இளைஞர்களுக்கு மைதானம் அமைக்கப்படும் பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம் வாக்குறுதி| Dinamalar

இளைஞர்களுக்கு மைதானம் அமைக்கப்படும் பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம் வாக்குறுதி

Added : ஏப் 03, 2021
Share
திருக்கனுார் : மண்ணாடிப்பட்டு கிராமத்தில் பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம் வீடு வீடாக சென்று தாமரை சின்னத்திற்கு ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். மண்ணாடிப்பட்டு தொகுதி பா.ஜ.,வேட்பாளர் நமச்சிவாயம் மண்ணாடிப்பட்டு கிராமத்தில் காளியம்மன் கோவிலில்தரிசனம் செய்து,வீடு வீடாக சென்று தாமரை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.அப்போது அவர் கூறுகையில், தேர்தலில் வெற்றி பெற்றதும்,

திருக்கனுார் : மண்ணாடிப்பட்டு கிராமத்தில் பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம் வீடு வீடாக சென்று தாமரை சின்னத்திற்கு ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மண்ணாடிப்பட்டு தொகுதி பா.ஜ.,வேட்பாளர் நமச்சிவாயம் மண்ணாடிப்பட்டு கிராமத்தில் காளியம்மன் கோவிலில்தரிசனம் செய்து,வீடு வீடாக சென்று தாமரை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.அப்போது அவர் கூறுகையில், தேர்தலில் வெற்றி பெற்றதும், கிராமத்திற்கான அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்படும். இளைஞர்களுக்கான விளையாட்டு மைதானம், பூங்கா அமைக்கப்படும்.அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மேம்படுத்தப்படும். வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். சுய தொழில் துவங்குபவர் களுக்கு கடனுதவி ஏற்படுத்தி தரப்படும், என்றார்.

பா.ஜ., பிரமுகர்கள் முத்தழகன், வீரராகவன், தமிழ்மணி, பிரபு, செல்வக்குமார், வழக்கறிஞர் ஹரிகரன், கூட்டணி கட்சி நிர்வாகிகள் மகாதேவி, சிவக்குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.திருக்கனுார், செட்டிப்பட்டு பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மகளிர் சுய உதவி குழுவினரிடம் பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம் ஆதரவு திரட்டினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X