நந்திகிராம் தொகுதியில் மம்தா தோற்பார்: அமித்ஷா ஆரூடம்

Updated : ஏப் 02, 2021 | Added : ஏப் 02, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
கூச்பெஹர்: நந்திகிராம் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜி தோற்பார் என மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது. நேற்றுடன் (ஏப்.,1) இரண்டாம் கட்டத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் 3ம் கட்டத் தேர்தல் ஏப்.,6ல் நடக்க உள்ளது. இந்நிலையில், கூச்பெஹர் மாவட்டத்தில் உள்ள சித்தால்குச்சி நகரில்
WestBengalElections, Amitshah, Mamata, Nandigram, மம்தா, அமித்ஷா, நந்திகிராம், மேற்குவங்கம்

கூச்பெஹர்: நந்திகிராம் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜி தோற்பார் என மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது. நேற்றுடன் (ஏப்.,1) இரண்டாம் கட்டத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் 3ம் கட்டத் தேர்தல் ஏப்.,6ல் நடக்க உள்ளது. இந்நிலையில், கூச்பெஹர் மாவட்டத்தில் உள்ள சித்தால்குச்சி நகரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: மேற்கு வங்கத்தின் வடக்குப் பகுதி எல்லையில், எல்லை தாண்டி சட்டவிரோதமாக வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால், இதை திரிணமுல் அரசு ஒருபோதும் தடுத்து நிறுத்தாது. எங்களால் மட்டுமே முடியும்.


latest tamil news


மம்தா பானர்ஜி இந்த அரசை மிரட்டிப் பணம் பறித்தல், சர்வாதிகாரம், மற்றவர்களைச் சமாதானப்படுத்துதல் ஆகிய ஆயுதங்கள் மூலம்தான் ஆட்சி நடத்தி வருகிறார். இந்தத் தேர்தலில் பா.ஜ., மிகப்பெரிய வெற்றிப்பெற்று ஆட்சி அமைக்கும். இதுவரை நடந்த முதல் இரு கட்டத் தேர்தலிலும் பா.ஜ., வெற்றி பெறும். மம்தா நந்திகிராம் தொகுதியில் தோல்வி அடைவார். இந்த பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு மம்தா எதுவும் செய்யவில்லை. கூச்பெஹர் மாவட்டத்தில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனையை உருவாக்குவோம். இந்த எய்ம்ஸ் மருத்துவமனை இங்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த பிராந்தியத்துக்கும் பயன்படும் வகையில் இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Prem Kumar -  ( Posted via: Dinamalar Android App )
03-ஏப்-202117:16:58 IST Report Abuse
Prem Kumar As both Congress and CPM is nowhere seen in West Bengal, the picture is cleat that fight is between BJP and TMC only. Since the anti incumbency is going to help BJP to defeat Mamtha, it is certain the saffron party is only going to form the government. The next State for BJP is Tamilnadu, where it will try to form the government on its own strength in 2026. The trend now itself says winning 39 Lok Sabha seats in 2024 election will not be that much easy for DMK and it cannot expect 2019 results only will repeat in 2024 also.
Rate this:
Cancel
03-ஏப்-202117:14:51 IST Report Abuse
K.R PREM KUMAR As both Congress and CPM is nowhere seen in West Bengal, the picture is cleat that fight is between BJP and TMC only. Since the anti incumbency is going to help BJP to defeat Mamtha, it is certain the saffron party is only going to form the government. The next State for BJP is Tamilnadu, where it will try to form the government on its own strength in 2026. The trend now itself says winning 39 Lok Sabha seats in 2024 election will not be that much easy for DMK and it cannot expect 2019 results only will repeat in 2024 also.
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
03-ஏப்-202105:55:43 IST Report Abuse
Mani . V EVM அப்படித்தானே சொல்லும்.
Rate this:
Srinivas.... - Chennai,இந்தியா
03-ஏப்-202111:42:42 IST Report Abuse
Srinivas....மறைமுகமாக சேட்டு சொல்வது யாருக்கு புரியுதோ இல்லையோ, தேர்தல் நடத்தும் ஆணையத்திற்கு புரிந்துவிடும். மொத்த மெஷினில் பாதியை சூடு வைத்துவிட்டால் சொன்னதுபோல் நடக்கும். நான் அப்பவே சொன்னேன் என்று சொல்லிக்கொள்ளலாம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X