வேலை வாய்ப்பு பெற எனக்கு ஆதரவளியுங்கள்

Added : ஏப் 03, 2021
Share
Advertisement
புதுச்சேரி : இளைஞர்கள் வேலை வாய்ப்பை பெற காஸ் சிலிண்டர் சின்னத்திற்கு ஓட்டளிக்க வேண்டும் என உழவர்கரை தொகுதி சுயேட்சை வேட்பாளர் சிவசங்கரன் பேசினார். உழவர்கரை தொகுதியில் காஸ் சிலிண்டர் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிடும் புதுச்சேரி வணிகர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சிவசங்கர் நேற்று ஜெயா நகர், பெருமாள் ராஜா தோட்டம், அஜிஸ் நகர், ஜான்குமார் நகர் பகுதிகளில்

புதுச்சேரி : இளைஞர்கள் வேலை வாய்ப்பை பெற காஸ் சிலிண்டர் சின்னத்திற்கு ஓட்டளிக்க வேண்டும் என உழவர்கரை தொகுதி சுயேட்சை வேட்பாளர் சிவசங்கரன் பேசினார்.

உழவர்கரை தொகுதியில் காஸ் சிலிண்டர் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிடும் புதுச்சேரி வணிகர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சிவசங்கர் நேற்று ஜெயா நகர், பெருமாள் ராஜா தோட்டம், அஜிஸ் நகர், ஜான்குமார் நகர் பகுதிகளில் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தார்.அப்போது அவர் பேசியதாவது:உழவர்கரை தொகுதியில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கனவாகவும், எட்டாக் கனியாக உள்ளது. படித்த இளைஞர்கள் குறைந்த சம்பளத்தில் வெளியூர்களில் வேலை செய்கின்றனர்.
தொகுதியில் 8,000 இளைஞர்கள் வேலையின்றி உள்ளனர். அவர்களுக்கு கேம்பஸ் இண்டர்வியூ மூலம் வேலை வாய்ப்பை உருவாக்குவேன். இதன் மூலம் ரூ. 8,000 சம்பளம் முதல் தனியார் நிறுவனங்களில் வேலை கிடைக்கும். தொகுதி இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற எனக்கு காஸ் சிலிண்டர் சின்னத்திற்கு ஓட்டளிக்க வேண்டும். ஒருமுறை வாய்ப்பு கொடுத்தால், மாநிலத்தின் முன்னணி வளர்ச்சி தொகுதியாக உழவர்கரையை மாற்றிகாட்டுவேன். பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகளின்றி உள்ள அனைத்து பகுதிகளும் சரி செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X