கோத்திரத்தை வெளிப்படுத்திய மம்தா: தோல்வி பயம் என பா.ஜ., சாடல்

Updated : மார் 31, 2021 | Added : மார் 31, 2021 | கருத்துகள் (51)
Share
Advertisement
கோல்கட்டா: நந்திகிராமில் செவ்வாய் இரவு தேர்தல் பிரசாரம் செய்த மம்தா பானர்ஜி, தான் சாண்டில்ய கோத்திரத்தை சேர்ந்தவர் என கூறினார். 8 உயர்ந்த பிராமண கோத்திரங்களில் சாண்டில்ய கோத்திரமும் ஒன்று.மேற்கு வங்கத்தில் 2-ம் கட்ட சட்டமன்ற தேர்தல் நாளை (ஏப்., 1) நடக்கிறது. மம்தா பானர்ஜி மற்றும் அவரது திரிணாமுல் கட்சியிலிருந்து தற்போது பா.ஜ.க.,வில் இணைந்துள்ள சுவேந்து அதிகாரி

கோல்கட்டா: நந்திகிராமில் செவ்வாய் இரவு தேர்தல் பிரசாரம் செய்த மம்தா பானர்ஜி, தான் சாண்டில்ய கோத்திரத்தை சேர்ந்தவர் என கூறினார். 8 உயர்ந்த பிராமண கோத்திரங்களில் சாண்டில்ய கோத்திரமும் ஒன்று.



latest tamil news



மேற்கு வங்கத்தில் 2-ம் கட்ட சட்டமன்ற தேர்தல் நாளை (ஏப்., 1) நடக்கிறது. மம்தா பானர்ஜி மற்றும் அவரது திரிணாமுல் கட்சியிலிருந்து தற்போது பா.ஜ.க.,வில் இணைந்துள்ள சுவேந்து அதிகாரி மோதும் நந்திகிராம் தொகுதியும் இதில் அடக்கம். உள்ளூர் தலைவராக சுவேந்து அதிகாரி மற்றும் அவரது தந்தை அறியப்படுவதால் அங்கு திரிணாமுல் காங்., - பா.ஜ., இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஜெய் ஸ்ரீராம் கோஷத்துடன் பிரசாரம் செய்யும் சுவேந்து அதிகாரி, மம்தா ஜெய் ஸ்ரீராம் கோஷத்துக்கு எதிரானவர் என கூறி வருகிறார்.

மம்தாவுக்கு துணையாக பிரசாந்த் கிஷோரின் ஐபேக் அணி அங்கு வேலை பார்க்கிறது. அவர்கள் பிரசார பயணங்களின் போது கோயில்களுக்கு செல்லும் படி கூறியுள்ளனர். அதன் படி தொகுதியில் உள்ள கோயில்களை வலம் வந்தார் மம்தா.

இந்நிலையில் செவ்வாயன்று நந்திகிராமில் 2-ம் கட்ட தேர்தலுக்கான இறுதி பிரசார கூட்டத்தில் பங்கேற்ற மம்தா பானர்ஜி, தான் கோயில்களுக்கு சென்ற போது தன்னிடம் குருக்கள் கோத்திரம் என்னவென்று கேட்டார், அதற்கு மா மதி மனுஷ் (கட்சியின் கொள்கை) என கூறியதாகவும் தெரிவித்தார். “உண்மையில் நான் சாண்டில்ய கோத்திரத்தை சேர்ந்தவர்” என்று வெளிப்படையாக அறிவித்தார்.

இது எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது. பா.ஜ., தலைவரும், மத்திய அமைச்சருமான கிரிராஜ் சிங், “தேர்தலில் தோற்கப்போகிறோம் என்ற பயத்தால் மம்தா தனது கோத்திரத்தை கூறியுள்ளார். ரோஹிங்யாக்கள் மற்றும் ஊடுருவல்காரர்களும் சாண்டில்ய கோத்திரத்தை சேர்ந்தவர்கள் தானா என்பதை மம்தா சொல்ல வேண்டும்.” என கூறியுள்ளார். ஒவைசி கட்சியான ஏ.ஐ.எம்.ஐ.எம்.,மும் மம்தா விரக்தியில் இவ்வாறெல்லாம் பேசுவதாக விமர்சித்துள்ளது.


latest tamil news


இதே போல் 2018-ல் ராஜஸ்தான் உட்பட ஐந்து மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. அப்போது ராஜஸ்தானில் காங்கிரசுக்காக பிரசாந்த் கிஷோரின் ஐபேக் அணி வேலை பார்த்தது. அங்கு பிரசித்தி பெற்ற புஷ்கர் கோவிலில் வழிபாடு நடத்திய ராகுல், தான் தாத்ரேயா கோத்திரத்தை சேர்ந்தவர் என்றும், காஷ்மீரி கவுல் பிராமணர் என்றும் கூறியது குறிப்பிட்டது.

Advertisement




வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெகுளி - Maatuthaavani,இந்தியா
31-மார்-202122:55:24 IST Report Abuse
வெகுளி மம்தா சாண்டில்ய கோத்திரமா?...சரி விடு.... வேற வழியில்லை .... இனி ஸ்டாலினும், தான் சுஜாதா கோத்திரம், ராஜேஷ் குமார் கோத்திரம்ன்னு எதையாவது சொல்லி ஓட்டு கேட்கணும்... ஏமாந்துறக்கூடாது....
Rate this:
Cancel
31-மார்-202122:29:48 IST Report Abuse
ஆரூர் ரங் ஓட்டுக்காக எத்தனையோ தகிடுதத்தம்😆 தாய் சோனியா இட்டாலி கிறித்தவர் பாட்டன் பெரோஸ் காந்தி பார்சி இனத்தவர் இரு வெளி நாட்டு வாரிசு எப்படி கவுல் பிராமணர் அதுவும் தத்தாத்ரய ? ஆனா சுடலை😇😇😇 என்னதான் சொல்வார் பாவம்? குடும்பம் முழுக்க கலப்படம். ரிஷிமூலம் நதி மூலம் மாதிரி இதுவும் கேக்கவே கூடாது
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
31-மார்-202122:20:23 IST Report Abuse
sankaseshan பிரமணப்பெண்கள் நெற்றியில் திலகமிட்டுக்கொள்ள மறப்பதில்லை ஸ்வர்ணக்கா நெற்றியில் திலகமே இல்லை ஊரைஏமாற்ற வேஷம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X