சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விக்கிரவாண்டியில் ரூ.10.77 லட்சம் பறிமுதல்

Added : ஏப் 03, 2021
Share
Advertisement
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே இரு நபர்கள் ஆவணமின்றி கொண்டு வந்த ரூ. 10 லட்சத்து 77 ஆயிரத்து 500 ஐ தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் பறக்கும் படை அலுவலர் கோதண்டபாணி தலைமையிலான குழுவினர் நேற்று காலை வி.சாலையில் வாகன சோதனை மேற்கொண்டனர்.அப்போது, அவ்வழியே வந்த டிஎன்.21.பிஜே.1707 பதிவெண் கொண்ட இனோவா காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில்,

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே இரு நபர்கள் ஆவணமின்றி கொண்டு வந்த ரூ. 10 லட்சத்து 77 ஆயிரத்து 500 ஐ தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் பறக்கும் படை அலுவலர் கோதண்டபாணி தலைமையிலான குழுவினர் நேற்று காலை வி.சாலையில் வாகன சோதனை மேற்கொண்டனர்.அப்போது, அவ்வழியே வந்த டிஎன்.21.பிஜே.1707 பதிவெண் கொண்ட இனோவா காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த பாலசுப்ரமணியன் ஆவணமின்றி ரூ.10 லட்சத்தை விருத்தாசலத்திற்கு கொண்டு செல்வது தெரிய வந்தது.தகவலறிந்த சென்னை வருமான வரித்துறை துணை ஆணையர் கமலாதேவி தலைமையிலான குழுவினர் விரைந்த வந்து, பாலசுப்ரமணியன் கொண்டு வந்த ரூ.10 லட்சத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதேபோன்று நேமூர் கூட்ரோட்டில் நடந்த வாகன சோதனையில், செஞ்சி அடுத்த நகனுாரை சேர்ந்த குமார்,51 என்பவர் பைக்கில் ஆவணமின்றி கொண்டு வந்த ரூ. 77, 500யை பறிமுதல் செய்து, தொகுதி தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X