ஒருத்தரையும் விடமாட்டேன்: மம்தா ஆவேசம்

Updated : ஏப் 02, 2021 | Added : ஏப் 02, 2021 | கருத்துகள் (34)
Share
Advertisement
கோல்கட்டா: மேற்குவங்கத்தில் பா.ஜ., செய்யும் வன்முறை சம்பவங்களை குறிப்பிட்டு பேசிய அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, ‛தேர்தல் முடிவடையும் வரை மட்டுமே நான் காத்திருப்பேன்; ஒருத்தரையும் விடமாட்டேன்' என ஆவேசமாக பேசியுள்ளார்.மேற்குவங்கத்தில் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. நேற்று (ஏப்.,1) முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் உள்ளிட்ட 30
WestBengalElections, MamataBanerjee, Campaign, மேற்குவங்கம், மம்தா பானர்ஜி, பிரசாரம், பாஜக

கோல்கட்டா: மேற்குவங்கத்தில் பா.ஜ., செய்யும் வன்முறை சம்பவங்களை குறிப்பிட்டு பேசிய அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, ‛தேர்தல் முடிவடையும் வரை மட்டுமே நான் காத்திருப்பேன்; ஒருத்தரையும் விடமாட்டேன்' என ஆவேசமாக பேசியுள்ளார்.

மேற்குவங்கத்தில் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. நேற்று (ஏப்.,1) முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் உள்ளிட்ட 30 தொகுதிகளுக்கான 2ம் கட்ட தேர்தல் நடைபெற்றது.

இந்நிலையில், இன்று தின்ஹாட்டா-சன்ஹாட்டி மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் மம்தா பேசியதாவது: பா.ஜ., நமது கட்சி தொண்டர்கள் பலரை கொலை செய்துள்ளது. தேர்தல் முடிவடையும் வரை மட்டுமே நான் காத்திருப்பேன்; ஒருத்தரையும் விடமாட்டேன். நான் வெற்றிப்பெறுவேன் என்பது தெரியும். ஆனால், மற்ற திரிணமுல் காங்., வேட்பாளர்களும் வெற்றிப்பெற்றால் தான், நாம் 200 இடங்களில் வென்று ஆட்சியை தக்கவைக்கமுடியும்.


latest tamil news


இல்லையென்றால், இலவச ரேசன், இலவச சைக்கிள் மற்றும் விவசாயிகளுக்கு இலவச நிலம் கிடைக்காது. பா.ஜ.,விடம் சொந்த வேட்பாளர்கள் கூட இல்லை. கம்யூனிஸ்ட் மற்றும் திரிணமுல் கட்சியின் துரோகிகளை கடனாக பெற்று வேட்பாளராக நிறுத்தியுள்ளனர். திரிணமுல் காங்.,கில் இருந்தவர்கள், இப்போது அவர்கள் பணத்தை காப்பாற்ற பா.ஜ.,வுக்கு சென்றுள்ளனர். நான் தனியாக இருக்கிறேன், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள் என்னை எதிர்த்துப் போராட வந்திருக்கிறார்கள். அவர்கள் பல ஹோட்டல்கள், விமானங்கள் மற்றும் கார்களை வாடகைக்கு எடுத்துள்ளனர். அசாமில் இருந்தும்கூட அழைத்து வரவுள்ளனர். ஏப்.,6ம் தேதி அசாம் தேர்தல்கள் முடிந்ததும் அனைவரையும் இங்கு அழைத்து வருவார்கள். அவர்கள் மேற்குவங்கத்திற்குள் நுழைய கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
03-ஏப்-202111:51:06 IST Report Abuse
Malick Raja தேர்தல் முடிவுகள் வந்தபின் பார்ப்பதை தான் அவர் சொல்கிறார் .. மங்குணிகளுக்கு ஒரே குறிக்கோள் மம்தாவை வீழ்த்தவேண்டும் என்பதே .. ஆனால் மங்குனி மங்குனியாக இருக்கவேண்டிய நிலையம் வந்துதான் ஆகவேண்டும் .. பிறப்பென்றால் இறப்பு இருக்கும்போது தேர்தல் வெற்றி தோல்வியெல்லாம் கானல் நீராகவே இருக்கும் .. இது மனிதமாண்புள்ளவர்களுக்கு மட்டும் என்பது உண்மை
Rate this:
Cancel
ram - mayiladuthurai,இந்தியா
03-ஏப்-202110:51:07 IST Report Abuse
ram டென்ஷன் ஆகி எழுந்து நடக்க போறாங்க அப்புறம் .....
Rate this:
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
03-ஏப்-202106:31:28 IST Report Abuse
Indhuindian ரிசல்ட் வந்தப்பறம் ஒரே த்ரில்லதான் போங்க. ரன்னிங்கு, சேசிங்கு, ஷூட்டிங்குன்னு ஒரே ஆக்க்ஷன் பிலிம்தான் போங்க. நம்ம டிவி சானலுக்கெல்லாம் காசு குடுக்காமயே த்ரில்லிங் படம் போடலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X