டவுட் தனபாலு| Dinamalar

சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : ஏப் 02, 2021 | கருத்துகள் (3)
Share
மத்திய அமைச்சர் அமித் ஷா: தி.மு.க., - காங்., கூட்டணிக்கு தமிழக மக்களைப் பற்றி கவலை இல்லை. சோனியாவிற்கு, ராகுலை நினைத்து கவலை; ஸ்டாலினுக்கு, உதயநிதியை நினைத்து கவலை. ஆனால், பிரதமர் மோடிக்கு தமிழ் மொழியின் மீதும், தமிழக மக்கள் மீதும், மிகப்பெரிய அன்பும், பாசமும் உள்ளது. தமிழக மக்களைப் பற்றி கவலைப்பட்ட தலைவர்களில் மோடியை விட யாரும் இருந்திருக்க முடியாது. 'டவுட்' தனபாலு:

'டவுட்' தனபாலு

மத்திய அமைச்சர் அமித் ஷா: தி.மு.க., - காங்., கூட்டணிக்கு தமிழக மக்களைப் பற்றி கவலை இல்லை. சோனியாவிற்கு, ராகுலை நினைத்து கவலை; ஸ்டாலினுக்கு, உதயநிதியை நினைத்து கவலை. ஆனால், பிரதமர் மோடிக்கு தமிழ் மொழியின் மீதும், தமிழக மக்கள் மீதும், மிகப்பெரிய அன்பும், பாசமும் உள்ளது. தமிழக மக்களைப் பற்றி கவலைப்பட்ட தலைவர்களில் மோடியை விட யாரும் இருந்திருக்க முடியாது.

'டவுட்' தனபாலு: ஸ்டாலின், அழகிரி, திருமாவளவன், தி.க.வீரமணி போன்றோரின் தவறான வழிகாட்டுதலின்படி, தமிழக இளைஞர்கள் சிலர், அவர்களுக்கு ஆதரவாகவும், நாட்டின் நலனுக்கு எதிராகவும் செயல்படுகின்றனரே என்ற கவலை, பிரதமர் மோடிக்கு இருந்திருக்குமோ என்ற, 'டவுட்' உங்கள் பேச்சின் மூலம் தென்படுகிறது!


பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்:
தமிழகத்தின் தேர்தல் களம், அ.தி.மு.க., - பா.ம.க., கூட்டணிக்கு சாதகமாக அமைந்திருக்கிறது. மக்களின் ஆதரவு நன்றாக விளைந்திருக்கிறது. அதை பக்குவமாக அறுவடை செய்ய வேண்டியது மட்டும் தான் நம் பணி. அடுத்த, ஐந்து நாட்களுக்கு நாம் வழங்கவிருக்கும் உழைப்பும், அதன் பின், ஓட்டு எண்ணிக்கை வரை, நாம் மேற்கொள்ளவிருக்கும் கண்காணிப்பும் தான், 234 தொகுதிகளிலும் நமக்கு வெற்றியைத் தேடித் தரப் போகின்றன.

'டவுட்' தனபாலு: கடந்த, 40 ஆண்டுகளில், குறைந்தபட்சம், எட்டு சட்டசபை தேர்தல்களையாவது சந்தித்திருப்பீர்கள். அவற்றில் சில தேர்தல்களில், அமோக வெற்றியும் பெற்றுள்ளீர்கள். அந்த வெற்றியால், உங்களை சார்ந்த கட்சியினருக்கோ அல்லது மக்களுக்கோ என்ன நன்மை கிடைத்துள்ளது... எனவே, இப்படி பேசுவது, கட்சியினரை உசுப்பேற்றத் தானோ என்ற, 'டவுட்' வருகிறது!


தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி:
தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, தமிழக வளர்ச்சிக்கான பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து, விரிவாக பேசுவார் என, அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதமர், தம் தகுதிக்கு குறைவான பல்வேறு கருத்துகளை கூறியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

'டவுட்' தனபாலு: தி.மு.க., கூட்டணியில், 'எக்ஸ்ட்ரா லக்கேஜ்' போல ஒட்டிக் கொண்டிருக்கும் காங்கிரசுக்கு, தி.மு.க.,வின் ராசா போன்றவர்கள், பெண்களை அவதுாறாக பேசும் போது கண்டிக்க திராணி கிடையாது. அப்படி ஏதேனும் பேசினால், கூட்டணியிலிருந்து, தி.மு.க., கழற்றி விட்டு விடும்; முகவரி இல்லாமல் போய் விடும் என்ற பயம் தான், உங்கள் கட்சித் தலைவர்களின் மவுனத்திற்கு காரணம் என்பதில், தமிழக மக்களுக்கு, 'டவுட்டே' வராது!

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X