பாகூர் : பாகூர் தொகுதி தி.மு.க., வேட்பாளர் செந்தில் குமார் நேற்று சோரியாங்குப்பம் பகுதியில் வீடு வீடாகச் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.அந்த பகுதி மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது அவர் பேசுகையில், சோரியாங்குப்பத்தில் விவசாயத்தையும், அது சார்புடைய தொழில்கள், நீர் வளத்தை பாதுகாத்து மேம்படுத்துதல் போன்ற முக்கியமான கோரிக்கையாக உள்ளது.நிச்சயமாக விவசாயிகளின் கோரிக்கைகள், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வேன். இப்பகுதி பெண்கள், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். வடிகால், சாலை வசதிகள் சரிசெய்யப்படும்.சோரியாங்குப்பம் தென்பெண்ணையாற்றில் உள்ள சுடுகாட்டிற்கு இணைப்பு பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புதுச்சேரியின் எல்லை பகுதியான சோரியாங்குப்பம் கிராமம் வளர்ச்சி பெற்று பொருளாதார ரீதியாக உயர்த்த பாடுபடுவேன். எனவே, எனக்கு உதய சூரியன் சின்னத்தில் ஓட்டளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும், என்றார். காங்., -தி.மு.க., கூட்டணி கட்சி நிர்வாகிகள், ஆதரவாளர்கள் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE