ஊட்டி;'தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி தேர்தல் நுண் பார்வையாளர்கள் நடுநிலையோடு பணியாற்றிட வேண்டும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.ஊட்டி கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில், பதற்றமான ஓட்டு சாவடிகளாக கண்டறியபட்ட, 112 ஓட்டுசாவடி மையங்களில் தேர்தல் நுண் பார்வையாளர்களாக பணியாற்ற உள்ளவர்களுக்கான பயிற்சி வகுப்பு நடந்தது.மாவட்ட தேர்தல் அலுவலர் இன்னசென்ட் திவ்யா தலைமை வகித்தார். தேர்தல் பொது பார்வையாளர் ராகுல் திவாரி முன்னிலை வகித்தார். மாவட்ட தேர்தல் அலுவலர் இன்னசென்ட் திவ்யா பேசியதாவது:தேர்தலில் வாக்காளர்கள் எவ்வித அச்சமின்றி, நியாயமாக, நேர்மையாக, சுதந்திரமாக ஓட்டளித்திட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மூன்று தொகுதிகளில், 868 ஓட்டுசாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 112 ஓட்டுசாவடிகள் பதற்றமான ஓட்டுசாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளது.இந்த ஓட்டுசாவடிகளில் மத்திய அரசு பணியில் உள்ள ஒரு அலுவலர் நுண் பார்வையாளராக நியமிக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படுகிறது.தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி நடுநிலையோடு பணியாற்றிட வேண்டும். மாதிரி ஓட்டுப்பதிவு தொடங்குவதற்கு, 6 மணிக்கு முன்பாக ஓட்டுசாவடி மையங்களில் இருக்க வேண்டும், ஓட்டுப்பதிவின் போது தேர்தல் அலுவலர்கள் தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டு நேர்மையாக நடந்து கொள்கிறார்களா என்பதனை பார்வையிட வேண்டும். இவ்வாறு, இன்னசென்ட் திவ்யா கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE