பொது செய்தி

இந்தியா

இந்திய ராணுவ வீரர்களுக்கு குண்டு துளைக்காத உடை

Updated : ஏப் 03, 2021 | Added : ஏப் 02, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி :இந்திய ராணுவ வீரர்களுக்கு, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட குண்டு துளைக்காத உடை வழங்கப்பட உள்ளது.உத்தர பிரதேச மாநிலம், கான்பூரில், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தைச் சேர்ந்த, ராணுவ பொருட்கள் மற்றும் கிடங்கு ஆய்வு நிறுவனமான, டி.எம்.எஸ்.ஆர்.டி.இ., உள்ளது. இந்நிறுவனம், நவீன தொழில்நுட்பத்தில், குண்டு துளைக்காத உடையை வடிவமைத்து, தயாரித்துள்ளது.
இந்திய ராணுவ வீரர்களுக்கு குண்டு துளைக்காத உடை

புதுடில்லி :இந்திய ராணுவ வீரர்களுக்கு, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட குண்டு துளைக்காத உடை வழங்கப்பட உள்ளது.
உத்தர பிரதேச மாநிலம், கான்பூரில், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தைச் சேர்ந்த, ராணுவ பொருட்கள் மற்றும் கிடங்கு ஆய்வு நிறுவனமான, டி.எம்.எஸ்.ஆர்.டி.இ., உள்ளது.
இந்நிறுவனம், நவீன தொழில்நுட்பத்தில், குண்டு துளைக்காத உடையை வடிவமைத்து, தயாரித்துள்ளது.
உள்நாட்டு மூலப் பொருட்களில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த உடை, பஞ்சாப் மாநிலம், சண்டிகரில் உள்ள ஏவுகணை ஆராய்ச்சி மையத்தில் சோதித்து பார்க்கப்பட்டது.
அப்போது, இந்திய தர நிர்ணய கழகம் நிர்ணயித்துள்ள விதிமுறைகளின் படி, இந்த உடையின் குண்டு தாங்கும் திறன் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, விரைவில் இந்த உடை, இந்திய ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் என, தகவல் வெளியாகியுள்ளது.
வழக்கமான குண்டு துளைக்காத உடை, 10.4 கிலோ எடை உள்ள நிலையில், புதிய, உடை, 9 கிலோ அளவிற்கே உள்ளதால், ராணுவ வீரர்களுக்கு வசதியாக இருக்கும் என, ராணுவ உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்தாண்டு ஜனவரியில், இந்திய ராணுவ உயரதிகாரியான, அனுப் மிஸ்ரா, உலகிலேயே முதன் முறையாக, ஆண், பெண் என, இருபாலாரும் பயன்படுத்தும், 'சக்தி' என்ற குண்டு துளைக்காத ஆடையை உருவாக்கினார்.
உலகில் நெகிழ்வு தன்மையுள்ள முதல் குண்டு துளைக்காத உடை இது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
02-ஏப்-202112:45:34 IST Report Abuse
கொக்கி குமாரு இதுதான் தேசப்பற்று கொண்ட பாஜக ஆட்சிக்கும் ஊழல்களில் திளைத்த காங்கிரஸ் ஆட்சிக்கும் உள்ள வித்தியாசம். இதெல்லாம் எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் சிதம்பரம் அய்யாவிற்கு தெரியுமா தெரியாது.
Rate this:
Cancel
Palanisamy Sekar - Jurong-West,சிங்கப்பூர்
02-ஏப்-202105:52:56 IST Report Abuse
Palanisamy Sekar மோடிஜி ஆட்சிக்கு வராமல் போயிருந்தால் இந்நேரம் காங்கிரஸ் நமது நாட்டையே விற்று இருக்கும். ராணுவ வீரர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம் தான் மோடிஜியின் ஆட்சி. கடுமையான குளிரை தாங்கக்கூடிய உடையை கூட இதுவரை ஆண்ட காங்கிரஸ் கொடுத்ததே கிடையாது. ஆனால் மோடிஜி ராணுவ வீரர்களை நேரில் அடிக்கடி சந்தித்து உரையாடி மகிழ்ந்து அவர்களின் தேவையை உணர்ந்து செயற்படுகின்றார். அதன் வெளிப்பாடுதான் இந்த குண்டு துளைக்காத உடைகளின் அணிவகுப்பு.கிரேட் மோடிஜி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X