தேர்தல் அலுவலர் உத்தரவு ;மது விற்பனையில் சிக்கல்

Added : ஏப் 03, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி தேர்தல் நடத்தும் அலுவலர் உத்தரவால், டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மது விற்பனை செய்வது குறைந்துள்ளது.பொள்ளாச்சி தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில், டாஸ்மாக் மது விற்பனை கடைகள் செயல்படுகின்றன. இக்கடைகளில், மதுபாட்டில்கள் வாங்குபவர்களுக்கு பில் வழங்கப்படுவதில்லை.இந்நிலையில், தேர்தல் அறிவிக்கப்பட்டு, பிரசாரம் நிறைவடைய உள்ள நிலையில்,

பொள்ளாச்சி:பொள்ளாச்சி தேர்தல் நடத்தும் அலுவலர் உத்தரவால், டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மது விற்பனை செய்வது குறைந்துள்ளது.பொள்ளாச்சி தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில், டாஸ்மாக் மது விற்பனை கடைகள் செயல்படுகின்றன. இக்கடைகளில், மதுபாட்டில்கள் வாங்குபவர்களுக்கு பில் வழங்கப்படுவதில்லை.இந்நிலையில், தேர்தல் அறிவிக்கப்பட்டு, பிரசாரம் நிறைவடைய உள்ள நிலையில், கட்சியினர் மொத்தமாக மதுபாட்டில்களை கொள்முதல் செய்து வருகின்றனர்.இதுகுறித்து, சுயேச்சை வேட்பாளர் முத்துக்குமாரசாமி, பொள்ளாச்சி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் புகார் கொடுத்தார்.மனுவில், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக, மொத்தமாக மதுபாட்டில்கள் கொள்முதல் செய்யப்படுகிறது. இதை தடுக்க, மதுபாட்டில் கொள்முதல் செய்யும் நபரின், ஆதார் அட்டை நகலை பெற்று, தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என, வலியுறுத்தியிருந்தார்.மனுவை பரிசீலித்த தேர்தல் அதிகாரி வைத்திநாதன், இதுகுறித்து விரிவான விசாரணை மேற்கொண்டு, எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, கலால்துறை துணை ஆணையர் மற்றும் பொள்ளாச்சி கோட்ட கலால் அலுவலர் ஆகியோருக்கு உத்தரவிட்டார்.உத்தரவை தொடர்ந்து, டாஸ்மாக் கடைகளில், மொத்தமாக மது விற்பனை செய்வது குறைந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X