அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும்

Updated : ஏப் 04, 2021 | Added : ஏப் 03, 2021 | கருத்துகள் (42+ 74)
Share
Advertisement
மதுரை :''தி.மு.க.,- காங்., நமக்கு பாதுகாப்பு தரமுடியாது; சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போகும். தி.மு.க., தங்கள் குடும்ப சிக்கலை பயன்படுத்தி மதுரை வன்முறை நகர் என்ற தோற்றத்தை உருவாக்கினர்'' என மதுரையில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி பேசினார்.மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பேசியதாவது:நேற்று(ஏப்.,1) மீனாட்சி அம்மன்
தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும்

மதுரை :''தி.மு.க.,- காங்., நமக்கு பாதுகாப்பு தரமுடியாது; சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போகும். தி.மு.க., தங்கள் குடும்ப சிக்கலை பயன்படுத்தி மதுரை வன்முறை நகர் என்ற தோற்றத்தை உருவாக்கினர்'' என மதுரையில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி பேசினார்.மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பேசியதாவது:

நேற்று(ஏப்.,1) மீனாட்சி அம்மன் கோயிலுக்கு செல்லும் அரிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. என் வாழ்நாளில் மிச்சம் இருக்கிற நாட்களை அந்த ஆன்மிக நினைவுகளுடன் அசைபோட்டு கொண்டு இருப்பேன். இந்த மதுரை மண் புண்ணிய பூமியாகவும், வீரபூமியாகவும் விளங்குகிறது. அழகர் பெருமான் கோயில் இருக்கிற மண், கூடலழகர், திருப்பரங்குன்றம் முருகன் கொலு வீற்றிருக்கிற மண். மதுரை மண்தான் தமிழ்நாட்டின் நாகரிகத்தின் பண்பாட்டு தொட்டிலாக விளங்குகிறது. உலகின் மிகப்பழமையான தமிழ் மொழிக்கும், மதுரைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. மதுரை என்று சொன்னதும் நம் நினைவுக்கு வருவது தமிழ்ச்சங்கம் வளர்த்த மதுரை.


எம்.ஜி.ஆரும், மதுரையும்பல நுாற்றாண்டுகளுக்கு முன் என் சொந்த மாநிலமான குஜராத்திலிருந்து இங்கு வந்த சவுராஷ்டிரா சமூக மக்கள் இங்கே இருக்கிறார்கள். அதேபோல் பெரிய எண்ணிக்கையில் தெலுங்கு பேசும் மக்களும் இருக்கிறார்கள். ஒரே நாடு, பெருமைமிகு நாடு என்பதன் வெளிப்பாடாக ஒட்டுமொத்த மதுரையை பார்க்கிறேன். எம்.ஜி.ஆருடன் நெருங்கிய தொடர்பு உடையது மதுரை. மதுரை வீரன் என்ற அவரது படத்தை யாராவது மறக்க முடியுமா. அதுபோல் எம்.ஜி.ஆரின் சினிமா பாடல்களுக்கு குரல் கொடுத்தவர் மதுரை டி.எம். சவுந்திரராஜன்.1980ல் மத்தியில் ஆண்ட காங்., அரசு எம்.ஜி.ஆர்., அரசை கலைத்தது. மீண்டும் தேர்தல் நடந்தபோது இதே மதுரை மண்ணின் மேற்கு தொகுதியில் எம்.ஜி.ஆர்., தேர்ந்தெடுக்கப்பட்டார்.

எம்.ஜி.ஆருக்கு பின்னால் மதுரை மக்கள் வலிமையான கற்பாறையாக இருந்தார்கள். 1977, 1980, 1984ல் எம்.ஜி.ஆர்., தென்மாவட்டங்களில் இருந்துதான் தொடர்ந்து வெற்றி பெற்றார். அவரது முழுமையான சமுதாய பார்வை நமக்கு எப்போதும் ஊக்கமும், உற்சாகமும் கொடுக்கக்கூடியது.எல்லோருக்குமான வளர்ச்சி என்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் மந்திரம் இருக்கிறதே, அது 130 கோடி இந்தியர்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றத்தை உருவாக்கி கொண்டிருக்கிறது. தமிழகத்தில் அதுவும் தென்மாவட்டங்களில் உள்கட்டுமானம், நீர்பாசனம், முதலீடு போன்றவற்றிக்கு அதிக கவனமும், முக்கியத்துவமும் கொடுத்து வருகிறோம். சென்றாண்டு டில்லி செங்கோட்டையில் பேசும் போது, அரசாங்கம் 100 லட்சம் கோடி ரூபாயை அடுத்த தலைமுறை உள்கட்டமைப்புக்காக செலவிடும் என்று நான் சொன்னேன்.

தவிர, எதிர்கால தலைமுறையினரும் இதன்மூலம் பலன் பெறுவார்கள். மத்திய பட்ஜெட்டில் நிறைய பொருளாதார வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.குறிப்பாக மதுரை - கொல்லம் ரயில்வே வழித்தடம். ரயில்வே கட்டுமானங்களுக்கு இதுவரை வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு 2009ம் ஆண்டை ஒப்பிடும்போது 238 சதவீதம் அதிகமாக ரயில்வே கட்டுமான திட்டங்கள் தமிழகத்திற்கு மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளன. மிகப்பெரிய திட்டங்கள் இந்த 7 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்டுள்ளன. வரும் ஆண்டுகளில் இதைவிட அதிகமான மெட்ரோ, சாலைகள், ரயில்கள் வசதி கொண்டு வர உள்ளோம். அதேபோல் மின்னணு கட்டுமானங்களை நாடு முழுவதும் உருவாக்க முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். மிக அதிவேக பிராட்பேண்ட் சர்வீஸ் சேவை கிராமங்களிலும் வழங்கப்பட்டு கொண்டிருக்கிறது.


16 லட்சம் குடிநீர் இணைப்புதமிழ் பண்பாடும், மதுரையும் நீருடன் தொடர்பு உடையவை. இந்தியா முழுவதும் தண்ணீரை சேமிக்க வேண்டும் என்பதை இந்த தேசம் உணரத்தொடங்கியுள்ளது. அதற்காக 'ஜல் ஜீவன்' என்ற திட்டத்தை அறிவித்தோம். இதன்மூலம் 2024ம் ஆண்டிற்குள் இந்தியாவில் ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் மூலம் தண்ணீர் வழங்கப்படும். இத்திட்டத்தின்கீழ் தமிழகத்தில் 16 லட்சம் குழாய் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.மத்திய, மாநில அரசுகள் இணைந்து நிறைய குடிநீர் திட்டங்களை தமிழகத்தில் துவங்கி உள்ளோம். அவை 24 மணி நேரமும் தடையற்ற வகையில் குடிநீர் வழங்கக்கூடிய திட்டங்கள். மதுரை வைகையில் எப்போதும் இல்லாத அளவிற்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் என நம்புகிறேன். அதுபோல் 'சொட்டு பாசனம்; கொட்டும் பயிர்கள்' என்ற தொடர்ச்சி 6ம் பக்கம்அடிப்படையில் விவசாயிகளுக்கு இன்னும் அதிகமான தண்ணீர் கொடுத்து தண்ணீரை சேமித்து அதன்மூலம் விவசாய உற்பத்தியை பலமடங்கு உயர்த்துவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.


தென்மாவட்டங்களில் தொழில் வளர்ச்சிதேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்கிறார்கள் என்றால், இந்த பகுதிக்கு அதிக தொழில் முதலீடுகளை கொண்டு வருகிறோம் என்று அர்த்தம். அதற்கான சூழ்நிலைகளையும், தொழிற்சாலைகளையும் இங்கே நிறுவ உள்ளோம். குறிப்பாக விவசாயம் சார்ந்த தொழில்கள். எவையெல்லாம் விவசாயிகளுக்கு மதிப்புக்கூட்டுகளை செய்து லாபம் அடைய செய்யுமோ அத்தொழில்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும். அதிலும் உணவு பதப்படுத்துதல் தொழிலுக்கு இன்னும் கூடுதலாக முக்கியத்துவம் கொடுத்து கொண்டிருக்கிறோம்.தமிழக இளைஞர்கள் வேலைகளை உருவாக்குபவர்களாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டு கொண்டிருக்கிறோம். வர்த்தகத்தை வசதியாக்க பல சீர்த்திருத்தங்களை செய்திருக்கிறோம். புதுப்புது தொழில் தொடங்குபவர்களுக்கு உதவி கொண்டிருக்கிறோம். வரி என்ற பெயரில் வரிக்கொடுமை இருக்கக்கூடாது என்று அதை குறைத்துக்கொண்டிருக்கிறோம்.ஜவுளி துறைக்கு அதிக கடன்களையும் புதிய இயந்திரங்களை வாங்க ஊக்குவிக்கவும் பல திட்டங்களை அறிவித்திருக்கிறோம். அடுத்த 3 ஆண்டுகளில் 7 புதிய ஜவுளி பூங்காக்கள் தமிழகத்தில் வரவுள்ளன.


தி.மு.க., - காங்., வெட்கப்பட வேண்டும்தி.மு.க., - காங்.,க்கு சரியான திட்டங்கள் எதுவுமில்லை. ஆனால் பொய் சொல்வதில் இருந்து அவர்கள் தங்களை கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும். மக்கள் முட்டாள்கள் அல்ல. தி.மு.க., - காங்., தொடர்ந்து தங்களை தமிழ் பண்பாட்டின் பாதுகாவலராக சித்திரித்துகொண்டிருக்கிறார்கள். 2011ல் மத்திய காங்., அரசில் தி.மு.க.,வுக்கு கேபினட் பதவிகள் வழங்கப்பட்டன. அந்த அரசுதான் தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது. ஒரு காங்., தலைவர், ஜல்லிக்கட்டை காட்டுமிராண்டித்தன நடைமுறை என்று சொன்னார். 2016ல் தமிழக காங்., தேர்தல் அறிக்கையில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஜல்லிக்கட்டை முழுமையாக தடை செய்வோம் என்று சொல்லியது. தற்போது தி.மு.க.,வும், காங்.,ம் தங்கள் நிலை குறித்து வெட்கப்பட வேண்டும்.2016-17 ல் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று தமிழக மக்கள் கேட்டபோது அவர்களின் மனவேதனை புரிந்தது. அதனால்தான் அ.தி.மு.க., அரசு ஜல்லிக்கட்டை நடத்த ஒரு சட்டத்திருத்தத்தை கொண்டு வந்தபோது நான் உடனே அதற்கு ஒப்புதல் அளித்து ஜல்லிக்கட்டு நடத்த முழு முயற்சி செய்தேன்.


சர்வதேச தரத்தில் எய்ம்ஸ்காங்.,ம், தி.மு.க.,வும் வேலையே செய்யாமல், அடுத்தவர் வேலை செய்தால் அதைப்பற்றி இட்டுக்கட்டு பொய் சொல்வதில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். அதற்கு சிறந்த உதாரணம், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை. பல ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி செய்த காங்., - தி.மு.க., கூட்டணி அரசு, மதுரையில் எய்ம்ஸ் கொண்டு வரவேண்டும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனை சர்வதேச தரத்துடன் விரைவாக, முறையாக அமையும்.3 மாவட்டங்களுக்கு ஒரு மருத்துவக்கல்லுாரி அமைப்பதில் தீவிரமாக உள்ளோம். மருத்துவ படிப்புகளுக்கான 'சீட்' எண்ணிக்கையை அதிகரித்துள்ளோம். மருத்துவம், பொறியியல் படிப்புகளை தமிழில் படிக்க உத்தரவாதம் அளித்திருக்கிறோம். தி.மு.க., - காங்., சொல்வது எல்லாம் பொய் என்பதற்கு இன்னொரு உதாரணம், தேவேந்திரகுல வேளாளர் சமூகம் தொடர்பானது. 70 ஆண்டுகளாக இச்சமூகத்திற்கு காங்., எதுவும் செய்யவில்லை. ஆனால் பா.ஜ,வும், அ.தி.மு.க., அரசுகள் சேர்ந்து பணியாற்றி தேவேந்திர குலவேளாளர் சமூகத்தின் கண்ணியத்தை மீட்டெடுத்தன.


வன்முறை நகரா மதுரைதி.மு.க., காங்., நமக்கு பாதுகாப்பு தரமுடியாது. சட்டம் ஒழுங்கு சூழல் சீர்குலைந்து போகும். தி.மு.க., தங்கள் குடும்ப சிக்கலை பயன்படுத்தி மதுரையை வன்முறை நகர், கொலை நகர் என ஒரு தோற்றத்தை உருவாக்கினர். மதுரை மக்கள் அமைதியை விரும்புபவர்கள். பெண்கள் சக்தியை எப்படி மதிக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுக்கும் மண் மதுரை. இங்கே மீனாட்சி, கண்ணகி, ராணி வேலுநாச்சியார், ராணி மங்கம்மாளுக்கு கொடுக்கும் மரியாதையை பார்க்கிறோம். அதனால்தான் பெண்களின் வாழ்க்கை முன்னேற பல்வேறு முயற்சிகளை இந்த அரசு செய்து வருகிறது. மதுரையின் மதிப்பீடுகளை தி.மு.க., - காங்., கொஞ்சம்கூட புரிந்துக்கொள்ளவில்லை. அவர்கள் திரும்ப திரும்ப பெண்களை அவமானப்படுத்தினால் நான் கொஞ்சம்கூட ஆச்சரியப்பட மாட்டேன். அது அவர்களின் இயல்பு.துாங்கா நகரமான மதுரை எப்போதும் துாங்குவது இல்லை. அரசியல் யதார்த்தத்திற்கு கூட துாங்காமல் விழித்திருக்கும். முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிப்பதற்காககூட இந்த நகரம் துாங்காமல் விழித்திருக்கும். இவ்வாறு பேசினார்.


'நலமா... நல்லா இருக்கீங்களா' : தமிழில் விசாரித்த மோடி* பிரதமர் மோடி மதுரை பசுமலை ஓட்டலில் இருந்து காலை 11:13 மணிக்கு புறப்பட்டு 11:45 மணிக்குமேடைக்கு வந்தார். அப்போது பா.ஜ.,வினர் வெற்றி வேல், வீரவேல் என கோஷமிட்டு வரவேற்றனர்.

* மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் 36 பேருக்கு ஆதரவாக மோடி பிரசாரம் செய்தார்.

* செய்தியாளர்களுக்கு குடிநீர் வசதி செய்துதரவில்லை. தண்ணீர் பாட்டில் எடுத்துச்செல்லவும் அனுமதிக்கவில்லை. இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கும், பா.ஜ.,வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் சமரசம் செய்தனர்.

* அமைச்சரும், திருமங்கலம் வேட்பாளருமான உதயகுமார் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். மதுரை அ.தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளரும், திருப்பரங்குன்றம் வேட்பாளருமான ராஜன்செல்லப்பா வரவேற்று பேசினார். அமைச்சரும், மேற்கு தொகுதி வேட்பாளருமான செல்லுார் ராஜூ நன்றி கூறினார்.

*அமைச்சர் உதயகுமார் மோடியை பேச அழைத்தபோது “கொரோனா தடுப்பூசியை உலகிற்கு முதன் முதலில் கண்டுபிடித்து தந்துள்ள பிரதமர் மோடியே…” என புகழாராம் சூட்டினார்.

*மோடியின் ஆங்கில பேச்சு தமிழில் முன்கூட்டியே மொழி பெயர்த்து வைக்கப்பட்டது. அதை பா.ஜ., நிர்வாகி சீனிவாசன் வாசித்தார்

*துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேச துவங்கும்போதும் முடிக்கும் போதும் ஆங்கிலத்தில் பேசினார்.

*முதல்வர் பழனிசாமி பேசும்போது உணர்ச்சிவசப்பட்ட தொண்டர்கள் பாரத் மாதா கீ ஜே… என முழக்கமிட்டனர்.

*அமைச்சர் செல்லுார் ராஜூ நன்றி கூறும் போது பிரதமர், முதல்வர், துணை முதல்வர் என மேடையில் யாருமே இல்லை.

*த.மா.கா., சார்பில் பேசிய முன்னாள் எம்.பி., ராம்பாபு சவுராஷ்டிர மொழியிலும் சில நிமிடங்கள் பேசினார். பா.ம.க., சார்பில் ஆத்துார் வேட்பாளர் திலகபாமா பேசினார்.

* மதியம் 12:10 மணிக்கு 'வெற்றிவேல், வீரவேல்' எனக்கூறி மோடி பேச்சை ஆரம்பித்தார். 'வணக்கம். நல்லா இருக்ககீங்களா. மதுரை வந்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி' என்று தமிழில் பேசினார். மதியம் 12:45 பேச்சை நிறைவு செய்தார்.

*நிருபர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் வி.ஐ.பி.,கள் உட்கார சிறப்பு பாதுகாப்பு படையினர் அனுமதித்தனர். இருக்கைகள் இன்றி ஒன்றரை மணிநேரத்திற்கும் மேல் நிருபர்கள் தவித்தனர்.துணை கமிஷனர் பழனிக்குமார் நிருபர்களின் நிலையை பார்த்து அவர்களை வி.ஐ.பி., பகுதிக்குள் அமர அனுமதித்தார்.கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் சிலர் தகாத வார்த்தைகள் பேசியதால் நிருபர்கள் நிகழ்ச்சியை புறக்கணிப்பதாக வெளியேறினர். அவர்களை நிர்வாகிகள் சமாதானப்படுத்தினர்.


தண்ணீரின்றி 4 மணிநேரம் தவித்த தொண்டர்கள்!பிரசார பொது கூட்டத்திற்கு காலை 8:30 மணிக்கே தொண்டர்கள், நிர்வாகிகள் வருகை தந்தனர். கடும் சோதனைக்கு பின் அனுமதிக்கப்பட்டனர். பாதுகாப்பு கருதி தண்ணீர் பாட்டில்கள் கொண்டுவர தடை விதிக்கப்பட்டிருந்தது. அதேநேரம் அரங்கத்தில் எந்த இடத்திலும் குடிநீர் வசதி செய்யப்படவில்லை. இதனால் கொளுத்தும் வெயிலில் நாலரை மணிநேரம் அவதியுற்ற தொண்டர்கள் அதிருப்தியில் கோஷமிட்டும் மேடையில் இருந்த நிர்வாகிகள் கண்டுகொள்ளவில்லை.


தலைவர்களுக்கு மரியாதைகூட்டத்தில் தலைவர்களை நினைவு கூர்ந்து மோடி பேசியதாவது:தமிழ் இலக்கியங்கள் என்றாலே ஆழமான, ஞானம் கொண்டவை. தமிழ் இலக்கியத்தையும், பண்பாட்டையும் வளர்த்தெடுக்க வருவோர் அனைவரையும் நான் பாராட்டி வணங்குகிறேன். இந்த மதுரை மண் மகாத்மா காந்தியிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய மண். மிகச்சிறந்த ஆளுமையான பசும்பொன் முத்துராமலிங்க தேவர், அச்சமற்ற மருதுபாண்டியர்கள், துணிச்சல் மிகுந்த வீரபாண்டிய கட்டபொம்மன், இமானுவேல்சேகரன், தீர்க்கத்தரிசியான வ.உ. சிதம்பரம், காமராஜர், மதுரை என்.எம்.ஆர்., சுப்பராமனுக்கு என் மரியாதையை செலுத்துகிறேன் என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (42+ 74)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
04-ஏப்-202101:53:16 IST Report Abuse
J.V. Iyer தீய திராவிட கூட்டங்களுக்கு ஓட்டுப்போட்டு வம்பை விலை கொடுத்து வாங்கினால், அவர்கள் வீடு பெண்களுக்கு பாதுகாப்பில்லை, அவர்கள் உயிருக்கு பாதுகாப்பில்லை, அவர் சொத்துக்களுக்கு அவர்களுக்கு உரிமை இல்லை. அவ்வளவே. தமிழ் நாடு சுடுகாடாகும்.
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
03-ஏப்-202120:46:24 IST Report Abuse
Visu Iyer எல்லையில் பயங்கரவாதத்தை சமாளிக்கும் எங்கள் மோடி ஜி இந்திய ஆட்சி பொறுப்பில் இருப்பதால்.. இதற்கெல்லாம் தமிழகம் பயப்பட தேவையில்லலை.. எல்லோரும் திமுகவுக்கே ஒட்டு போடுங்க என்று பிரதமர் சொல்வது தெளிவாக புரிகிறது...
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - LAKE VIEW DR, TROY 48084,யூ.எஸ்.ஏ
03-ஏப்-202119:43:32 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN     எட்டு வழிச்சாலை வந்தே தீரும். ஸ்டெர்லைட் திறந்தே தீருவோம்.... நீட் நடந்தே தீரும்.கரூர் அன்புநாதன், சேகர் ரெட்டி, ராம மோகன் ராவ், குட்கா பலவேறு ரைடுகள் நடத்தி,என்ன கண்டுப்பிடிக்கப்பட்டது. என்ன மேல் நடவடிக்கை?? தமிழகத்தில் ரயில்வே,தபால்துறை என எல்லா துறைகளிலும் 90% வட இந்தியர்களை வேலைக்கு அமர்த்திய மோடியையும் அதை பார்த்து க்கொண்டிருக்கு எடப்பாடியையும்,ஆட்சியை விட்டு அகற்றுவோம்
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
03-ஏப்-202120:56:33 IST Report Abuse
Visu Iyerஅகற்றோவோம் என்றால் எப்போதாவது வந்து விடுவார்கள்.. அதனால்.. அடியோடு விரட்டுவோம்.. என்று அழுத்தமாக சொல்லுங்கள்.. அம்மா மரணம் கொடநாடு சம்பவம் தூத்துக்குடி சம்பவம் என சொல்ல நிறையா இருக்குது நண்பரே.......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X