சங்கராபுரம் : உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ 2.45 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சங்கராபுரம் சட்ட சபை தொகுதியை சேர்ந்த நிலை கண்காணிப்புக் குழு அலுவலர் ராஜசேகரன் தலைமையில் சின்னசேலம் ரயில்வே கேட் அருகில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த நான்கு சக்கர வாகனத்தில் வந்த வேதநாயகபுரத்தை சேர்ந்த மங்கப்பன் மகன் மாணிக்கம் என்பவரிடம் உரிய ஆவணமின்றி வைத்திருந்த ரூ.76,640 ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்து சங்கராபுரம் சட்ட சபை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜவேலிடம் ஒப்படைத்தனர்.மேலும் சங்கராபுரம் சட்டசபை தொகுதியை சேர்ந்த பறக்கும் படை அலுவலர் பிரபு தலைமையில் சின்னசேலத்தில் வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியில் வந்த தோட்டப்பாடி கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன்கள் குமார், முருகன் ஆகியோரிடம் எவ்வித ஆதாரமுமின்றி வைத்திருந்த ரூ.1.70 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து, சங்கராபுரம் சட்டசபை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE