அரசியல் செய்தி

தமிழ்நாடு

மாற்றத்துக்கான தேர்வு நானாக உள்ளேன்! சிலிர்க்கிறார் உடுமலை ம.நீ.ம., வேட்பாளர் ஸ்ரீ நிதி

Added : ஏப் 03, 2021
Share
Advertisement
''மக்கள் மாற்றத்தையும், நேர்மையையும், நல்ல வேட்பாளரையும் விரும்புகின்றனர். அதற்கான தேர்வு, நானாக உள்ளேன்,'' என, உடுமலை மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஸ்ரீநிதி தெரிவித்தார்.உடுமலை தொகுதியை தேர்வு செய்தது ஏன்?சொந்த ஊர் உடுமலை; எனது பாட்டி, ஜனகவள்ளி, 1950களிலேயே, பிரபலமான பெண் டாக்டர். தாத்தா, நரசிம்மன், பிரபல வக்கீலாக இருந்தார். தாய், தந்தை அரசு டாக்டர்கள். நான்
 மாற்றத்துக்கான தேர்வு நானாக உள்ளேன்! சிலிர்க்கிறார் உடுமலை ம.நீ.ம., வேட்பாளர் ஸ்ரீ நிதி

''மக்கள் மாற்றத்தையும், நேர்மையையும், நல்ல வேட்பாளரையும் விரும்புகின்றனர். அதற்கான தேர்வு, நானாக உள்ளேன்,'' என, உடுமலை மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஸ்ரீநிதி தெரிவித்தார்.உடுமலை தொகுதியை தேர்வு செய்தது ஏன்?சொந்த ஊர் உடுமலை; எனது பாட்டி, ஜனகவள்ளி, 1950களிலேயே, பிரபலமான பெண் டாக்டர். தாத்தா, நரசிம்மன், பிரபல வக்கீலாக இருந்தார். தாய், தந்தை அரசு டாக்டர்கள். நான் இன்ஜினியரிங் படித்து, அமெரிக்கா, லண்டனில் பணியாற்றினேன். 96 வயதான எனது பாட்டி, தாய் நாட்டிற்கும், பிறந்த ஊருக்கும் ஏதாவது நல்லது செய், என்றார். அதன் அடிப்படையில் போட்டியிடுகிறேன்.அரசியல் அனுபவம் உள்ளதா?சமூக சேவையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறேன். சமூக பணிக்கு அரசியல் இடையூறு இருந்ததால், அரசு அமைப்பு, அதிகாரம் இருந்தால் சரியாக இருக்கும் என, எம்.எல்.ஏ., பதவிக்கு போட்டியிடுகிறேன்.ம.நீ.ம.,வை தேர்வு செய்தது ஏன்?மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். நேர்மை, ஒழுக்கம், ஊழல் செய்யாத மக்கள் பணி ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது. அதனால், இணைந்தேன். அ.தி.மு.க., -தி.மு.க., மத்தியில், போட்டியிடுவதில் தயக்கம் இல்லையா?இரு கட்சிகளும் ஆட்சி செய்து, மக்களை தொடர்ந்து ஏமாற்றி வருகின்றனர். ஊழல் செய்வதிலும் குறிக்கோளாக உள்ளனர். பணம் கொடுத்து ஓட்டை விலைக்கு வாங்கும் செயலில், ஆளும்கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். பணம் பெற்றாலும், எனக்கு ஓட்டு போடுவதாக மக்கள் உறுதியளிக்கின்றனர். மக்கள் மாற்றத்தையும், நேர்மையையும், நல்ல வேட்பாளரையும் விரும்புகின்றனர்; அதற்கான தேர்வு, நானாக உள்ளேன்.பிரசாரத்தில் வரவேற்பு எப்படி உள்ளது?பெண்களுக்கு முறையான கழிப்பிடம் இல்லை. ரோடுகளில் சாக்கடை கழிவு நீர் தேங்குகிறது. குடிநீர், ரோடு என அடிப்படை வசதிகள் இல்லை. கிராம பெண்கள், வரவேற்று, கோரிக்கைகளை கூறுகின்றனர். சட்ட விரோத, குற்றச்செயல்கள் அதிகளவு நடக்கிறது. இதற்கு தீர்வு காண வலியுறுத்துகின்றனர்.வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?ஆளும்கட்சியினர் மீது கடும் அதிருப்தி உள்ளது. நகரம் மட்டுமன்றி, கிராமங்களில் மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். புதிய வாக்காளர்கள் ஆதரவு எனக்கு உள்ளது. அ.தி.மு.க., வேட்பாளரான அமைச்சர் ராதாகிருஷ்ணன், கடந்த தேர்தலில், மயிரிழையிலேயே வெற்றி பெற்றார். அருக்கு போட்டியாக, தற்போது நான் மட்டுமே களத்தில் உள்ளேன். ஐந்து முனை போட்டி உள்ளதால், ம.நீ.ம.,வுக்கு வெற்றி உறுதி.உடுமலை தொகுதிக்கான தேர்தல் வாக்குறுதி ?வேட்பாளர்கள், 15 ஆண்டுகளில் கொடுத்த வாக்குறுதிகளில் 20 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை. நான் வெற்றி பெற்றால், கிராமம் தோறும் ம.நீ.ம., குறை தீர்ப்பு மையம், கிராமம் தோறும் ஆம்புலன்ஸ் வசதி என, முன் மாதிரி கிராமங்களாக மாற்றப்படும்.விவசாய விளை பொருட்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி விற்பனை செய்வதற்காக பயிற்சி, குழந்தைகளுக்கு சிறப்பான கல்வி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.எம்.எல்.ஏ., தொகுதி வளர்ச்சி நிதியில், ஊழலின்றி செலவிடப்படும். எம்.எல்.ஏ., மாத ஊதியமான, ஒரு லட்சத்து, 5 ஆயிரம் ரூபாயில், 75 சதவீதம் மக்களுக்கு செலவிடப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X