பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தை உ.பி.,யாக மாற்றுகிறாரா யோகி: டுவிட்டரில் டிரெண்டிங்

Updated : ஏப் 01, 2021 | Added : ஏப் 01, 2021 | கருத்துகள் (51)
Share
Advertisement
சென்னை: உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோவை வந்தபோது நடந்த பேரணியில் கடைகளின் மீது கல்வீச்சு நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த செய்தி குறித்து பலரும் டுவிட்டரில் கருத்து தெரிவித்ததால், #YogiAdityanath என்னும் ஹேஸ்டேக் டிரெண்டானது.கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து, உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கோவையில் நேற்று
YogiAdityanath, Coimbatore, BJP, Yogi, யோகி ஆதித்யநாத், கோவை, கலவரம்,

சென்னை: உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோவை வந்தபோது நடந்த பேரணியில் கடைகளின் மீது கல்வீச்சு நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த செய்தி குறித்து பலரும் டுவிட்டரில் கருத்து தெரிவித்ததால், #YogiAdityanath என்னும் ஹேஸ்டேக் டிரெண்டானது.

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து, உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கோவையில் நேற்று (மார்ச் 31) பிரசாரம் மேற்கொண்டார். இதனையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியில் அக்கட்சியினரும் கலந்துகொண்டனர். அப்போது ஒப்பணக்கார வீதியை அருகே இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்றவர்கள் அங்குள்ள கடைகளை மூட சொல்லி தகராறு செய்து கல்வீச்சில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும், பா.ஜ., கட்சிக் கொடி கட்டப்பட்டு இருந்த தடியால், சில வியாபாரிகளை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.


latest tamil news


இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதால் கோவை முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், இந்த தாக்குதலுக்கு பா.ஜ., சார்பில் யாரும் கண்டனம் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. அதுவரை அமைதியாக நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் உபி., முதல்வர் வருகையின் போது பா.ஜ.,வினர் அராஜக செயலில் ஈடுபட்டதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால், யோகி ஆதித்யநாத் டிரெண்டானார். மேலும், அதே ஹேஸ்டேக்கில் உ.பி., மாநிலத்தை விட தமிழகத்தில் உள்ள வளர்ச்சியினை யோகி ஆதித்யநாத் ஆச்சரியமாக பார்ப்பதும், கேட்பதுமாக பலரும் கலாய்த்து மீம்ஸ்களை பகிர்ந்தனர்.

இது ஒருபுறம் இருக்க, யோகியின் தமிழகம் வருகையால், இந்துக்களின் மனதிற்கு மேலும் புத்துணர்ச்சியாக இருப்பதாகவும் சிலர் கருத்து பதிவிட்டுள்ளனர். உ.பி.,யில் இந்துக்களுக்கு பாதுகாப்பாக இருப்பதாகவும், ராமர் கோயில் போன்ற புனித தளங்களை கட்டுவது தொடர்பாகவும் அவரை பாராட்டியுள்ளனர். இந்த நிகழ்வு தொடர்பாக பலரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அவற்றில் சில....


latest tamil news


* உ.பி.,யின் கலவர கலாசாரத்தை தமிழகத்திலும் புகுத்த நினைக்கின்றனர். அது ஒருபோதும் நடக்காது.
* அனைவரும் ஒற்றுமையாக உள்ள தேசத்தில் வெறியை தூண்டி இந்துக்களை மத வெறியர்களாக மாற்ற நினைக்கின்றனர்.
* தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என யோகி பேசுகிறார். இதை பேசுவதற்கு முன்பு அவரது மாநிலத்தில் என்ன நடக்கிறது என்று சிந்திக்க வேண்டும். ஹத்ராஸ் சம்பவமே அதற்கு சான்று. இங்கு அனைவரும் பாதுகாப்பாக தான் இருக்கின்றனர். உங்கள் மாநிலத்தை பாருங்கள் யோகி அவர்களே..
* யோகி ஆதித்யநாத் உ.பி., கலாசாரத்தை தமிழகத்திற்கு கொண்டுவர முயற்சிப்பதாக பலரும் கூறுகின்றனர். அதில் என்ன தவறு இருக்கிறது. இந்துக்களின் பாதுகாப்பு அரணாக உள்ள கலாசாரம், தமிழகத்திலும் இருந்தால் நல்லது தானே..
* யோகியின் வருகையால் கோவையில் கடைகள் மீது கல்வீச்சு என செய்தியை பார்த்தால், சிலர் வேண்டுமென்றே பரப்புவது போல் உள்ளது. கல்வீச்சு ஏற்பட்ட கடையை இதுவரையில் யாரும் காட்டவில்லை.

* இப்போது கல்வீசுவார்கள், அடுத்து கடையை உடைப்பார்கள், பிறகு கலவரம் செய்வார்கள்.. ஆனால் மாநிலத்திலும் அவர்களது கூட்டணியில் உள்ள அரசு என்பதால் தட்டிக் கேட்க யாரும் இல்லை..
* தமிழகத்தில் தனியாக நின்று ஒரு கவுன்சிலர் சீட்டுக் கூட வெல்ல முடியாத கட்சி, தேர்தலுக்கு முன்பே இப்படி கடைகளை தாக்குகின்றனர் எனில், ஒரு எம்எல்ஏ.,வாவது வெற்றிப் பெற்றால் என்னவாகும் என சிந்தித்து பாருங்கள்.
* இவர்கள் இருக்கும் லட்சணத்தில் திமுக.,வை ரவுடி கட்சி என்கின்றனர். இருக்கும் ரவுடிகள், குற்றவாளிகள் எல்லாம் அவர்கள் கட்சியில் தான் போய் சேருகின்றனர்.
* யோகி வந்ததால், கோவை நகரம் உ.பி.,யாக மாறுகிறது என்கின்றனர். உ.பி., சென்று பாருங்கள். பெரும்பாலான ஊர்களுக்கு சாலை வசதிகள் கூட இல்லை.. உ.பி.,யாக மாறத்தேவையில்லை. தமிழகம் இப்படியே இருக்கட்டும்.

Advertisement
வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Devanathan Govindarajan - Chennai,இந்தியா
02-ஏப்-202120:34:25 IST Report Abuse
Devanathan Govindarajan It is hand work of the oppostion party. They are afraid of BJP because they are doing good to the people. No corruption, straight forward etc Pl ignore this need. The news spread by the paid service of the oppostion
Rate this:
Cancel
02-ஏப்-202116:55:21 IST Report Abuse
ஆப்பு சீக்கிரமே தமிழகத்திலிருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் உ.பி , பிஹார்னு போய் செட்டிலாயி, இந்தி கத்துக்கிட்டு ஓஹோ ஓஹோன்னு உயரப் போகிறார்கள்.
Rate this:
Cancel
வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா
02-ஏப்-202112:21:01 IST Report Abuse
வந்தியதேவன் மேயுற மாட்ட... நக்குற மாடு கெடுத்த மாதிரி... பாவம் அந்தம்மா ஜெயிக்குறதா இருந்தது... அந்த வெற்றியிலேயும் மண்ண வாரி போட்டுட்டு... உ.பி..க்கு போய்ட்டாரு இவரு...?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X