கோவில் கிணற்றில் கலக்கும் கழிவுநீர்: பூஜைக்கு தண்ணீர் இன்றி திண்டாட்டம்

Added : ஏப் 03, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
பொள்ளாச்சி;பொள்ளாச்சி - தாலுகா அலுவலக ரோட்டில் மழைநீர் வடிகால் கட்டும் பணி காரணமாக, தேங்கி நிற்கும் கழிவுநீர் கோவில் கிணற்று நீரில் கலந்துள்ளது. இதனால், பூஜைக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.பொள்ளாச்சி தாலுகா அலுவலக ரோட்டில் பிரசித்தி பெற்ற மாகாளியம்மன் கோவில் உள்ளது. இங்கு, அமாவாசை, பிரதோஷம் மற்றும் முக்கிய பண்டிகை நாட்களில் சிறப்பு பூஜைகள்
 கோவில் கிணற்றில் கலக்கும் கழிவுநீர்: பூஜைக்கு தண்ணீர் இன்றி திண்டாட்டம்

பொள்ளாச்சி;பொள்ளாச்சி - தாலுகா அலுவலக ரோட்டில் மழைநீர் வடிகால் கட்டும் பணி காரணமாக, தேங்கி நிற்கும் கழிவுநீர் கோவில் கிணற்று நீரில் கலந்துள்ளது. இதனால், பூஜைக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.பொள்ளாச்சி தாலுகா அலுவலக ரோட்டில் பிரசித்தி பெற்ற மாகாளியம்மன் கோவில் உள்ளது. இங்கு, அமாவாசை, பிரதோஷம் மற்றும் முக்கிய பண்டிகை நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.பூஜைக்கு தேவையான தண்ணீர் பயன்படுத்திக்கொள்ள கிணறும், நகராட்சி சார்பில் குடிநீர் இணைப்பும் இருந்தது.இந்நிலையில், ரோடு விரிவாக்கப்பணிக்காக கோவில் முகப்பு பகுதி இடிக்கப்பட்டு மழைநீர் வடிகால் கட்டும் பணி நடக்கிறது. இப்பணியால், கிணற்றில் கழிவுநீர் கலப்பதால் பூஜைக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.பக்தர்கள் கூறியதாவது:மாகாளியம்மன் கோவிலில் அபிேஷக பூஜை உள்பட பல்வேறு தேவைக்காக, கிணற்று நீரும்; நகராட்சி குடிநீரும் பயன்படுத்தப்பட்டது. ரோடு விரிவாக்கப்பணியால், நகராட்சி குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு, பத்து நாட்களுக்கு மேலாகிறது. இணைப்பு சீரமைக்கப்படாமல் உள்ளது.அதே நேரத்தில், மழைநீர் வடிகால் கட்டும் பணிக்காக கழிவுநீர் தேங்கி நிற்கிறது; கழிவுநீருக்கு மாற்று வழித்தடம் அமைக்காததால், கோவில் கிணற்றில் கலந்துவிட்டது. கழிவுநீர் நிரம்பியுள்ளதால், கிணற்று நீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.கிணற்று நீரும் பயன்படுத்த முடியாத சூழலில், குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளதால் பூஜைகளுக்கு தண்ணீர் இன்றி திண்டாடும் நிலை உள்ளது. பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.கிணற்றில் கலந்துள்ள கழிவுநீர் அகற்றவும்; தேங்கும் கழிவுநீர் செல்ல தற்காலிக மாற்று வழி ஏற்படுத்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். துண்டிக்கப்பட்டு உள்ள, நகராட்சி குடிநீர் இணைப்பை சரி செய்து கொடுக்க வேண்டும்.இவ்வாறு, பக்தர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
03-ஏப்-202113:32:44 IST Report Abuse
Ram Pollachi போயர் சமூகத்திற்கு சொந்தமான கோவில் சாலை விரிவாக்கத்திற்காக இடத்தை கொடுத்தார்கள் அதே கோவிலுக்கு அருகில் மின் டிரான்ஸ்பார்மரை வைத்துள்ளார்கள் வைக்க இடமா இல்லை ? அதிகம் உபயோகிக்கும் கடை வாசலின் முன் வைக்கவும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X