சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

விவசாயியுடன் 'பேசும்' பயிர்கள்

Added : ஏப் 01, 2021
Share
Advertisement
பயிர்களுக்கு வாயில்லை. எனவே, விவசாயி தான் அவற்றுக்கு என்ன தேவை என்று பார்த்துப் பார்த்துத் தரவேண்டும். இந்த நிலையை 'இன்னர் பிளான்ட்' தொழில்நுட்பம் விரைவில் மாற்றத்தைக் கொண்டுவரவிருக்கிறது.பயிர்களுக்கு நீர் போதவில்லை, பூச்சி, தொந்தரவு அதிகரித்து விட்டது என்றால், அவை 'ஒளிர்வதன்' மூலம் விவசாயிக்கு, தங்கள் வேதனையை தெரிவிக்க முடியும்.அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா
 விவசாயியுடன் 'பேசும்' பயிர்கள்

பயிர்களுக்கு வாயில்லை. எனவே, விவசாயி தான் அவற்றுக்கு என்ன தேவை என்று பார்த்துப் பார்த்துத் தரவேண்டும். இந்த நிலையை 'இன்னர் பிளான்ட்' தொழில்நுட்பம் விரைவில் மாற்றத்தைக் கொண்டுவரவிருக்கிறது.

பயிர்களுக்கு நீர் போதவில்லை, பூச்சி, தொந்தரவு அதிகரித்து விட்டது என்றால், அவை 'ஒளிர்வதன்' மூலம் விவசாயிக்கு, தங்கள் வேதனையை தெரிவிக்க முடியும்.

அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த இன்னர் பிளான்ட் நிலையத்தின் விஞ்ஞானிகள். இந்த புதுமையை உருவாக்கியுள்ளனர்.

முதலில், தக்காளிச் செடியை இந்த வகையில் உருவாக்கி, விளைவித்து வெற்றி கண்டுள்ளனர். அடுத்து சோயா பயிர்களுக்கும் ஒளிரும் தன்மையை தர ஆய்வுகள் நடந்து வருகின்றன.நீர் போதாமை, பூச்சி தாக்குதல், சத்து பற்றாக்குறை போன்ற மூன்று நிலைகளை தெரிவிக்க, மூன்று வகையில் இன்னர் பிளான்டின் பயிர்கள் ஒளிரும் என, விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பயிர்கள் ஒளிர்வதை, சிறப்பு கேமரா மூலம், செயற்கைக்கோளிலிருந்தே படம் பிடிக்க முடியும்.எனவே தான், பல்லாயிரம் ஏக்கர் பரப்பில் விளைவிக்கப்படும் பயிர்களுக்கே ஒளிரும் தொழில்நுட்பம் பயன்படும்.

இப்போதே, ஜப்பானிய முதலீட்டாளர்கள், சோயாவை ஒளிர வைக்கும் நுட்பத்தில் ஆர்வம் காட்டியுள்ளதாக, இன்னர் பிளான்ட் அதிகாரிக்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X