பூச்சிகளின் சரணாலயம்| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

பூச்சிகளின் சரணாலயம்

Added : ஏப் 01, 2021
Share
தேனீ உள்ளிட்ட, அயல் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும், பூச்சி இனங்கள் அழிந்து வருகின்றன. இதே நிலை தொடர்ந்தால், உணவுப் பயிர்களும் மெல்ல அழியத் துவங்கும். இந்த ஆபத்தை உணர்த்த வின்சென்ட் காலிபாட் ஆர்க்கிடெக்ட் அமைப்பின் கலைஞர்கள், மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் பூச்சிகளின் சரணாலயத்தை வடிவமைத்துள்ளனர்.'பாலிநேட்டர் பார்க்' என்ற கற்பனை கட்டடத்திற்குள் பலவகை தாவரங்கள்
பூச்சிகளின் சரணாலயம்

தேனீ உள்ளிட்ட, அயல் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும், பூச்சி இனங்கள் அழிந்து வருகின்றன. இதே நிலை தொடர்ந்தால், உணவுப் பயிர்களும் மெல்ல அழியத் துவங்கும். இந்த ஆபத்தை உணர்த்த வின்சென்ட் காலிபாட் ஆர்க்கிடெக்ட் அமைப்பின் கலைஞர்கள், மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் பூச்சிகளின் சரணாலயத்தை வடிவமைத்துள்ளனர்.

'பாலிநேட்டர் பார்க்' என்ற கற்பனை கட்டடத்திற்குள் பலவகை தாவரங்கள் வளர்கின்றன. இவற்றை பெருகச் செய்ய, பலவகை பூச்சிகள் வந்துபோகும்படி பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய கமிஷனின் வேண்டுகோளுக்கிணங்க, வின்சென்ட் காலிபாட் நிறுவனத்தினர் உருவாக்கியுள்ள இந்த கற்பனை கட்டடத்திற்கு, அண்மையில் மெய்நிகர் வடிவத்தையும் தந்துள்ளார்.

மேலும் இணைய தளம் ஒன்றை உருவாக்கி, ஆர்வமுள்ளோரை பார்க்கும்படி செய்துள்ளனர். கூகுளில் Pollinator Park என உள்ளிட்டு தேடிப்பார்த்தால் கண்டடையலாம்.பூச்சிகள் முற்றிலும் அழியும் நிலை வரும் 2050ல் ஏற்படக்கூடாது என்றே விரும்புவதாகவும், மக்களை எச்சரிக்கவே இப்படி ஒரு கற்பனை முயற்சி எனவும் வின்சென்ட் காலிபாட் வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X