பொய் வாக்குறுதிகளை பா.ஜ., வீசுகிறது காங்., வேட்பாளர் வைத்தியநாதன் பேச்சு| Dinamalar

பொய் வாக்குறுதிகளை பா.ஜ., வீசுகிறது காங்., வேட்பாளர் வைத்தியநாதன் பேச்சு

Added : ஏப் 03, 2021
Share
புதுச்சேரி : லாஸ்பேட்டையில் பா.ஜ., பொய் வாக்குறுதிகளை வீசி வருகிறது என காங்., வேட்பாளர் வைத்தியநாதன் கூறினார். லாஸ்பேட்டை காங்., வேட்பாளர் வைத்தியநாதன், கூட்டணி கட்சியினர், கமலா அறக் கட்டளை முதன்மை செயலர் ரமா வைத்தியநாதன் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு பெண்களுடன் தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தை முடித்துள்ளார். நேற்று விடுபட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று ஓட்டு

புதுச்சேரி : லாஸ்பேட்டையில் பா.ஜ., பொய் வாக்குறுதிகளை வீசி வருகிறது என காங்., வேட்பாளர் வைத்தியநாதன் கூறினார்.

லாஸ்பேட்டை காங்., வேட்பாளர் வைத்தியநாதன், கூட்டணி கட்சியினர், கமலா அறக் கட்டளை முதன்மை செயலர் ரமா வைத்தியநாதன் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு பெண்களுடன் தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தை முடித்துள்ளார். நேற்று விடுபட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தார்.அப்போது, அவர் பேசுகையில்; எம்.எல்.ஏ., பதவி இருந்தால், மேலும் சிறப்பான பணி புரிய முடியும் என்பதால், போட்டியிடுகிறேன்.

மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே ஆட்சி இருந்தால், புதுச்சேரி ஒளிரும் என கூறுவது மிகப் பெரிய பொய்.மழை, புயல் போன்ற இயற்கை பேரிடர் காலத்தில் மத்தியில் இருந்து எவ்வளவு நிதியை பா.ஜ., நியமன எம்.எல்.ஏ.க்கள் பெற்று தந்தனர். கொரோனா காலத்தில் வேலையின்றி இருந்த மக்களுக்கு மத்திய அரசில் இருந்து நிதி பெற்றுத் தந்தார்களா.லாஸ்பேட்டை தொகுதியில் இலவச மனைப்பட்டா கொடுக்க இடம் தற்போது இல்லை. ஆனால், வெற்றி பெற்றால் இலவச மனைப்பட்டா பெற்று தருவேன் என பொய் வாக்குறுதி அளிக்கின்றனர். தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களை சந்திக்கும் பா.ஜ., வேட்பாளர் சாமிநாதன், என்னை கட்சி மாறியதாக கூறுவது வேடிக்கையாக உள்ளது என கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X