நிறுத்து' என்ற இயக்கத்தை துவக்கி, அரசின் கட்டுப்பாட்டில் இருந்து, இந்து கோயில்களை விடுவிக்கக் கோரி வருகிறார். இதற்கு, அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும், ஆயிரக்கணக்கானோர் சமூக வலைதளங்கள் வாயிலாகவும் ஆதரவு தெரிவிக்கின்றனர். அதோடு தமிழகத்தில் பராமரிப்பு இன்றி சிதிலமடைந்துள்ள பல கோயில்களை வீடியோவாக பதிவிட்டு சத்குருவிற்கு அனுப்பி வருகின்றனர். இதை தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகிறார் சத்குரு.


latest tamil newsஅதோடு, ‛‛தமிழக கோயில்களின் அவலநிலையை பார்த்து, உருவான வலியால் 'கோவில் அடிமை நிறுத்து' இயக்கத்தை துவங்கினோம். நம் கோயில்கள் சிதைக்கப்பட்டு வருவதாக, 'யுனெஸ்கோ' அமைப்பே கூறியுள்ளது. ஆயிரக்கணக்கான கோயில்கள் சிதிலமடைந்துள்ளன. அவற்றை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டும். இது, ஹிந்துக்களை பற்றியது மட்டும் அல்ல. நம் அரசியல் அமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை மனித உரிமைக்கு இழைக்கப்பட்ட அநீதி. நாம் ஒன்றிணைந்து, தமிழக கோயில்களை அரசு பிடியில் இருந்து விடுவிப்போம்'' என சத்குரு கூறி உள்ளார்.


latest tamil newsஇதுதொடர்பாக ஏற்கனவே தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்கள் முன்பு பலரும் பக்தி பாடல்களை பாடி, இதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதோடு சமூகவலைதளங்களிலும் இதற்கான ஆதரவு நாளுக்கு அதிகரித்து வருகிறது. அந்தவகையில் இன்று அமைதியான முறையில் பலரும், ‛தமிழக கோயில்களை அரசிடமிருந்து விடுவியுங்கள்' என்ற பதாகைகளை ஏந்தி அமைதி வழியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதை பலரும் வீடியோவாக எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இதன்காரணமாக டுவிட்டரில் #FreeTNTemples, #கோவில்அடிமைநிறுத்து, #TamilNadu, #SilentSupport உள்ளிட்ட ஹேஷ்டாக்குகள் தேசிய அளவில் டிரெண்ட் ஆகி வருகின்றன. இதுதொடர்பாக இந்த ஹேஷ்டாக்கில் சிலர் பதிவிட்ட கருத்துக்களை இங்கு பார்க்கலாம்.
* நமது கோயில்களால் இந்தியாவுக்கு மிகப்பெரும் பாரம்பரியம் உண்டு. ஆனால் இப்போது அவை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக விஷமாக்கப்பட்டு வருகின்றன. நமது கோயில்களை காப்போம். தமிழக கோயில்களை அரசிடமிருந்து விடுவியுங்கள்.
* இந்த அமைதி போராட்டத்தின் முக்கிய நோக்கமே அரசு நிர்வகித்து வரும் கோயில்களை பக்தர்களிடமே ஒப்படைப்பது மட்டுமே.


latest tamil news* பழங்கால கோயில்களின் தற்போதைய நிலையை பார்க்கும்போது மிகவும் வேதனை அளிக்கிறது. இன்னும் நாம் கைகளை கட்டிக்கொண்டு அமர்ந்திருப்பது நல்லதல்ல. இது மதத்தைப் பற்றியது அல்ல, மனித மாற்றத்தைப் பற்றியது.
* கோயில்களின் சீரழிவு என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு இழப்பு மட்டுமல்ல, அவற்றின் உயர்ந்த திறனை அடைய முயற்சிக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் இழப்பு.
* நமது கோயில்கள் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருந்து கொண்டு சாகடிக்கப்படுகின்றன. நம் கலாச்சாரம் மெதுவாக அழிந்து கொண்டிருக்கிறது. பக்தியால் மூழ்கியிருக்கும் நம் கலாச்சாரத்தை மீண்டும் கொண்டுவருவதற்கான நேரம் இது.
* கோயில்கள் மடிந்தால் பக்தர்களின் ஆன்மாவும் இறந்துவிடும். ஆகவே கோயில்களைக் காப்பாற்றி, உண்மையான பகர்தர்களிடம் ஒப்படைத்து அவற்றை பராமரிக்க அரசிடம் வேண்டுகிறேன்.

Advertisement
வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr Kannan - Yaadum Voorae,யூ.எஸ்.ஏ
02-ஏப்-202101:12:19 IST Report Abuse
Dr Kannan Hindu temple properties looting was, first illegally sold agraharam houses that were Hindu temple properties and then the offers are in hiding.me. Second, Then many sold all temple Kattalai properties and invested elsewhere to enjoy a lavish life. During this process they lost the hindu Dharma that astute must live by unjavirthi. Why those indus abandoned the real sanatana dharma and lead adharmic life? Now are we suggesting to prepare grounds for looting the remaining properties of Temples? Leave it to the Hindua of all communities to decide and political parties or Hindutuva are not the custodian of Hindu temples. Five commitments needed from all real hindus: 1.If you are honest bring back all agraharam houses and kattalai properties sold illegally .? 2. Also bring first all Mutts including Sankaramutt undwer an indpent authority with Members from all communities? 3. Will BJP promulgate a law making temple priests posts is to all Hindu communities? 4. Also BJP Must show to all hindus that they are not eist party by enacting a law that all MUtts head must be to all communities? 5. Legislate acts to pevent all forms of discrimination inside the temple and rituals. All hindus are equal infront of God No one will trust Hindutva or political partie and there is no credibility to argue about otherslooting temple properties.
Rate this:
Cancel
Dr Kannan - Yaadum Voorae,யூ.எஸ்.ஏ
02-ஏப்-202101:01:33 IST Report Abuse
Dr Kannan STOP AND TAKE A BREATH AND APPLY SOME COMMON SENSE .. for 1000s of years all temples were under the management of hindu jeeyars or hindu muttS they miserably failed to keep records of statues and jewelry..most temple properties were looted and statues disappeared during the hindu jeeyars time. That's why govt management was introduced ..now we must concentrate to prosecute those jeeyars and hindu priests who looted the hindu temples Second most international statues smugglers were from Gujarat and hindus must ask Modiji to prosecute his gujarati fris.. last week 70 statues were recovered from a gujarati businessman in Chennai. All looting businesses were master minded by Gujaratis. That's what " Guajarat model"....
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
01-ஏப்-202105:07:50 IST Report Abuse
தல புராணம் 99.9999999999999999 % கோவில் சொத்துக்களை ஆட்டையை போடுறது இந்துக்கள் மட்டும் தான். இந்த உண்மையை கூமுட்டைகள் புரிஞ்சிக்கணும்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X