புதுச்சேரி : நெல்லித்தோப்பு தொகுதி பா.ஜ., வேட்பாளர் ரிச்சர்ட்ஸ் ஜான்குமாரை ஆதரித்து மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம்மேக்வால், முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், முன்னாள் எம்.எல்.ஏ., ஜான்குமார் பிரசாரம் செய்தனர்.
நெல்லித்தோப்பு பா.ஜ., வேட்பாளர் ரிச்சர்ட்ஸ் ஜான்குமாரை ஆதரித்து மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், காமராஜ் நகர் பா.ஜ.,வேட்பாளர் ஜான்குமார் திறந்த வேனில் பிரசாரம் செய்தனர்.பின், கூட்டணி கட்சியினருடன் ஓட்டு சேகரித்த பா.ஜ., வேட்பாளர் ரிச்சர்ட்ஸ் ஜான் குமார் பேசியதாவது:தொகுதியில் படித்து விட்டு வேலையின்றி உள்ள இளைஞர்களுக்கு அரசு வேலை மட்டுமின்றி, தனியார் துறைகளிலும், வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சாலை, குடிநீர், பாதாள சாக்கடை, கழிவு நீர் உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஏற்படுத்தி கொடுப்பேன்.புதுச்சேரி மாநிலத்திற்கு மத்திய அரசு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் அனைத்தும் தொகுதி மக்களுக்கு பெற்று தருவேன். தொகுதி மக்கள் என்னை எப்போதும் எளிதாக சந்தித்து குறைகளை தெரிவிக்கலாம். ஆகையால் தாமரை சின்னத்திற்கு ஓட்டளித்து என்னை வெற்றிப் பெற செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE