பள்ளிவாசலுக்கு காங்கிரீட் தளம் அமைப்பேன் என்.ஆர்.காங்., தேனீ ஜெயக்குமார் உறுதி

Added : ஏப் 03, 2021
Share
Advertisement
வில்லியனுார் : மங்கலம் தொகுதிஎன்.ஆர்.காங்., வேட்பாளர் தேனீ ஜெயக்குமார் அரியூர் முகம்மதிய்யா பள்ளி வாசலுக்கு சென்று ஜக்கு சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார். தொழுகை முடிந்து வெளியே வந்த இஸ்லாமிய சகோதரர்களிடம் ஓட்டு சேகரித்து அவர் பேசியதாவது:நான் வெற்றி பெற்று வந்ததும் அரியூரில் சிமெண்ட் ஷீட்டினால் உள்ள முகம்மதிய்யா பள்ளிவாசல், நவீன வசதிகளுடன் கூடிய காங்கிரீட்

வில்லியனுார் : மங்கலம் தொகுதிஎன்.ஆர்.காங்., வேட்பாளர் தேனீ ஜெயக்குமார் அரியூர் முகம்மதிய்யா பள்ளி வாசலுக்கு சென்று ஜக்கு சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.

தொழுகை முடிந்து வெளியே வந்த இஸ்லாமிய சகோதரர்களிடம் ஓட்டு சேகரித்து அவர் பேசியதாவது:நான் வெற்றி பெற்று வந்ததும் அரியூரில் சிமெண்ட் ஷீட்டினால் உள்ள முகம்மதிய்யா பள்ளிவாசல், நவீன வசதிகளுடன் கூடிய காங்கிரீட் தளமாக மாற்றி கொடுப்பேன்.இஸ்லாமிய பொது மக்களின் சுடுகாடு பகுதி மேம்படுத்தி சாலை மற்றும் மின் விளக்கு வசதி ஏற்படுத்தி கொடுப்பேன்.அரசு நலத்திட்டங்களை பெற்று ஏழை சிறுபான்மை யினருக்கு இலவச மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பேன்.

இஸ்லாமிய சகோதரர்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி கொடுப்பேன். அரியூர் மற்றும் சுற்றியுள்ள புதிய நகர் பகுதியில் சாலைகள் சீரமைத்து, கழிவுநீர் வாய்க்கால் வசதியுடன் சிமெண்ட் சாலை அமைப்பேன். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தடையில்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.வேட்பாளர் தேனீ ஜெயக்குமாருக்கு முகம்மதியா பள்ளிவாசல் ஜமாத் நிர்வாகிகள் அபுபக்கர், சையத் முகமது, தமீன் அன்சாரி, அப்துல் ஹாமீத், கம்மூர்தீன் உட்பட பலர் சால்வை அணிவித்தனர். என்.ஆர்.காங்., தெற்கு மாவட்ட தலைவர் பாலமுருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X