சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : ஏப் 01, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி: நான் குறுக்கு வழியில் பதவிக்கு வந்ததாக, பிரதமர் மோடி குற்றம் சாட்டுகிறார். உங்களை பார்த்து நான் பயப்பட, உங்க கட்சிக்காரரோ அல்லது இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ்.,சோ கிடையாது. நான் எதற்கும் பயப்பட மாட்டேன்; நான் கருணாநிதியின் பேரன்.'டவுட்' தனபாலு: தி.மு.க., இளைஞர் அணி செயலராக நீங்கள் மகுடம் சூட்டப்பட்டது தான், தி.மு.க.,வின் நேர்மையான வழியோ என்ற 'டவுட்'டை,

'டவுட்' தனபாலு

தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி: நான் குறுக்கு வழியில் பதவிக்கு வந்ததாக, பிரதமர் மோடி குற்றம் சாட்டுகிறார். உங்களை பார்த்து நான் பயப்பட, உங்க கட்சிக்காரரோ அல்லது இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ்.,சோ கிடையாது. நான் எதற்கும் பயப்பட மாட்டேன்; நான் கருணாநிதியின் பேரன்.



'டவுட்' தனபாலு: தி.மு.க., இளைஞர் அணி செயலராக நீங்கள் மகுடம் சூட்டப்பட்டது தான், தி.மு.க.,வின் நேர்மையான வழியோ என்ற 'டவுட்'டை, உங்களின் பேச்சு ஏற்படுத்துகிறது. மேலும், இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ்., பயந்தவர்கள் என்றால், கடந்த நான்காண்டுகளாக, பல அதிரடி முடிவுகளை எடுத்திருக்க மாட்டார்கள். நீங்கள் கருணாநிதியின் பேரன் தான் என்பதில் யாருக்கும், 'டவுட்' வராது. எனினும், கருணாநிதியின் திறமையில் எள்ளளவும் இல்லாததால், அடிக்கடி நீங்கள் நினைவுபடுத்திக் கொள்கிறீர்களோ என்பது தான், நடுநிலையாளர்களின், 'டவுட்!'


தமிழக காங்., தலைவர் அழகிரி:
கடந்த, 10 ஆண்டுகளாக, அ.தி.மு.க., அரசு, தமிழக உரிமைகளை பறிகொடுத்து விட்டது. 'மத்திய அரசுடன் இணக்கமாக சென்றால், மாநிலம் வளர்ச்சி பெறும்' என்று முதல்வர் கூறினார். அப்படி என்ன சிறப்பு நிதியை பெற்று, வளர்ச்சி அடைந்துவிட்டது?

'டவுட்' தனபாலு: மேற்கு வங்கத்தில் மம்தா போல; புதுச்சேரியில் முதல்வராக இருந்த நாராயணசாமி - கவர்னராக இருந்த கிரண் பேடி போல; முதல்வர் இ.பி.எஸ்.,சும், பிரதமர் மோடியும் சண்டையிட வேண்டும்; அதில் குளிர்காய வேண்டும் என்ற உங்களின் எண்ணம், பேச்சில் தெளிவாகிறது. மத்திய அரசு மீதான உங்கள் அதிருப்தியில், மத்திய மற்றும் பன்னாட்டு அமைப்புகள் வெளியிடும் அறிக்கைகளை படிக்க மாட்டீர்களோ என்ற, 'டவுட்' வருகிறது. பல துறைகளில், தமிழகம் முன்னணி மாநிலம் என்பதை மறந்து விடாதீர்கள்!

மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலர் பாலகிருஷ்ணன்: எங்கள் கூட்டணி இரும்பு கோட்டை; அ.தி.மு.க., கூட்டணி, கடையாணி கழன்ற கட்டை வண்டி கூட்டணி. அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி, 234 தொகுதிகளிலும் படுதோல்வியடையும். எதிர்க்கட்சி இடத்தில் கூட, இ.பி.எஸ்.,சுக்கு இடம் கிடைக்காது. தே.மு.தி.க., புதிய தமிழகம் என, ஓட்டு பலம் மிக்க கட்சிகள் இல்லாத சூழலில், அ.தி.மு.க., எப்படி வெற்றி பெற முடியும்?

'டவுட்' தனபாலு: அந்த கட்சிகளை சேர்த்தால், வெற்றி உறுதி என்றால், தி.மு.க., - காங்., கூட்டணி, ஏன் அந்த கட்சிகளை சேர்க்கவில்லை? நீங்கள் இவ்வளவு ஆவேசமாக பேசுவதை பார்க்கும் போது, அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்று, தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை தொடரும் என்பதில் எந்த, 'டவுட்'டும் இல்லையோ என்ற எண்ணம், மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது!

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.Muralidaran - Chennai,இந்தியா
02-ஏப்-202110:24:06 IST Report Abuse
A.Muralidaran பயந்த EPS யையே சட்டசையில் எதிர்கொள்ள துப்பில்லாத பொட்டையன் உன் அப்பன் வீரத்தைப் பற்றி பேசுகிறாய்.
Rate this:
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
02-ஏப்-202108:50:05 IST Report Abuse
a natanasabapathy Aiadmk jeyiththu vittaal balakrishnan arasiyalai virtual oda தயாரா.
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
02-ஏப்-202106:17:41 IST Report Abuse
D.Ambujavalli உங்கள் கட்சியில் தான் உங்கள் பெரியப்பா, அவர் மக்கள் கூட தகுதியில்லாதவர்கள் என்று உங்கள் குடும்பத்தினர் மட்டும்தான் லட்சக்கணக்கான தொண்டர்களுக்கிடையே ‘சுடர் விடும்’ அறிவுக் களஞ்சியங்கள் தாத்தா காலத்திலிருந்தே இந்த ‘ராஜ பரம்பரை’ வழிமுறைதான் நடக்கிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X