பொது செய்தி

இந்தியா

ஏப்.,15ல் கொரோனா 2வது அலை உச்சம் தொடும்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Updated : ஏப் 04, 2021 | Added : ஏப் 02, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி :'நம் நாட்டில், கொரோனாவின் இரண்டாவது அலை, ஏப்., 15ம் தேதிக்கு பின், உச்சத்தை தொடும்; எனினும், மே இறுதியில், கொரோனா பரவல் குறையத் துவங்கி விடும்' என, விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.நம் நாட்டில், கொரோனா பரவலை தடுக்க, கடந்தாண்டு மார்ச் இறுதியில், நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. தற்போதும், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. மீண்டும்
ஏப்., 15ல் கொரோனா ,2வது அலை... உச்சம்,இந்திய விஞ்ஞானிகள் எச்சரிக்கை

புதுடில்லி :'நம் நாட்டில், கொரோனாவின் இரண்டாவது அலை, ஏப்., 15ம் தேதிக்கு பின், உச்சத்தை தொடும்; எனினும், மே இறுதியில், கொரோனா பரவல் குறையத் துவங்கி விடும்' என, விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நம் நாட்டில், கொரோனா பரவலை தடுக்க, கடந்தாண்டு மார்ச் இறுதியில், நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. தற்போதும், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது.


மீண்டும் அதிகரிப்பு



கடந்தாண்டு ஜூன் முதல், செப்., வரை, கொரோனா பரவல் மிகவும் அதிகமாக இருந்தது. தினமும், 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். எனினும், அக்., முதல், கொரோனா பரவல் குறையத் துவங்கியது. இதனால், மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இதற்கிடையே, இந்தாண்டு துவக்கத்தில், மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி துவங்கி, வேகமாக நடந்து வருகிறது. தினமும், 10 ஆயிரத்துக்கு குறைவானவர்களே, கொரோனாவால் பாதிக்கப் பட்டு வந்த நிலையில், பிப்., இறுதியில், மீண்டும் அதிகரிக்க துவங்கியது. கடந்த சில நாட்களாக, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது. நேற்று முன்தினம், 72 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று, பாதிப்பு, 81 ஆயிரத்தை கடந்தது.


இரண்டாவது அலை



பஞ்சாப், மஹாராஷ்டிரா, குஜராத் உட்பட சில மாநிலங்களில், கொரோனா பரவல் மிகவும் அதிகரித்து.உள்ளது. இந்த மாநிலங்களில், மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் பேராசிரியர் மனிந்திர அகர்வால் உள்ளிட்ட விஞ்ஞானிகள் சிலர், கொரோவின் இரண்டாவது அலை பரவல் பற்றி, கணித முறையில் ஆய்வு செய்தனர். ஆய்வில் அவர்கள் கூறியுள்ளதாவது:

நம் நாட்டில், கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது; இது, ஏப்., 15க்கு பின், மிகவும் அதிகரிக்கும். தினமும், ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்படும்
அபாயம் உள்ளது.எனினும், மே மாத மத்தியில், கொரோனா பரவல் குறையத் துவங்கும். மே இறுதியில், தொற்று பரவலில் பெரும் மாற்றத்தை நாம் காணலாம். தற்போதுள்ள நிலையில், முதலில் பஞ்சாபிலும், அதன் பின், மஹாராஷ்டிராவிலும் தொற்று பரவல் மிகவும் அதிகரிக்கும் என, தெரிகிறது. கொரோனா தடுப்பில், தடுப்பூசி முக்கிய பங்கு வகிக்கிறது. தடுப்பூசி போடும் பணிகளை அதிகப்படுத்தினால், கொரோனா பரவலை விரைவில் குறைத்து விடலாம்.
இவ்வாறு விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.


மூன்றாவது 'டோஸ்'



தன்னார்வலர்கள் சிலருக்கு, பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள, 'கோவாக்சின்' தடுப்பூசியின் மூன்றாவது, 'டோஸ்' செலுத்தி பரிசோதிக்க, இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.'மூன்றாவது டோஸ் செலுத்திக் கொள்ளும் தன்னார்வலர்களை, ஆறு மாதம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்' என, பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு, மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathaiyyan - Kolkata,இந்தியா
03-ஏப்-202118:54:14 IST Report Abuse
Loganathaiyyan அப்போ 89,129 பேர் கொரோன பாதிப்பு உச்சம் இல்லையா அப்போ என்ன 3 லட்சம் ஏப்ரல் 15 ஆந்தேத்தி வந்ததுதான் உச்சமா???அய்யோ நாராயாணா ஈஸ்வரா காப்பாத்து எங்களை
Rate this:
Cancel
Balaji - Chennai,இந்தியா
03-ஏப்-202111:35:29 IST Report Abuse
Balaji வண்டாய்ங்கப்பா ஆரூடம் சொல்ல.. அப்போ எல்லாமே செரியாப்போடும்னு தான் நினைக்கறேன்.. ஹி ஹி..
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
03-ஏப்-202106:16:41 IST Report Abuse
Mani . V தேர்தலை முன்னிட்டு கொரோனா ஏப்ரல் 14 வரை ஓய்வு எடுத்துக் கொண்டு, பின்னர், ஆக்ரோஷமாக தாக்கும். அதுனால, எங்களுக்கு ஓட்டுப் போட்டு விட்டு செத்தொழியுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X