அரசியல் செய்தி

தமிழ்நாடு

திராவிட கட்சிகளால் மாற்றம் வராது: சீமான்

Updated : ஏப் 03, 2021 | Added : ஏப் 01, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
சென்னை:''திராவிட கட்சிகளால் தமிழகத்தில் மாற்றம் வராது; மாற்றத்தை எதிர்பார்ப்போர், புதிய ஆட்சியை தேடுங்கள்,'' என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.சென்னை வில்லிவாக்கம், திரு.வி.க.,நகர், கொளத்துார் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து, பிரசாரம் செய்த, அவர் பேசியதாவது: சமூகத்தில் மாற்றத்தை விரும்பினால் மட்டும் போதாது; நம்மில் மாற்றம் வேண்டும்.
திராவிட கட்சிகளால்  மாற்றம் வராது: சீமான்

சென்னை:''திராவிட கட்சிகளால் தமிழகத்தில் மாற்றம் வராது; மாற்றத்தை எதிர்பார்ப்போர், புதிய ஆட்சியை தேடுங்கள்,'' என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.

சென்னை வில்லிவாக்கம், திரு.வி.க.,நகர், கொளத்துார் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து, பிரசாரம் செய்த, அவர் பேசியதாவது: சமூகத்தில் மாற்றத்தை விரும்பினால் மட்டும் போதாது; நம்மில் மாற்றம் வேண்டும். தனி மரம் எப்போதும் தோப்பாகாது; தனித்தனி மரங்கள் சேர்ந்து தான் தோப்பாக மாறும். ஒரு தொகுதியில் போட்டியிடுகிற வேட்பாளர், 20 கோடி ரூபாய் முதலீடாக செலவிடுகிறார். அவர், ஆட்சிக்கு வந்து, எப்படி மக்களுக்கு சேவை செய்வார்?

தி.மு.க., தலைவர் ஸ்டாலின், ஆலோசனை தர, 'ஐபேக்'கை வைத்துள்ளார். அவர்களுக்கு, தமிழகத்தை பற்றி என்ன தெரியும். பண கொழுப்பில் தி.மு.க.,வினர் ஆடுகின்றனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மக்களையே முதலீட்டாளர்களாக மாற்றி, தொழில் பாதுகாப்பை கொடுப்போம்.

அ.தி.மு.க.,வினர், 2.17 கோடி ரேஷன் கார்டு தாரர்களுக்கு, இலவச, 'வாஷிங் மிஷன்' அறிவித்து உள்ளனர். ஒரு வாஷிங் மிஷனுக்கு குறைந்தது, 15 ஆயிரம் ரூபாய் வைத்தால், எந்தனை கோடி ரூபாய் தேவைப்படும். ஏற்கனவே, 6 லட்சம் கோடி கடன் இருக்கிறது.

திராவிட கட்சிகளால், தமிழகத்தில் மாற்றத்தை கொண்டுவர முடியாது. மாற்றம் என்பது, தி.மு.க., -- அ.தி.மு.க.,வை மாறி, மாறி விழ்த்துவது இல்லை. மாற்றத்தை எதிர்பாக்கும் மக்கள், புதிய ஆட்சியை தேடுங்கள்.இவ்வாறு, சீமான் பேசினார்.


தாமதமாக வந்த வேட்பாளர்:திரு.வி.க.நகர் தொகுதியில் சீமான் பிரசாரத்திற்கு வந்தாலும், வேட்பாளர் இளவஞ்சி, 15 நிமிடம் தாமதமாக வந்ததால், சலசலப்பு ஏற்பட்டது.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
03-ஏப்-202114:52:39 IST Report Abuse
Pugazh V ஸ்டாலின் கிட்ட மட்டும் ஒருத்தர் தனியாக நிக்க வேண்டிய து தானே என்கிறார். இதை ஏன் இபிஎஸ், வாசன், ராமதாஸ், முருகன் இவர்களிடம் கேட்க வில்லை?
Rate this:
Cancel
chennai sivakumar - chennai,இந்தியா
02-ஏப்-202122:29:57 IST Report Abuse
chennai sivakumar சீமான் சொல்வது சரி. ஆனால் மாற்ற கட்சி இல்லையே. So known devil is better என்ற மன நிலையில் வாக்காளர்கள் இருக்கிறார்கள். May be if voting right restricted to educated only then things could change. That's the only possibility and fixing of minimum qualification for the contestants
Rate this:
Cancel
Karthikeyan K Y - Chennai,இந்தியா
02-ஏப்-202113:42:27 IST Report Abuse
Karthikeyan K Y சிறுபான்மையினரை மதிக்கிறது என்ற திமுக வெறும் 2 சீட் முஸ்லீம் லகுக்கே கட்சிக்கும் இன்னொரு முஸ்லீம் தரப்புக்கு ஒரு 3 சீட் கொடுத்துவிட்டு, கிறிஸ்துவ சமுதாயத்துக்கு என்ன கொடுத்தது ஊரை ஏமாற்றி எல்லா சமுதாயத்தையும் அடிமைகளாக்கி வைத்து இருக்கும் திராவிட கட்சிகளின் மத்தியில் ஜாதி மதம் பார்க்காமல் 234 தொகுதிலியும் நிற்கும் சீமானின் தைரியம் வருமா ? ஸ்டாலின் தனியாக நிற்க வேண்டியதானே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X