புதுச்சேரி : காமராஜ் நகர் பா.ஜ.,வேட்பாளர் ஜான்குமாரை ஆதரித்து மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம்மேக்வால், முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் திறந்த வேனில் பிரசாரம் செய்தனர்.
காமராஜ் நகர் தொகுதியில் 45 அடி ரோடு வெங்கட்டா நகர் சந்திப்பில் திறந்த வேனில் முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் பேசுகையில், புதுச்சேரி மாநிலம் வளம் பெற, நல்லாட்சி மலர, அனைத்து திட்டங்களும் மக்களுக்கு கிடைக்க தாமரை சின்னத்திற்கு மக்கள் ஓட்டளிக்க வேண்டும். மக்களுக்காக இரவு, பகல் என பாராமல் உழைக்க கூடியவர் ஜான்குமார். மத்தியில் இருப்பது போல் மாநிலத்திலும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி வர வேண்டும். அப்படி வந்தால் மத்திய அரசிடமிருந்து தேவையான நிதி கிடைத்து புதுச்சேரி வளர்ச்சி பெறும். தடைப்பட்ட அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படும், என்றார்.
பின், பா.ஜ.,வேட்பாளர் ஜான்குமார் காமராஜ் நகரின் பல்வேறு பகுதிகளில் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், மாநிலத்திற்கு சொந்த நிதி வருவாய் இல்லாத நிலையில், புதுச்சேரியில் தாமரை மலர்ந்தால் மட்டுமே வளர்ச்சி பெறும். மத்திய அரசு புதுச்சேரிக்கு பல திட்டங்களை வகுத்து கொடுத்துள்ளது. இந்த திட்டங்கள் அனைத்தையும் காமராஜ் நகர் தொகுதிக்கு கொண்டு வந்து செயல்படுத்துவேன், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE