சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊசி மலையில் பரவிய காட்டு தீ: விடிய, விடிய போராடிய வனத்துறையினர்

Added : ஏப் 03, 2021
Share
Advertisement
பந்தலுார்:பந்தலுார் அருகே, ஊசிமலையில் பரவிய காட்டு தீயை வனத்துறையினர் விடிய,விடிய அணைத்தனர்.பந்தலுார் அருகே, கரிய சோலை பகுதியில் ஊசிமலை அமைந்துள்ளது. அப்பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தை ஒட்டிய மலையில் புற்கள் நிறைந்து காணப்படுகிறது. நேற்று முன்தினம் பாடந்தொரை வனப்பகுதியில் எரியதுவங்கிய காட்டுத்தீ ஊசிமலையில் பரவியது. தொடர்ந்து, பிதர்காடு வனச்சரகர்
 ஊசி மலையில் பரவிய காட்டு தீ: விடிய, விடிய போராடிய வனத்துறையினர்

பந்தலுார்:பந்தலுார் அருகே, ஊசிமலையில் பரவிய காட்டு தீயை வனத்துறையினர் விடிய,விடிய அணைத்தனர்.பந்தலுார் அருகே, கரிய சோலை பகுதியில் ஊசிமலை அமைந்துள்ளது. அப்பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தை ஒட்டிய மலையில் புற்கள் நிறைந்து காணப்படுகிறது. நேற்று முன்தினம் பாடந்தொரை வனப்பகுதியில் எரியதுவங்கிய காட்டுத்தீ ஊசிமலையில் பரவியது. தொடர்ந்து, பிதர்காடு வனச்சரகர் மனோகரன் தலைமையில், வனவர்கள் பரமேஸ்வரன், ஜார்ஜ் பிரவின்சன் மற்றும், 40 க்கும் மேற்பட்ட வனத்துறையினர் விடிய, விடிய போராடி தீயை அணைத்தனர். அதில், பெரும்பாலான புல்வெளிகள் எரிந்து நாசம் அடைந்தது.மேலும், 'இந்த வனப்பகுதியில் பறவைகள் மற்றும் ஊர்வன உள்ளிட்ட சிறிய வனவிலங்குகள் அதிக அளவில் அழிந்திருக்கக் கூடும்,' என, வனத்துறையினர் தெரிவித்தனர். தொடர்ந்து, வனத்துறையினர் முகாமிட்டு காட்டு தீ ஏற்படாமல் கண்காணித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X