அரசியல் செய்தி

தமிழ்நாடு

திமுக.,வை குறிவைக்கிறதா ஐடி., ரெய்டு? : டுவிட்டரில் டிரெண்டிங்

Updated : ஏப் 02, 2021 | Added : ஏப் 02, 2021 | கருத்துகள் (70)
Share
Advertisement
சென்னை : திமுக., முன்னாள் அமைச்சர் வேலுவை தொடர்ந்து திமுக., தலைவர் ஸ்டாலின் மகள், மருமகன் வீட்டில் ஐடி ரெய்டு நடந்துள்ளது. இந்த விவகாரம் டுவிட்டரில் டிரெண்டிங் ஆனது. தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் தேர்தல் கட்சியினர் அனல் பறக்கும் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில தினங்களாக பல்வேறு அரசியல் பிரமுகர்கள் வீடுகளில்
ITRaid, IncomeTax, MKStalin, MISA

சென்னை : திமுக., முன்னாள் அமைச்சர் வேலுவை தொடர்ந்து திமுக., தலைவர் ஸ்டாலின் மகள், மருமகன் வீட்டில் ஐடி ரெய்டு நடந்துள்ளது. இந்த விவகாரம் டுவிட்டரில் டிரெண்டிங் ஆனது.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் தேர்தல் கட்சியினர் அனல் பறக்கும் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில தினங்களாக பல்வேறு அரசியல் பிரமுகர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் சமீப காலமாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சில தினங்களுக்கு திமுக.,வின் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் ஐடி ரெய்டு நடந்தது. அதற்கு திமுக.,வினர் கண்டனம் தெரிவித்தனர்.


latest tamil newsஇந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலினின் மகள் செந்தாமரை வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சென்னை நீலாங்கரையில் உள்ள செந்தாமரை, அவரது கணவர் சபரீசன் வீட்டிலும் ரெய்டு நடக்கிறது. சபரீசனின் நண்பர்களான கார்த்திக் (அண்ணாநகர் தொகுதி திமுக வேட்பாளர் மோகன் மகன்) , பாலா ஆகியோரின் வீடுகள் , நீலாங்கரையில் உள்ள ஐபேக் அலுவலகத்திலும் சோதனை நடக்கிறது. தொடர்ந்து திமுக., எம்.பி., சிஎன் அண்ணாத்துரை வீட்டிலும் ரெய்டு நடந்து வருகிறது.


தொடர்ந்து திமுக.,வினரை குறி வைத்து இந்த ஐடி ரெய்டு நடத்தப்படுவதாக எதிர்க்கட்சியினரும், சமூகவலைதளவாசிகளும் குற்றம் சாட்டி வருகின்றனர். தேர்தல் பிரசாரத்தில் பேசிய ஸ்டாலின், ‛‛எனது மகள் செந்தாமரை வீட்டில் ரெய்டு நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு நான் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். கருணாநிதியின் மகனான நான் இந்த சலசலப்பிற்கு அஞ்ச மாட்டேன். மிசா போன்ற எமர்ஜென்சியை பார்த்தவன். எத்தனை ரெய்டு நடத்தினாலும், நாங்கள் கவலைப்பட மாட்டோம். அது திமுக காரர்களிடம் நடக்காது. நாங்கள் பனங்காட்டு நரி, இந்த சலசலப்பிற்கு அஞ்சமாட்டோம்'' என்றார்.

ஸ்டாலின் மகள், மருமகன் மற்றும் திமுக., வினர் வீடுகளில் நடத்தப்படும் ஐடி ரெய்டு விஷயம் டுவிட்டரில் #ITRaid, #IncomeTax, #MKStalin, #MISA உள்ளிட்ட ஹேஷ்டாக்குகளில் இன்று டிரெண்ட் ஆனது. பலரும் தங்களது கருத்துக்களை இந்த ஹேஷ்டாக்குகளில் பதிவிட்டு வருகின்றனர். அப்படி பதிவிட்ட சிலரின் கருத்துக்கள் இங்கே...


latest tamil news* பா.ஜ.,வின் பொம்மலாட்டம் துவங்கிவிட்டது. இது போன்ற நடவடிக்கை திமுக.,வின் ஓட்டை அதிகப்படுத்த மட்டுமே செய்யும்.

* திமுக.,வினர் வீடு, அலுவலங்களில் மட்டும் ஐடி ரெய்டு ஏன், அதிமுக.,வினர் ஒருவர் வீடுகளில் கூட இதுபோன்று ஐடி ரெய்டு நடத்தப்படவில்லையே.

* வருவமான வரி சோதனை பற்றி கவலைப்பட ஒன்றும் இல்லை என்றால் எதற்காக ஸ்டாலின் பதில் கொடுக்கிறார். மேலும் மிசாவின் கீழ் அவர் கைது செய்யப்பட்டேன் என்கிறார். அதற்கும், இதற்கும் என்ன சம்பந்தம். அவர் மிசாவில் கைதானதற்கான ஆதாரங்கள் ஏதும் உள்ளதா. பிறகு ஏன் ஷா கமிஷன் அறிக்கையில் அவரது பெயர் இடம் பெறவில்லை.

* மாஸ்டர் படம் வெளியான சமயத்தில் விஜய்யின் வீட்டில் ஐடி ரெய்டு நடந்தது. படம் மாபெறும் வெற்றி பெற்றது. அதேப்போன்று இப்போது நடத்தப்பட்ட ஐடி ரெய்டுகளால் திமுக மகத்தான வெற்றி பெற்று அரியணையில் அமர போகிறார்கள்.

* பல கருத்து கணிப்புகளும் திமுக., கூட்டணி வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறி வருகின்றனர். அதனால் இதுபோன்று ஐடி ரெய்டு நடத்தி திமுக.,வின் பலத்தை பலவீனமாக்கலாம் என நினைக்கிறார்கள். நிச்சயம் அது நடக்காது, திமுக., கூட்டணி வெற்றி பெறும்.

இதுபோன்று பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதேசமயம் இன்றைய பிரச்சாரத்தில் ஸ்டாலின் பேசும்போது நான் மிசாவை பார்த்தவன் என்றார். இதனால் இந்த ஹேஷ்டாக்கில் பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர். ஐடிக்கு, மிசாவிற்கும் என்ன சம்பந்தம். எதை எதோடு ஒப்பிடுகிறீர்கள் என விமர்சித்து வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (70)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெற்றிக்கொடி கட்டு - நாத்திக, தேசவிரோத கட்சிகளை ஆதரிக்காதீர்,இந்தியா
03-ஏப்-202110:25:30 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு விஷயம் என்னன்னா திருட்டு முன்னேற்ற கழகமும் அப்பழுக்கற்ற கட்சி அல்ல சோதனைக்கு ஆளு அனுப்புற கட்சியும் வேடதாரி கட்சிதான் (தேர்தல் பத்திரத்தை விஸ்தாரம் ஆக்கிய கட்சி) தேர்தல் நேரத்தில் "இவனுவோ தப்பு பண்ணியிருப்பானுவோ" என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் விதைக்கவே இந்த சோதனை "ஐயோ பாவம் இவங்க கிட்டேயா சோதனை விளங்குமா அந்த ஆரிய கச்சி?" என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் விதைக்கவே சோதனைக்கு எதிர்ப்பு (சலசலப்புக்கு அஞ்சமாட்டோம்) பாம்பும் கீரியுடன் சண்டை போடாது கீரியும் பாம்பை பகைத்து கொள்ளாது (நிஜ பாம்பும், நிஜ கீரியும் என்னை மன்னிக்கட்டும்)
Rate this:
Cancel
kosu moolai - nadunilaiyoor,இந்தியா
03-ஏப்-202109:50:07 IST Report Abuse
kosu moolai எத்தனை தடவை சோதனை செய்தாலும் எந்த கொம்பனாலயும் முரசொலி மூல பாத்திரத்தை மட்டும் கண்டு புடிக்கவே முடியாது. உதயநிதியின் வெளிப்படை ஸவால் இதைதான் குறிக்கிறது.
Rate this:
Cancel
pandiyan - aathoor,இந்தியா
03-ஏப்-202108:58:43 IST Report Abuse
pandiyan சில திமுக சோம்ம்புகள் தங்கள் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து மத்திய அரசில் அங்கம் வகித்த பொழுது அதெல்லாம் அடிமை இல்லையா ?அன்று என்ன திட்டங்களை தமிழகத்துக்கு கொண்டு வந்தார்கள் ,நீட் தேர்வையும் ஐரோ கார்பன் திட்டத்தியும் கொண்டு வர முதல காரணமான இந்த இருவரையும் எந்த நாடு நிலை ஊடகங்களும் சுட்டி காட்டுவதில்லை.அண்ணா திமுக மத்திய அரசுடன் நட்பாக இருந்து தன இன்றைக்கு தமிழகத்தை முதல் மாநிலமாக கொண்டு வந்துள்ளார்கள். தாதபோதிய முதல்வர் ஒரு சதாஹரண விவசாயியின் மகன் என்ற படியால் பல பண முதலைகள் அவரை எப்படியாவது மீண்டு வெற்றி பெற்று ஆட்சி அமைக்க கூடாது என்று பல வழிகளை முயட்சித்து வருகிறார்கள்.ஏழை மகளின்வகுகள் என்ட்ரிக்கும் அண்ணா திமுகவை காத்திடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X