தேர்தலுக்காக சிறு சேமிப்புகளுக்கான வட்டி குறைப்பு வாபசா? காங்., கேள்வி

Updated : ஏப் 01, 2021 | Added : ஏப் 01, 2021 | கருத்துகள் (38)
Share
Advertisement
புதுடில்லி: சிறு சேமிப்புகளுக்கான வட்டி விகிதம் குறைப்பு குறித்த அறிவிப்பை மத்திய அரசு வாபஸ் பெற்றது குறித்து, காங்., விமர்சித்துள்ளது.சேமிப்புத் திட்டங்கள், டெபாசிட்கள் போன்றவற்றுக்கு ஒவ்வொரு காலாண்டுக்கும் ஒரு முறை மத்திய அரசு வட்டியை மாற்றி வருகிறது. அந்தவகையில் பல்வேறு சிறுசேமிப்புகளுக்கான வட்டி வீதத்தை 1.1 சதவீதம் வரை குறைத்து மத்திய நிதியமைச்சகம் நேற்றிரவு
NirmalaSitharaman, InterestRate, Congress, நிர்மலா சீதாராமன், சிறுசேமிப்பு, வட்டி விகிதம், காங்கிரஸ், விமர்சனம்

புதுடில்லி: சிறு சேமிப்புகளுக்கான வட்டி விகிதம் குறைப்பு குறித்த அறிவிப்பை மத்திய அரசு வாபஸ் பெற்றது குறித்து, காங்., விமர்சித்துள்ளது.

சேமிப்புத் திட்டங்கள், டெபாசிட்கள் போன்றவற்றுக்கு ஒவ்வொரு காலாண்டுக்கும் ஒரு முறை மத்திய அரசு வட்டியை மாற்றி வருகிறது. அந்தவகையில் பல்வேறு சிறுசேமிப்புகளுக்கான வட்டி வீதத்தை 1.1 சதவீதம் வரை குறைத்து மத்திய நிதியமைச்சகம் நேற்றிரவு (மார்ச் 31) அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்ததையடுத்து, குறைக்கப்பட்ட சிறுசேமிப்பு வட்டிக்கான அறிவிப்பை வாபஸ் பெறுவதாகவும், மார்ச் வரையிலான காலாண்டில் இருந்தபடியே வட்டி வீதம் தொடரும் எனவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்தார்.

நிர்மலா சீதாராமன் அறிவிப்பு குறித்து காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா டுவிட்டரில் பதிவிட்ட கருத்து: நிதியமைச்சர் மேடம், நீங்கள் அரசாங்கம் நடத்துகிறீர்களா அல்லது சர்க்கஸ் காட்சி நடத்துகிறீர்களா? கோடிக்கணக்கான மக்களை பாதிக்கும் இதுபோன்ற உத்தரவுகளைக் கவனிக்காமல் வெளியிடுகிறீர்கள் என்றால், இவர் எவ்வாறு நாட்டின் பொருளாதாரத்தை நிர்வாகம் செய்வார், நடத்துவார் என்று கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் நிதி அமைச்சராகத் தொடர உரிமை இல்லை. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


latest tamil news


காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா தனது டுவிட்டரில் பக்கத்தில், ‛மத்திய அரசின் சிறுசேமிப்புத் திட்டங்களுக்கு வட்டியைக் குறைத்து நிர்மலா சீதாராமன் அறிவித்தது உண்மையில் உங்களை அறியாமல் நடந்த தவறா அல்லது தேர்தலைக் கருத்தில் கொண்டு, அதன் விளைவுகளை உணர்ந்து, பின்னுணர்வுகளைப் புரிந்து வாபஸ் பெற்றுவிட்டீர்களா?' என கேள்வியெழுப்பியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Visu Iyer - chennai,இந்தியா
02-ஏப்-202112:19:31 IST Report Abuse
Visu Iyer நீங்கள் நிதி அமைச்சராகத் தொடர உரிமை இல்லை./// அம்பது நாட்கள் அவகாசம் கேட்ட மோடி ஜி யை இப்படி தான் மக்கள் கேட்கிறார்கள்.. அதற்காக மோடி ஜி பதவி விலகி விட்டாரா என்ன.. நீங்க வேற... சும்மா தமாஷ் பண்ணிக்கிட்டு... முடிந்தால் பாஜக அரசை கலைத்து விட்டு பதவிக்கு வர பாருங்க..
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
02-ஏப்-202112:17:28 IST Report Abuse
Visu Iyer நீங்கள் நிதி அமைச்சராகத் தொடர உரிமை இல்லை./// அட போங்க தாயே... இவர் எந்த தொகுதியில் வெற்றி பெட்ரா நாடாளுமன்ற உறுப்பினர் என்று இன்னமும் தேடி கிட்டு இருக்கிறோம் நீங்க வேற .. சும்மா தமாஷ் பண்ணிக்கிட்டு
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
02-ஏப்-202112:16:35 IST Report Abuse
Visu Iyer நீங்கள் அரசாங்கம் நடத்துகிறீர்களா அல்லது சர்க்கஸ் காட்சி நடத்துகிறீர்களா?/// ஏழு வருஷமா சர்க்கஸ் தான் பார்த்துக் கிட்டு இருக்கிறோம்.. நீங்க எங்கே இருந்தீங்க... இருக்கீங்க...?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X