தமிழக உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி : பிரதமர்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழக உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி : பிரதமர்

Updated : ஏப் 02, 2021 | Added : ஏப் 02, 2021 | கருத்துகள் (34)
Share
நாகர்கோவில்: தமிழக உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக ரூ. 1லட்சம் கோடி ஒதுக்கப்பட்டு உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடந்த பா.ஜ., பொதுக்கூட்டத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பேசியதாவது: கவிமணி, அய்யா வைகுண்டர், காமராஜர், மார்ஷல் நேஷமணி ஆகியோரை நினைவு கூர்கிறேன்.வளர்ச்சி என்ற
kannyakumari, BJP, pmmodi,modi, narendramodi, Pmnarendramodi, பிரதமர் மோடி, மோடி, நரேந்திர மோடி,

நாகர்கோவில்: தமிழக உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக ரூ. 1லட்சம் கோடி ஒதுக்கப்பட்டு உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடந்த பா.ஜ., பொதுக்கூட்டத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பேசியதாவது: கவிமணி, அய்யா வைகுண்டர், காமராஜர், மார்ஷல் நேஷமணி ஆகியோரை நினைவு கூர்கிறேன்.வளர்ச்சி என்ற மந்திரத்தை முன்வைத்து மக்களை எதிர்கொள்கிறோம். மக்களின் வளர்ச்சிக்காக மத்திய அரசு என்றும் பாடுபடும். தமிழகத்தில் உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. குமரி - மும்பை இடையே பொருளாதார வழித்தடம் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. எதிர்க்கட்சிகள் குடும்ப அரசியலையை முக்கியமாக கருதுகின்றனர். தங்களின் வாரிசுகள் மகிழ்ச்சியாக சந்தோஷமாக இருக்க வேண்டும் என நினைக்கின்றனர். உங்களின் நலன்கள் குறித்து கவலைப்படவில்லை.


latest tamil newsதிமுக.,வில் கருணாநிதியோடு தோளோடு தோள் கொடுத்து பணியாற்றிய அக்கட்சியில் மூத்த தலைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். நாட்டின் மனநிலை தெளிவாக உள்ளது. வாரிசு அரசியலுக்கு எதிராக மக்களின் மனநிலை உள்ளது. ஆட்சி கலைப்பை காங்கிரஸ் அரசு பல முறை பயன்படுத்தி உள்ளது. இதனால் திமுக., அதிமுக பாதிக்கப்பட்டு உள்ளன. அனைவரும் இணைந்து, அனைவரின் நம்பிக்கை பெற்று அனைவரும் உயர்வோம் என்பதே மத்திய அரசின் தாரக மந்திரம். மக்களுக்கு சேவை செய்வதில் மதம், ஜாதி ஆகியவற்றை மத்திய அரசு பார்ப்பதில்லை.

அனைவருக்குமான அரசாக பா.ஜ., அரசு செயல்படுகிறது. அயல்நாடுகளில் சிக்கி தவித்த தமிழர்களை பத்திரமாக மீட்டுள்ளோம். ஆப்கனில் பயங்கரவாதிகளிடம் சிக்கி தவித்த பாதிரியார் அலெக்சிஸ் பத்திரமாக அழைத்து வரப்பட்டார். ஏமனில் தவித்த பாதிரியார் டாம்மையும் பாதுகாப்பாக அழைத்து வந்தோம். கொரோனா காலத்தில் வெளிநாடுகளில் சிக்கி தவித்த 5 லட்சம் தமிழர்கள் பத்திரமாக அழைத்து வரப்பட்டனர். அவர்களின் மதம், ஜாதி குறித்து பார்க்கவில்லை. விவசாயிகளின் வருமானத்தை பெருக்க வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளது. சிறுகுறு தொழில்களை ஊக்கப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது.

துறைமுகங்களின் திறன்கள் மேம்படும். புதிய துறைமுகங்கள் கட்டப்பட உள்ளன. இதனால், உள்ளூர் மக்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தும். அதிக முதலீடுகளை ஈர்த்து உள்ளூரில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. சென்னையில் புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்கப்பட உள்ளது. கடல்சார்ந்த பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மீனவர்கள் வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

மீனவர்களுக்கு நவீன உபகரணங்கள் மற்றும் கடனுதவியை வழங்கி வருகிறோம். மீனவர்களுக்கு என தனி அமைச்சகம் அமைக்கப்பட்டு, அவர்களின் பிரச்னையை கவனித்து வருகிறது. மீனவர்களின் நலனே தேசிய ஜனநாயக கூட்டணிக்கு முக்கியம் என்பதை மீனவர்களுக்கு உறுதி அளிக்கிறேன். முந்தைய திமுக காங்., ஆட்சியில் மீனவர்கள் புறக்கணிக்கப்பட்டனர்.இலங்கையால் சிறைபிடிக்கப்பட்ட அனைத்து தமிழக மீனவர்களையும் மீட்டுள்ளோம். அவர்களின் படகுகளும் மீட்கப்பட்டு உள்ளன. தற்போது, இலங்கை சிறையில் எந்த தமிழக மீனவர்களும் இல்லை. உள்நாட்டு நீர்வழி போக்குவரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X