'அரசாங்கம் நடத்துகிறீர்களா 'சர்க்கஸ்' நடத்துகிறீர்களா?'

Updated : ஏப் 03, 2021 | Added : ஏப் 02, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
வட்டி குறைப்பு உத்தரவை, மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளதை, காங்., கட்சி கிண்டல் செய்துள்ளது. காங்., பொதுச் செயலர் பிரியங்கா கூறுகையில், ''சிறு சேமிப்புத் திட்டங்களுக்கு வட்டியைக் குறைத்து அறிவித்தது, தனக்கு தெரியாமல் நடந்த தவறா அல்லது ஐந்து மாநில தேர்தலை கருத்தில் வைத்து, அதன் விளைவுகளை உணர்ந்து திரும்பப் பெறப்பட்டதா என்பதை, நிதி அமைச்சர் விளக்க வேண்டும்,'' என,
'அரசாங்கம் நடத்துகிறீர்களா 'சர்க்கஸ்' நடத்துகிறீர்களா?'

வட்டி குறைப்பு உத்தரவை, மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளதை, காங்., கட்சி கிண்டல் செய்துள்ளது. காங்., பொதுச் செயலர் பிரியங்கா கூறுகையில், ''சிறு சேமிப்புத் திட்டங்களுக்கு வட்டியைக் குறைத்து அறிவித்தது, தனக்கு தெரியாமல் நடந்த தவறா அல்லது ஐந்து மாநில தேர்தலை கருத்தில் வைத்து, அதன் விளைவுகளை உணர்ந்து திரும்பப் பெறப்பட்டதா என்பதை, நிதி அமைச்சர் விளக்க வேண்டும்,'' என, தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா கூறியுள்ளதாவது:மத்திய ஆட்சியாளர்கள், அரசாங்கம் நடத்துகின்றனரா அல்லது 'சர்க்கஸ்' நடத்துகின்றனரா என தெரியவில்லை. கோடிக்கணக்கான மக்களை பாதிக்கும் இதுபோன்ற உத்தரவுகளை கவனிக்காமல் வெளியிடுகிறார் என்றால், நிர்மலா சீதாராமன், நாட்டின் பொருளாதாரத்தை எப்படி நிர்வாகம் செய்வார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.காங்., எம்.பி., ராகுல் கூறுகையில், ''பெட்ரோல், டீசலில் ஏற்கனவே கொள்ளையடித்துவிட்டனர்; ஐந்து மாநில தேர்தல் முடிந்தபின், சிறு சேமிப்புகளுக்கான வட்டியைக் குறைத்து, நடுத்தர மக்களின் சேமிப்பிலும் கொள்ளையடிப்பர்,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivagiri - chennai,இந்தியா
02-ஏப்-202116:16:39 IST Report Abuse
Sivagiri சீ சீ . . . என்னா கேவலம் - நாட்டைக் காப்பாற்ற இந்த ( கலப்பட ) ராஜ பரம்பரையால்தான் முடியுமே தவிர . . . வேறு யாரலும் முடியாது . .
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
02-ஏப்-202115:46:57 IST Report Abuse
RajanRajan பப்பி அப்போ நடந்தது சர்க்கஸ். இப்போ நடக்கிறது ரிங் மாஸ்டர் சாட்டையை சுழற்றுதல். இனி ஆங்காங்கே குயோமுறையோன்னு சத்தம் மட்டும் கேட்டுகிட்டே இருக்கும். அப்போ நடந்தது ஊழல் சர்க்கஸ் இப்போ நடக்கிறது பொலிடிகல் ரிபார்ம் புரிஞ்சுதா பப்பி.
Rate this:
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
02-ஏப்-202115:05:24 IST Report Abuse
a natanasabapathy எதிர் கட்சிகளில் மிருகங்கள் அதிகம் இருக்கும் பொது சர்க்கஸ் நடத்துவது ஆளும் கட்சிக்கு அவசியமாகி விடுகிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X