பொது செய்தி

தமிழ்நாடு

பிளாஸ்டிக் கழிவுகளால் பாதிப்பு: நகரில் விழிப்புணர்வு அவசியம்

Added : ஏப் 03, 2021
Share
Advertisement
உடுமலை;உடுமலை நகரப்பகுதியில் வளர்க்கப்படும் கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலங்கள் கிடையாது. இறைச்சிக்காக வளர்க்கப்படும் ஆடுகள் மற்றும் பால் உற்பத்திக்காக பராமரிக்கப்படும் மாடுகள் சுதந்திரமாக ரோட்டில் விடப்படுகின்றன.குடியிருப்புகளில், வீசப்படும் குப்பைகளிலும், அவை தீவனத்தை தேடும் அவலம் காணப்படுகிறது. பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கு அரசு தடைவிதித்து

உடுமலை;உடுமலை நகரப்பகுதியில் வளர்க்கப்படும் கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலங்கள் கிடையாது. இறைச்சிக்காக வளர்க்கப்படும் ஆடுகள் மற்றும் பால் உற்பத்திக்காக பராமரிக்கப்படும் மாடுகள் சுதந்திரமாக ரோட்டில் விடப்படுகின்றன.குடியிருப்புகளில், வீசப்படும் குப்பைகளிலும், அவை தீவனத்தை தேடும் அவலம் காணப்படுகிறது. பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கு அரசு தடைவிதித்து கண்காணிக்கிறது. இருப்பினும், நகரின் சில பகுதிகளில் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த பிளாஸ்டிக் பொருட்களை திறந்தவெளியில் வீசியெறிகின்றனர். சில நேரங்களில், குப்பைகளில், தீவனத்தை தேடும், கால்நடைகள் பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பொருட்களையும், தெரியாமல் உண்கின்றன.இத்தகைய பொருட்கள் கால்நடைகளின் இரைப்பையில் தேங்கி உயிரிழப்பை ஏற்படுத்துகின்றன. எனவே, நகராட்சி நிர்வாகத்தினர், ரோடுகளில், கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுபவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X