கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஏ.டி.எம்., கொள்ளையர் அப்பீல் 'டிஸ்மிஸ்'; 6 ஆண்டு சிறை உறுதி

Added : ஏப் 03, 2021
Share
Advertisement
கோவை:ஏ.டி.எம்.,கொள்ளை வழக்கில், மூவர் தாக்கல் செய்த அப்பீல் மனுவை விசாரித்த நீதிமன்றம், கீழ் கோர்ட் அளித்த ஆறாண்டு சிறை தண்டனையை, உறுதி செய்து உத்தரவிட்டது.பீளமேடு, டைடல் பார்க் அருகிலுள்ள ஆக்சிஸ் மற்றும் இண்டஸ் இண்ட் வங்கியின் ஏ.டி.எம்., உடைத்து, 2017, டிச., 9ல், 30 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த வழக்கில், அரியானாவை சேர்ந்த இஸ்லாமுதீன்,43, ம.பி.,யை சேர்ந்த முஸ்தாக், 33, உ.பி.,யை சேர்ந்த

கோவை:ஏ.டி.எம்.,கொள்ளை வழக்கில், மூவர் தாக்கல் செய்த அப்பீல் மனுவை விசாரித்த நீதிமன்றம், கீழ் கோர்ட் அளித்த ஆறாண்டு சிறை தண்டனையை, உறுதி செய்து உத்தரவிட்டது.பீளமேடு, டைடல் பார்க் அருகிலுள்ள ஆக்சிஸ் மற்றும் இண்டஸ் இண்ட் வங்கியின் ஏ.டி.எம்., உடைத்து, 2017, டிச., 9ல், 30 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த வழக்கில், அரியானாவை சேர்ந்த இஸ்லாமுதீன்,43, ம.பி.,யை சேர்ந்த முஸ்தாக், 33, உ.பி.,யை சேர்ந்த ஜுல்பிகர்,25, மவுசம்கான்,30, சுபேர்,29, அமித்குமார்,25, சல்மான் முபாரக்,30, அமீன்,34, மற்றொரு சுபேர் 33, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.இஸ்லாமுதீன், முஸ்தாக் தவிர மற்ற ஏழு பேருக்கும், கோவை ஜே.எம்:2, 2020, அக்., 19 ல், தலா ஆறாண்டு சிறை தண்டனை விதித்தது. தண்டனையை ரத்து செய்ய கோரி, ஜுல்பிகர், அமித்குமார், சல்மான் முபாரக் ஆகியோர் மேல்முறையீடு செய்த மனு மீது, கோவை முதலாவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது.அரசு தரப்பு வக்கீல் நாகராஜ் வாதிடுகையில், ''குற்றவாளிகள் தொடர்ந்து இதே போன்ற குற்றங்களை தொடர்ந்து செய்து வந்துள்ளனர். இந்தியா முழுவதும், 50 க்கும் மேற்பட்ட ஏ.டி.எம்., கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர்களை விடுவித்தால் மீண்டும் இதே போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவார்கள். எனவே அவர்கள் மீதான தண்டனையை உறுதி செய்ய வேண்டும்,'' என்று வாதிட்டார்.விசாரித்த நீதிபதி குணசேகரன், அப்பீல் மனுவை டிஸ்மிஸ் செய்தார். அதை தொடர்ந்து கீழ் கோர்ட் விதித்த ஆறாண்டு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X