சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

தனக்குத் தானே ஆப்பு!

Added : ஏப் 02, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
தனக்குத் தானே ஆப்பு!'கட்சிக்காகவும், ஆட்சி அமைவதற்காகவும் எவ்வளவு தியாகம் செய்திருக்கிறேன்... இப்படி நடுத்தெருவில் விட்டு விட்டனரே' என, கண்ணீர் வடிக்கிறார், கர்நாடக மாநில முன்னாள் நீர்வளத்துறை அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளி. இவர், கர்நாடக மாநில, பா.ஜ., பிரமுகர்களில் செல்வாக்கு மிக்கவர். மாநிலத்தின் குறிப்பிட்ட சில பகுதிகளில், இவருக்கும், இவரது குடும்பத்தினருக்கும்

அக்கம் பக்கம்

தனக்குத் தானே ஆப்பு!

'கட்சிக்காகவும், ஆட்சி அமைவதற்காகவும் எவ்வளவு தியாகம் செய்திருக்கிறேன்... இப்படி நடுத்தெருவில் விட்டு விட்டனரே' என, கண்ணீர் வடிக்கிறார், கர்நாடக மாநில முன்னாள் நீர்வளத்துறை அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளி. இவர், கர்நாடக மாநில, பா.ஜ., பிரமுகர்களில் செல்வாக்கு மிக்கவர். மாநிலத்தின் குறிப்பிட்ட சில பகுதிகளில், இவருக்கும், இவரது குடும்பத்தினருக்கும் கணிசமான ஓட்டு வங்கி உள்ளது.
கர்நாடகாவில், எடியூரப்பா தலைமையிலான, பா.ஜ., அரசு அமைவதற்கு, இவரும் ஒரு முக்கிய காரணம். சமீபத்தில் வெளியான ஒரு வீடியோ, ரமேஷின் அரசியல் வாழ்க்கையை பாதாளத்தில் தள்ளிவிட்டது. ஒரு பெண்ணுடன், ஜார்கிஹோளி இருப்பது போன்ற அந்த வீடியோ, கடந்த சில மாதங்களுக்கு முன், சமூக வலைதளங்களில் பரவியது. இதனால், மாநிலம் முழுதும் ஜார்கிஹோளிக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. வேறு வழியின்றி அவரை, அமைச்சர் பதவியிலிருந்து துாக்கி அடித்தார், முதல்வர் எடியூரப்பா.
'எதிர்க்கட்சியினரின் சதியில் சிக்கிவிட்டேன். கட்சி மேலிடமும், இதை புரிந்து கொள்ளவில்லை. தினமும், என் வீட்டு வாசலில், நுாற்றுக்கணக்கான தொண்டர்கள் நிற்பர். இப்போது, ஒரு ஈ, காக்கையை கூட காணவில்லை' என, புலம்புகிறார் ஜார்கிஹோளி. 'தனக்குத் தானே ஆப்பு வைத்து, இப்போது கட்சி மேலிடத்தை குற்றம்சாட்டி என்ன பயன்... ஜார்கிஹோளி இனி அரசியலை மறக்க வேண்டியது தான்' என,கடுப்புடன் கூறுகின்றனர், பா.ஜ., தலைவர்கள்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
03-ஏப்-202105:34:15 IST Report Abuse
NicoleThomson அசிங்கமான நடத்தை உள்ளவர்களை இப்படி தான் நடத்தவேண்டும் என்று கருநாடக மக்கள் புரிந்து வைத்துள்ளனர் , தமிழக மக்களோ ரைடை ஊடகங்களில் பார்த்தாலும் யாருக்கு ஒட்டு போடுவார் என்பதனை பார்த்தபிறகே சொல்ல முடியும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X