அரசியல் செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: புத்திசாலிகளுக்கு மத்தியில் நடிகர்!

Added : ஏப் 03, 2021 | கருத்துகள் (75)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:எஸ்.விக்னேஷ் குமார், கோவையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில், மத்திய அமைச்சரும், பா.ஜ., துணைத் தலைவருமான ஸ்மிருதி இரானி, கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் வானதியை ஆதரித்து பிரசாரம் செய்தார்.அவர் பேசுகையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலை, வானதியுடன் விவாதம் செய்ய அழைப்பு
Kamal, Kamal Haasan, MNM, கமல், கமல்ஹாசன்


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:


எஸ்.விக்னேஷ் குமார், கோவையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில், மத்திய அமைச்சரும், பா.ஜ., துணைத் தலைவருமான ஸ்மிருதி இரானி, கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் வானதியை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

அவர் பேசுகையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலை, வானதியுடன் விவாதம் செய்ய அழைப்பு விடுத்தார். இதற்கு, ம.நீ.ம., சார்பில், ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், பிரதமர் மோடியுடன் விவாதம் செய்ய, கமல் விரும்புவதாகவும், அதன் பின், ஒவ்வொரு, பா.ஜ., தலைவர்களுடனும் விவாதம் செய்து, கடைசியாக, 'துக்கடா'வான, வானதியுடன் விவாதம் செய்வார் எனக் கூறப்பபட்டுள்ளது.

இதை படித்ததும் சிரிப்பதா, அழுவதா எனத் தெரியவில்லை. ஏனெனில், 2019 லோக்சபா தேர்தலுக்கு முன், தனியார், 'டிவி' நிகழ்ச்சி ஒன்றில், ஸ்மிருதி இரானியும், கமலும் விவாதம் செய்தனர். விவாதம் துவங்கி, சில நிமிடங்கள் மட்டுமே, கமல் தாக்குபிடித்தார். பல கேள்விகளுக்கு, அவர் மவுனமாகவே இருந்தார். பேட்டியின் தொகுப்பாளர் அர்னாப் கோஸ்வாமி பலமுறை, 'அமைதியாக இருக்காமல், ஏதாவது கூறுங்கள்' என வற்புறுத்தியும், பேந்த பேந்த விழித்தார். இதிலிருந்தே, அவரின் சொல்வன்மை விளங்கியது.


latest tamil news


இதை மீண்டும் நிரூபிக்கும் வகையில், சமீபத்தில் நடந்த நிருபர் சந்திப்பில், வன்னியருக்கு வழங்கப்பட்ட, 10.5 சதவீத இட ஒதுக்கீடு பற்றி கேள்வி எழுப்பிய போது, அதற்கு பதில் தெரியாத கமல், பக்கத்தில் இருந்த, பழ.கருப்பையாவிடம், 'மைக்'கை கொடுத்து தப்பித்தார். இப்படிப்பட்ட கமல், பிரதமர் மோடியுடன் தான் விவாதம் செய்வார் என்பது, சிறந்த நகைச்சுவை.

மறைந்த, 'துக்ளக்' ஆசிரியர் சோ, 'நடிகர்களுக்கு மத்தியில், கமல் ஒரு புத்திசாலி; ஆனால், புத்திசாலிகளுக்கு மத்தியில், கமல் ஒரு நடிகர்' என, விமர்சித்தார். அவர் எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி பாருங்கள்! வானதியும் வேண்டாம்; பிரதமரும் வேண்டாம்... எங்கே, ஸ்மிருதி இரானியுடன், கமல் விவாதத்தில் பங்கேற்கட்டும் பார்க்கலாம். அப்போது தெரியும், யார் துக்கடா தலைவர் என்று!

Advertisement
வாசகர் கருத்து (75)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
05-ஏப்-202101:20:43 IST Report Abuse
தல புராணம் அது "சோ" தன்னை பற்றி சொல்லி கொண்டது.. நூலிழைக்கு இந்தாண்டை இருந்ததனால் , சாராய வியாபாரி "சோ" ராமசாயியை அந்த குரூப்பைசார்ந்த சிலர் புத்திசாலி என்று தம்பட்டம் அடிக்கின்றனர். மற்றபடி படங்களில் வந்த ரகத்தை சார்ந்தவர் தான் அந்த நடிகனும்.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
03-ஏப்-202123:29:41 IST Report Abuse
Ramesh Sargam ஒரு கூட்டத்தில் கமல் பேசும்போது 'உங்கள் பொன்னான வாக்குகளை "டார்ச் லைட்" சின்னத்திற்கு போடுங்கள்' என்று பேசியிருக்கிறார். அங்கு இருந்த ஒரு சிலருக்கு, 'டார்ச் லைட்' என்பது 'நக்சலைட்' என்று காதில் விழுந்ததாக பரவலாக ஒரு செய்தி. அந்த அளவுக்கு ஒரு தெளிவில்லை கமலின் வார்த்தைகளில். கொழ கொழா...
Rate this:
Cancel
Dhanraj Jayachandren - Madurai,இந்தியா
03-ஏப்-202120:49:59 IST Report Abuse
Dhanraj Jayachandren Poiyana seithi...Kamala Pathi Cho appadi sollavey illai... Poiyana seithi...sombu adinga poiyana news podatheenga..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X