பொது செய்தி

தமிழ்நாடு

சட்டசபை தேர்தல் செலவுக்கு ரூ.700 கோடி ஒதுக்கீடு

Updated : ஏப் 03, 2021 | Added : ஏப் 01, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை : 'தமிழகத்தில், சட்டசபை தேர்தல் செலவுக்கு, 700 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க, சுகாதாரத் துறைக்கு, 54.12 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாஹு தெரிவித்தார். அவரது பேட்டி:சட்டசபை தேர்தலில், பணப் பட்டுவாடாவை தடுக்க, பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர், 24 மணி நேரமும், வாகன சோதனை
சட்டசபை தேர்தல், செலவு,ஒதுக்கீடு, சத்யபிரதாசாஹு, சாஹு

சென்னை : 'தமிழகத்தில், சட்டசபை தேர்தல் செலவுக்கு, 700 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க, சுகாதாரத் துறைக்கு, 54.12 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாஹு தெரிவித்தார்.

அவரது பேட்டி:சட்டசபை தேர்தலில், பணப் பட்டுவாடாவை தடுக்க, பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர், 24 மணி நேரமும், வாகன சோதனை நடத்த வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. சிறப்பு செலவினப் பார்வையாளர்கள், நேரடியாக பறக்கும் படையினருடன் தொடர்பில் உள்ளனர்.மின்னணு பணப் பரிமாற்றம் கண்காணிக்கப்படுகிறது. இதுவரை, மின்னணு பணப் பரிமாற்றம் தொடர்பாக, புகார் எதுவும் வரவில்லை. பணப் பட்டுவாடா தொடர்பாக, 143 புகார்கள், பரிசுப் பொருள் மற்றும், 'கூப்பன்' வழங்குவதாக, 96 புகார்கள் வந்துள்ளன.

இது தவிர, மாவட்ட தேர்தல் அலுவலர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆகியோருக்கும் புகார்கள் வந்துள்ளன. அவர்கள், விசாரித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தேர்தல் குற்றம் தொடர்பாக, பிப்., 27 முதல், மார்ச், 31 வரை, 46 முதல் தகவல்அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.திருச்சி தேர்தலை நிறுத்தம் செய்வதாக, எந்த தகவலும் கிடையாது. தேர்தல் கமிஷனும் எந்த தகவலும் கேட்கவில்லை. திருச்சியில் தபால் ஓட்டுக்கு பணம் கொடுத்த வழக்கை, சி.பி.ஐ.,க்கு மாற்றுவதாகவும் தகவல் இல்லை. தேர்தல் பிரசாரம், 4ம் தேதி இரவு, 7:00 மணியுடன் நிறைவடைகிறது. அதன்பின், யாரும் பிரசாரம் செய்யக் கூடாது. அதற்கு முன்பாக, தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள, வெளியூர் நபர்கள், தொகுதியை விட்டு
வெளியேற வேண்டும்.

ஓட்டுச்சாவடியில், தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். பதற்றமான ஓட்டுச்சாவடிகளில், கூடுதல் போலீசார், துணை ராணுவ வீரர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர்.கொரோனா நோய் பரவல் காரணமாக, தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு, முக கவசம், முக, 'ஷீல்டு', கையுறை, முழு உடல் கவசம் போன்ற பொருட்கள், ஒரு டஜன், சுகாதாரத் துறை சார்பில் வழங்கப்படும்.
இதற்காக சுகாதாரத் துறைக்கு, 54.12 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்தல் செலவுக்கு, 700 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், செலவு அதிகரிக்க வாய்ப்புள்ளது.இம்முறை சுகாதாரத் துறை சார்பில், தேர்தல் பணியில் கூடுதலாக, இரண்டு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஒருவர் வாக்காளர்களின் உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்வார். மற்றொருவர், கிருமிநாசினி மற்றும் கையுறை வழங்குவார்.மக்கள் ஓட்டளிக்க, தயாராக உள்ளனர். எனவே, ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரிக்கும் என்று, நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.




மே 2 வரை தபால் ஓட்டு!



தேர்தல் பணியில், 4.66 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்களில், 3.46 லட்சம் பேருக்கு, தபால் ஓட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களில், 1.32 லட்சம் பேர், தபால் ஓட்டளித்துள்ளனர்.தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் வாகனங்களில், டிரைவர்கள் போன்றோருக்கும், தபால் ஓட்டு வழங்கப்படும். ஓட்டுச்சாவடி அலுவலர்கள் பயிற்சி வகுப்பில் பங்கேற்கும்போது, தபால் ஓட்டளிக்க வசதியாக, அங்கு சிறப்பு மையம் ஏற்படுத்தப்படும்.இது தவிர, தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில், தபால் ஓட்டு பெட்டி வைக்கப்பட்டிருக்கும்.

அதிலும், தபால் ஓட்டுகளை செலுத்தலாம்; தபாலிலும் அனுப்பலாம். ஓட்டு எண்ணிக்கை நாளான, மே, 2 காலை, 8:00 மணிக்குள், தபால் ஓட்டு வந்தடைய வேண்டும்.கொரோனா நோய் பரவல் காரணமாக, இம்முறை, 80 வயதை கடந்தவர்கள், மாற்றுத் திறனாளிகள், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் போன்றோர், தபால் ஓட்டளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி, 80 வயதை கடந்த, 92 ஆயிரத்து, 559 பேர்; மாற்றுத் திறனாளிகள், 30 ஆயிரத்து, 894 பேர் ஆகியோர், தபால் ஓட்டளிக்க உள்ளனர். அவர்களிடம், நேரடியாக சென்று ஓட்டுகளை பெறும் பணி நடந்து வருகிறது. இப்பணியை, வரும், 5ம் தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.n. Dhasarathan - chennai,இந்தியா
02-ஏப்-202109:51:38 IST Report Abuse
K.n. Dhasarathan இந்த முறையாவது தவறு செய்பவர் மீது நடவடிக்கை எடுப்பீர்களா? அல்லது ஆர் கே. நகர் இடைத்தேர்தல் போல வேடிக்கை பார்த்துவிட்டு போய்விடுவீர்களா ? பார்ப்போம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X