கசப்பான அனுபவங்களுக்கு தயாராகுங்கள்: சென்னை மாநகராட்சி கமிஷனர்| Dinamalar

தமிழ்நாடு

கசப்பான அனுபவங்களுக்கு தயாராகுங்கள்: சென்னை மாநகராட்சி கமிஷனர்

Added : ஏப் 03, 2021 | கருத்துகள் (1)
Share
சென்னை : 'சென்னையில், இம்மாத இறுதிக்குள், கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டு வர, கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும். இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டாலும், கசப்பான அனுபவங்களுக்கு பொதுமக்கள் தயாராக இருக்க வேண்டும்,'' என, மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். ஓட்டளிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், சென்னை, வேலம்மாள் வித்யாலயா பள்ளி மாணவர்கள், மெரினா
 கசப்பான அனுபவங்களுக்கு தயாராகுங்கள்: சென்னை மாநகராட்சி கமிஷனர்

சென்னை : 'சென்னையில், இம்மாத இறுதிக்குள், கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டு வர, கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும். இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டாலும், கசப்பான அனுபவங்களுக்கு பொதுமக்கள் தயாராக இருக்க வேண்டும்,'' என, மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

ஓட்டளிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், சென்னை, வேலம்மாள் வித்யாலயா பள்ளி மாணவர்கள், மெரினா கடற்கரையில் வடிவமைத்த, மணல் சிற்பத்தை, மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான பிரகாஷ் பார்வையிட்டார்.அப்போது, அவர் அளித்த பேட்டி:தமிழகத்திலேயே, சென்னையில் தான், மிகக்குறைந்த அளவு ஓட்டுப் பதிவாகிறது. தேர்தலில், 100 சதவீத ஓட்டுப்பதிவை சாத்தியப்படுத்த, வரும், 6ம் தேதி அனைத்து ஊழியர்களுக்கும், ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும்; மீறும் நிறுவனங்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போதைய சூழலில், 52 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தினமும், 30 ஆயிரம் வாகனங்கள் வரை பரிசோதிக்கப்படுகின்றன. சென்னை மாவட்டத்தில், நான்கு தொகுதி களில் பதற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக, காவல் துறையின் உளவு பிரிவு தகவல் அளித்துள்ளது.அதன் பெயர்களை வெளிப்படையாக கூற முடியாது. சென்னையில், முதியோர், மாற்றுத்திறனாளிகள் என, 6,591 பேர் தபால் ஓட்டு அளித்துள்ளனர். 791 ஓட்டுகள் பதிவாகவில்லை. அவர்களுக்கு மறு வாய்ப்பு வழங்கப்படாது.

தேர்தல் பணியில் ஈடுபட உள்ள போலீசாரில், 3,000 பேர் தபால் ஓட்டுகள் பதிவு செய்துள்ளனர்.வரும் நாட்களில், வீடுகள் தோறும் காய்ச்சல் பரிசோதனையில், 6,000 பேர் ஈடுபடுத்தப்படுவர்.ஒரு நாளைக்கு, 100 காய்ச்சல் முகாம்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏப்., இறுதிக்குள் கொரோனா கட்டுக்குள் வரும் என, நம்புகிறோம். மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசித்து, தேர்தலுக்கு பின், மெரினா கடற்கரை உள்ளிட்ட, மக்கள் அதிகம் கூடும் இடங்களில், கட்டுப்பாடுகள் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டாலும், அந்த கசப்பான அனுபவத்தை, மக்கள் ஏற்று கொள்ளதான் வேண்டும். வெளிநாட்டில் இருந்து வருபவர்கள், கொரோனா விதிமுறையை பின்பற்றி ஓட்டளிக்கலாம். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X