சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கிருஷ்ணா குளம் ரோட்டில் திடீர் வெள்ளப்பெருக்கு

Added : ஏப் 03, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி, ஜமீன் ஊத்துக்குளி கிருஷ்ணாகுளம் ரோட்டில், நேற்று முன்தினம் (1ம் தேதி) மாலை, 6:00 மணியளவில், வந்த வாகன ஓட்டுனர்கள், ரோட்டில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.கொளுத்தும் கோடை வெயில் காலத்தில், ஒரு துளி மழைகூட இல்லாத நிலையில், எப்படி வெள்ளம் வந்தது எனத் தெரியாமல் அலைமோதினர். தட்டுத்தடுமாறி வாகனங்களை இயங்கி, பாலக்காடு ரோட்டை
 கிருஷ்ணா குளம் ரோட்டில் திடீர் வெள்ளப்பெருக்கு

பொள்ளாச்சி:பொள்ளாச்சி, ஜமீன் ஊத்துக்குளி கிருஷ்ணாகுளம் ரோட்டில், நேற்று முன்தினம் (1ம் தேதி) மாலை, 6:00 மணியளவில், வந்த வாகன ஓட்டுனர்கள், ரோட்டில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.கொளுத்தும் கோடை வெயில் காலத்தில், ஒரு துளி மழைகூட இல்லாத நிலையில், எப்படி வெள்ளம் வந்தது எனத் தெரியாமல் அலைமோதினர். தட்டுத்தடுமாறி வாகனங்களை இயங்கி, பாலக்காடு ரோட்டை அடைந்தனர்.அப்போது தான், பாலக்காடு ரோடு அருகே, ரோட்டோரம் நிலத்தடியில் கொண்டு செல்லப்படும் பிரதான குடிநீர் குழாயில் உடைப்பெடுத்ததால், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது தெரிய வந்தது.குழாய் உடைந்த இடத்தில் இருந்து, பல்லாயிரம் லிட்டர் தண்ணீர், வெளியேறி ரோடு முழுக்க ஓடியது. இதனால், போக்குவரத்து பாதிப்பு மற்றும் குடிநீர் வீணாவது கண்டு, குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுக்கு தகவல் அளித்தனர்.அவர்களோ, 'அது, குறிச்சி - குனியமுத்துார் கூட்டு குடிநீர் திட்ட குழாய். சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வந்து சரி செய்வார்கள்,' என்றனர்.அதன் பிறகும், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தண்ணீர் வெளியேறி வீணானது கண்டு மக்கள் அதிருப்தியடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X